அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே.
சொல்லிலும்,செயலிலும் இஸ்லாத்தைக் கலப்போம்.
சமூக உறவில் சகோதரத்துவத்தை வளர்ப்போம்.
”யார் தனக்கேற்பட்ட வறுமையை மக்களிடம் கொண்டு செல்கிறாரோ அவரது வறுமை
நீங்கி விடுவதில்லை. எவர் அதை அல்லாஹ்விடம் கொண்டு செல்கிறாரோ உடனடியாகவோ,
சிறிது காலம் கழித்தோ அவருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கக் கூடும்”
என நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர். இப்னு மஸ்வூது(ரலி)
நூல்.அபூதாவூத், திர்மிதீ
ஆதமுடைய மகன் ”என்னுடையது என்னுடையது” என்கிறான் ஆதமுடைய மகனே! நீங்கள்
உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் பிறருக்குக் கொடுத்ததையும்
தவிர வேறு எது உன்னுடையது?
என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்.அப்துல்லாஹ் இப்னுஷ்ஷிக்கிர்(ரலி),
நூல்.முஸ்லிம்
"செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது"(அல்குர்ஆன்.102:1)
"அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது)".(அல்குர்ஆன்.102:5)
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு
இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை
மண்ணை (-மரணத்தை)த் தவிர வேறேதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற
பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின்
கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்.அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல்.புஹாரி: 6439
பசியுள்ள இரண்டு ஓநாய்களை ஆட்டு மந்தையில் விட்டுவிடின் அவை எத்தணை
குழப்பத்தை உண்டுபண்ணி விடுமோ,அத்துணை குழப்பத்தை ஒரு மனிதனுடைய
பொருளாசையும் பதவி மோகமும் அவனுடைய மார்க்கத்தில் உண்டுபண்ணிவிடும் என்று
நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: கஃபுப்னு மாலிக் (ரலி)
நூல்:திர்மிதீ
ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல
வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி,
அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது
ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது'
நேர்மையான வகையில் மனிதன் ஒரு பொருளைப் பெற நினைத்தால், அதை "ஆசை' எனக்
கூறலாம். அப்பொருள் அவனுக்குக் கிடைக்காவிடில், அதற்காக அவன் கவலை
கொள்ளலாகாது. ஒருவன் ஆசைப்பட்ட பொருள் கிடைத்துவிட்டாலோ, அதற்காக
தற்பெருமையோ, கர்வமோ அடையாது இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியது ஒவ்வொரு
மனிதனின் கடமையுமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து,
நபித் தோழராகிய வியாபாரி ஒருவர், நாயகமே! இன்று நடந்த எனது வியாபாரத்தில்
கிடைத்த லாபம் போல் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை'' என்று மிக்க
பெருமிதத்துடன் கூறினார்.
அப்படியா! உங்களுக்கு சுமார் எவ்வளவு லாபம் கிடைத்தது. எனக் கேட்டார்கள், நபித் தோழர், முன்னூறு வெள்ளிக்காசுகள்' என்றார்.
உடனே நபி(ஸல்)அவர்கள், இதைவிட அதிக லாபம் தரும் ஒன்றினை நான் உங்களுக்கு
சொல்லித் தரட்டுமா? எனக் கூறி,மேலும் ஒரு அறிவுரையை அவரிடம் கூறினார்கள்.
"பர்லு (கட்டாய) தொழுகை தொழுத பின் 2 ரக்அத் (தொழாத நிலையில் நின்று ஓதி,
குனிந்து இருமுறை நெற்றியை தரையில் படும்படி வணங்குதல்) தொழுதபின் நஃபில்
(கடமையாக வணங்குதளைக் காட்டிலும் அதிகமாக வணங்குவது) தொடர்ந்து தொழுது
வாருங்கள்'' என நபிகளார் கூறினார்கள்.
உலகத்தின் இலாபம் (பொருள்)
ஒரு மனிதனின் உள்ளத்தில் பதிந்து, முதலில் ஆசை ஏற்பட்டு, பிறகு அது
பேராசையாக உருமாறி விடக் கூடாது என்பதற்காகவும், மறுமை வாழ்வை மறந்து இம்மை
வாழ் வில் (உலக இன்பத்தில்) மூழ்கி விடாது மறுமைக்கான தயாரிப்பில் ஈடுபட
வேண்டும் என்பதற்காகவும் நபித் தோழரின் எண்ணத்தை - ஆசையை திசை
திருப்பிவிட்டார்கள் நபிகளார்.
"உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்." (அல்குர்ஆன் 67:2)
"ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின்
நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் எவர் இவ்வாறு
செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்." (அல்குர்ஆன் 63:9)
இவ்வளவு தெளிவாகச் சொல்லப்பட்டும் ஷைத்தான் மனிதனுக்கு பொருள்
செல்வத்திலும் மக்கள் செல்வத்திலும் மயக்கத்தைக் கொடுத்து அவனை வழி தவறச்
செல்கிறான். ஆனால் இந்த பொருட்செல்வமும் மக்கள் செல்வமும் மறுமையில்
உதவிடப்போவதில்லை . உறுதியாக அல்லாஹ் எச்சரிக்கிறான்.
”அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா. “(அல்குர்ஆன் 63:9)
மேலே கூறப்பட்ட 5 குர்ஆன் வசங்களும்,5 நபியவர்களின் பொன் மொழிகளும் இந்த
இடத்தில், இந்த வினாடியில் நமக்குப் போதிக்கும் பொன்னான போதனைகள் தான்
மனிதன் கோலமாக் கோலம் என்று தனக்கு இறக்கை இருக்கக்கூடாதா? நானும் வானம்
வரை பறக்க வேண்டுமே! என்று தன்னையும்,தன் வாழ்க்கையையும் காலம் , நேரம்
ஓய்வில்லாமல் கழித்துக் கொண்டிருக்கிறான் பேரசையில்.. இதுதான் மேலே
சொல்லப்பட்ட அல்குர்ஆன்,அல் ஹதீஸின் விளக்கங்கள்.
