அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ... அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் அல்ஹம்துலில்லாஹ்.....
அன்பு சகோதர சகோதரிகளே வாழ்க்கையில் நமக்கு கிடைத்த மிக பெரும்
அருள்பாக்கியம் நம்மை இஸ்லாமியனாக பிறக்க வைத்து அதில் அல்லாஹ் நம்மை
நிலைபெற வைத்து இருப்பது தான்.
அதனை பின்பற்றும் முஸ்லிம்கள்,
கொள்கையிலே உறுதி மிக்கவர்கள்! வழிபாடுகளில் இறைநெறி நிற்பவர்கள்! வாழ்க்கை நெறிகளில் தூய்மையானவர்கள்! பேச்சில் வாய்மையானவர்கள்! செயலில் கண்ணியமானவர்கள்! வாக்குறுதியில் மீறாதவர்கள்! வாணிபத்தில் நாணயமானவர்கள்! அறிவாற்றலில் ஒப்பாரில்லாதவர்கள! விவேகத்தில் உச்சியிலிருப்பவர்கள்! வீரத்தில் வேங்கையைப் போன்றவர்கள்! சாதனை படைப்பதில் சளைக்காதவர்கள்! இவர்களே உண்மை முஃமின்கள்..கண்ணியமானவர்கள் இஸ்லாத்தை முழுமையாக விளங்கி
அதன் அங்கங்களையும்,அசைவுகளையும் ஆழ்மனதில் பதியவைத்தவர்கள் தான் மேலே
சொல்லப்பட்டவர்கள். இவர்கள்தான் கீழ் இருக்கும் அல்குர்ஆனில்
கூறப்பட்ட பிராத்தைனையை முழு மூச்சுடன் பின்பற்றி தன் பாவங்களை
அல்லாஹ்விடம் கேட்டு மன்றாடக்கூடியவர்கள் அதனை அல்லாஹ் அல்குர்ஆனில்
கூறுகின்றான்.
எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை
வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து
எங்களைக் காப்பாயாக! என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன்
2:201)
அதே நேரத்தில், உலகத்தின் இன்பங்களிலேயே முழுமையாக இருந்து
விடாமல் படைத்தவனின் கடமைகளையும் நினைத்துப் பார்க்கவும் உலக விஷயங்களில்
படைத்தவனின் கட்டளைகளை மீறாமல் நடந்து கொள்ளவும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ,
வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை
விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும்,
உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.(அல்குர்ஆன் 24:37)
எண்ணம், சொல், செயல், நடத்தை அனைத்தும் அழகாக,தூய்மையாக இருப்பது அவசியம். உடலில், உடையில், சூழலில், பொருளில் அழகைப் பேணவேண்டும்,பேணி நடக்கவேண்டும். வணக்க வழிபாடுகளில், குடும்பங்களில், சமூகங்களில், பொருளாதாரங்களில், அரசியலில் அழகின் உறவைப் பேணவேண்டும் என்பது இன்றியமையாயது. அழகின் அவசியத்தையும்,அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்த நாடிய
அல்லாஹ், தொழுகை, தவாபு ஆகிய இபாதத்துக்களில் அழகைப் பேணுமாறும், இப்படி
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான். "ஆதமின் மக்களே! ஒவ்வொரு தொழுகை, தவாபின் போதும் நீங்கள் உங்கள் அலங்காரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்." (அல்குர்ஆன்.7:31)
இன்னோரன்ன மனிதனுக்கு மத்தியில்,மக்களுக்கு மத்தியில் சீவி,சிங்காரித்து
,எடுப்பு எடுத்து ,போஸ்கொடுத்து தன்னை மறந்து விபாச்சார ரீதிக்கு
அழைத்துப்போகும் அழகு இறுதியில் பாதாலத்தில் தள்ளி தன் நாசத்தைத் தேடுவதை
விட படைத்த ரப்புல்ஆலமீனுக்கு முன்னிலையில் நாம் ஏன் அழகைக் காட்டக் கூடாது
அல்லாஹ் அழகானவன் அவன் அழகைத்தான் விரும்புகின்றான்.
ஸூப்ஹானல்லாஹ் இந்த நிலைக்கு நாமும் மாறி நமது அக்கம்,பக்கம் உற்றார்
உறவினர்கள், இனபந்துக்கள்,மனைவி மக்கள் அனைவருக்கும் இப்போதனையின் கீழ்
அமரச் செய்வோமாக, அதற்கான முயற்சிகளை இன்றே மேற்கொள்வோமாக, நமது
நேரங்களையும்,காலங்களையும் இப்படியான வசனங்களுக்கு செவி சாய்ப்போமாக, உலப்
பேச்சுக்களையும்,மற்றார் குறாகளையும் தேடுவதை தவிர்ப்போமாக. வல்லவன்
அல்லாஹ் நமக்கு நல்லருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.