இதுவே
போதுமானது!!!!!!!!!!!! யாரெல்லாம் இந்த நபிமொழியையும்,அல்குர்ஆன்
வசனத்தையும் கண்டும் காணாமலும் நமெக்கென்ன!!!!!!! அது இருக்கட்டும். நான்
நான்தான் என்று போதனையை உள்ளத்தில் உணர்த்தவில்லை என்றால். அதுவும் பேராசை
தான்.
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக்
கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக்
கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள்
புரிவானாக.
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (-மரணத்தை)த் தவிர வேறேதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்.அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல்.புஹாரி: 6439
பசியுள்ள இரண்டு ஓநாய்களை ஆட்டு மந்தையில் விட்டுவிடின் அவை எத்தணை குழப்பத்தை உண்டுபண்ணி விடுமோ,அத்துணை குழப்பத்தை ஒரு மனிதனுடைய பொருளாசையும் பதவி மோகமும் அவனுடைய மார்க்கத்தில் உண்டுபண்ணிவிடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: கஃபுப்னு மாலிக் (ரலி) நூல்:திர்மிதீ
ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது'
நேர்மையான வகையில் மனிதன் ஒரு பொருளைப் பெற நினைத்தால், அதை "ஆசை' எனக் கூறலாம். அப்பொருள் அவனுக்குக் கிடைக்காவிடில், அதற்காக அவன் கவலை கொள்ளலாகாது. ஒருவன் ஆசைப்பட்ட பொருள் கிடைத்துவிட்டாலோ, அதற்காக தற்பெருமையோ, கர்வமோ அடையாது இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையுமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து, நபித் தோழராகிய வியாபாரி ஒருவர், நாயகமே! இன்று நடந்த எனது வியாபாரத்தில் கிடைத்த லாபம் போல் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை'' என்று மிக்க பெருமிதத்துடன் கூறினார்.
அப்படியா! உங்களுக்கு சுமார் எவ்வளவு லாபம் கிடைத்தது. எனக் கேட்டார்கள், நபித் தோழர், முன்னூறு வெள்ளிக்காசுகள்' என்றார்.
உடனே நபி(ஸல்)அவர்கள், இதைவிட அதிக லாபம் தரும் ஒன்றினை நான் உங்களுக்கு சொல்லித் தரட்டுமா? எனக் கூறி,மேலும் ஒரு அறிவுரையை அவரிடம் கூறினார்கள்.
"பர்லு (கட்டாய) தொழுகை தொழுத பின் 2 ரக்அத் (தொழாத நிலையில் நின்று ஓதி, குனிந்து இருமுறை நெற்றியை தரையில் படும்படி வணங்குதல்) தொழுதபின் நஃபில் (கடமையாக வணங்குதளைக் காட்டிலும் அதிகமாக வணங்குவது) தொடர்ந்து தொழுது வாருங்கள்'' என நபிகளார் கூறினார்கள்.
உலகத்தின் இலாபம் (பொருள்) ஒரு மனிதனின் உள்ளத்தில் பதிந்து, முதலில் ஆசை ஏற்பட்டு, பிறகு அது பேராசையாக உருமாறி விடக் கூடாது என்பதற்காகவும், மறுமை வாழ்வை மறந்து இம்மை வாழ் வில் (உலக இன்பத்தில்) மூழ்கி விடாது மறுமைக்கான தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் நபித் தோழரின் எண்ணத்தை - ஆசையை திசை திருப்பிவிட்டார்கள் நபிகளார்.
"உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்." (அல்குர்ஆன் 67:2)
"ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்." (அல்குர்ஆன் 63:9)
இவ்வளவு தெளிவாகச் சொல்லப்பட்டும் ஷைத்தான் மனிதனுக்கு பொருள் செல்வத்திலும் மக்கள் செல்வத்திலும் மயக்கத்தைக் கொடுத்து அவனை வழி தவறச் செல்கிறான். ஆனால் இந்த பொருட்செல்வமும் மக்கள் செல்வமும் மறுமையில் உதவிடப்போவதில்லை . உறுதியாக அல்லாஹ் எச்சரிக்கிறான்.
”அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா. “(அல்குர்ஆன் 63:9)
மேலே கூறப்பட்ட 5 குர்ஆன் வசங்களும்,5 நபியவர்களின் பொன் மொழிகளும் இந்த இடத்தில், இந்த வினாடியில் நமக்குப் போதிக்கும் பொன்னான போதனைகள் தான் மனிதன் கோலமாக் கோலம் என்று தனக்கு இறக்கை இருக்கக்கூடாதா? நானும் வானம் வரை பறக்க வேண்டுமே! என்று தன்னையும்,தன் வாழ்க்கையையும் காலம் , நேரம் ஓய்வில்லாமல் கழித்துக் கொண்டிருக்கிறான் பேரசையில்.. இதுதான் மேலே சொல்லப்பட்ட அல்குர்ஆன்,அல் ஹதீஸின் விளக்கங்கள்.
இதுவே போதுமானது!!!!!!!!!!!! யாரெல்லாம் இந்த நபிமொழியையும்,அல்குர்ஆன் வசனத்தையும் கண்டும் காணாமலும் நமெக்கென்ன!!!!!!! அது இருக்கட்டும். நான் நான்தான் என்று போதனையை உள்ளத்தில் உணர்த்தவில்லை என்றால். அதுவும் பேராசை தான்.
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
,,👍☝️
ReplyDelete