அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.. நேர்வழி காட்டுவானாக. ஆமீன்.
சத்தியமும்,அசத்தியமும் ஒன்றோடு ஒன்று வேறுபட்டது. சத்தியம் என்பது
உண்மையைக்கு நேரானது. அசத்தியம் என்பது உண்மைக்கு மாறானது. சத்தியம்
மறுமையில் வாய்மை சேர்க்கும். அசத்தியம் மறுமையில் பொய்மை சேர்க்கும்.
இதுதான்,இப்படித்தான்,என்று நேரான கோட்டை கீரி வழிகாட்டியது சத்தியம்..
கோணலான கோட்டைக் கீரி வா வா என்று வழிகேட்டில் அழைப்பது தான் அசத்தியம்...
ஒருமை, பண்மையாக எப்படி வேண்டுமானாலும் சொன்னாலும் கூட சத்தியம் நிச்சயம்
வெற்றியே.. இந்த சத்தியப் பாதையை மேலோங்கவும், அது சொல்லும் போதனைகளை
பொறுப்போடு செய்யவுமே இவ்வுலகில் மானிட சமூகம் படைக்கப்பட்டது .
எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே ஒழுக்கமும் நன்னடத்தையும் நமது உடலில் உள்ள
உயிரையும் நாம் சுவாசிக்கும் சுவாசத்தையும் போன்றது. குர்ஆனிலும் நபி
மொழியிலும் அல்லாஹ்வின் மார்க்கம் ஒரு வலுவான கட்டடத்திற்கு உதாரணமாகச்
சொல்லப்பட்டுள்ளது. அந்த மாளிகையின் அடித்தளமாயிருப்பது ஈமான் என்றால் அதன்
மேல் எழுப்பப்பட்டுள்ள தூண்களும், சுவர்களும், மேற் கூரையுமே இஸ்லாமாகும்.
இஸ்லாம் என்ற மாளிகையை கட்டி எழுப்புவதற்கும் அதை உறுதியாய் எழிலுடன் நிலை
நிறுத்துவதற்கும் தேவையான இரண்டு விஷயங்கள்தான் தக்வா எனும் இறையச்சம்
இஹ்ஸான் எனும் ஒழுக்கமும் நன்னடத்தையுமாகும்.
(நபியே) பிரகடனம்
செய்வீராக: ""சத்தியம் வந்து விட்டது. அசத்தியம் அழிந்து விட்டது. திண்ணமாக
அசத்தியம் அழியக்கூடியதே' (அல்குர்ஆன்17:81)
அசத்தியத்தைக் கொண்டு
சத்தியத்தைக் குழப்பி விடாதீர்கள். அறிந்து கொண்டே சத்தியத்தை நீங்கள் மூடி
மறைக்காதீர்கள். (திருக்குர்ஆன்2:42)
""சத்தியம் வந்து விட்டது. இனி, அசத்தியத்தினால் எதுவும் செய்ய முடியாது!'' (அல்குர்ஆன்34:49)
இறைவன் வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தான். ஒவ்வொரு நதியும்
ஓடையும் தம் கொள்ளளவிற்கு ஏற்ப நீரால் நிரம்பி ஓடியது. பிறகு வெள்ளப்
பெருக்கு ஏற்பட்டு அதன் மேற்பாகத்தில் பொங்கும் நுரையைச் சுமந்து
செல்கிறது. நகைகள், பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்வதற்காக மக்கள்
உலோகங்களை நெருப்பில் உருக்கும் போதும் இதே போன்ற நுரை ஏற்படுகிறது. இறைவன்
இவற்றையே சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உவமையாகக் கூறுகின்றான்.
(பலன் தராத) நுரை ஒன்றுமில்லாமல் போய் விடுகின்றது. எது மக்களுக்குப் பலன்
அளிக்கின்றதோ அது பூமியில் தங்கி விடுகின்றது! இவ்வாறு இறைவன் உவமானங்கள்
மூலம் தன் செய்திகளை விளக்குகின்றான். (அல்குர்ஆன்13:17)
சத்தியம் வந்தே தீரும் அசத்தியம் அழிந்தே தீரும் அல்லாஹ் அல்குர்ஆனில் இப்படிக்கூறுகின்றான்,,‘அல்லாஹ்வை நோக்கி அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?’ ( அல்குர்ஆன்.41:33)
இந்த வசனம் உணர்த்தும் உண்மை நிலைக்கு நாம் சொந்தக்காரர்களாகி விட்டோமா?.
அல்லது ஆகப்போகின்ரோமா?. அல்லது ஆகத்தான் வேண்டமா?. என்ற மூன்று
கேள்விக்கும் தடுமாற்றம் இல்லாத பதில் யாருடைய உள்ளத்தில் எழும்புகின்றது..
சிந்திக்கும் சமூகத்திற்கு இந்த வசனத்தின் உண்மை நிலை நிச்சயம் புரியும்.
இன்றைய சிறர்கள் நாளைய தலைவர்கள் என்றும் இன்றைய பெரியவர்கள் மறுநிமிட
போதகர்கள் என்றும் நம்மை நாம் பறைசாட்டிக்கொண்டிருக்கும் இதே வேளையில்.
உலகம் என்ற நான்கு சுவருக்கும் மத்தியில் நமக்குள்ளே சத்தியம்
மறுக்கப்படுகின்றது என்றால் கவலைக்குரிய விடமே தவிர வேறில்லை. கண்ணை
மூடினாலும் பாவம், கண்ணைத்திறந்தாலும் பாவம். இப்படியான உலகில் தன்னை நான்
ஒரு முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நமக்குள் இஸ்லாத்தின்
வழிமுறைகள் நடை பாவனைகள் எந்தளவுக்கு மேலோங்குகின்றது என்பதையும்
சிந்திக்கக்கடமைப்பட்டிருக்கின்றோம்.சத்தியப்
பாதையில் இருக்கும் ஒரு மனிதன் அடுத்த நிமிடம் வேறு பாதைக்கு
அடியாகின்றான், மதுவுக்கும்,போதைக்கும், கேடுகெட்ட நடத்தைக்கும் மாற்றுவழி
அமைக்கின்றான் என்றால் இதை சிந்திப்பது காலத்தின் தேவையே...
அல்லாஹ்வும், அவனது இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் ஏவிய பிரகாரமே
மனிதன் தன் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டியவனாகின்றான். இருந்தபோதிலும்
மனிதன் என்ற வகையில் அவனது இயல்பு அவனைப் பாவம் செய்யத்தூண்டுகின்றது. அதன்
பிரகாரம் அவன் பாவத்தில் விழுந்துவிடுகின்றான். அல்-குர்ஆனும்,
அஸ்-ஸுன்னாவும் போதிக்கும் விடயங்கள் பால் செல்லவேண்டியவன் iஷத்தானின்
வழிகாட்டுதலின் பின்னால் சென்றுவிடுகின்றான். இவ்வாறு அல்லாஹ்வைவிட்டு
வெகுதூரம் சென்ற மனிதனை மீண்டும் அவன் பால் திருப்பும் முகமாகவே அல்லாஹ்
அவனுக்கான ‘தவ்பா’ என்ற வாசலைத் திறந்து வைத்திருக்கின்றான்.
அந்த
வகையில் பாவம் செய்த ஒரு மனிதன், தான் செய்த தீங்குகளிலிருந்து
அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்புத் தேடவேண்டுமாயின் முதலாவதாக, தான் செய்த
பாவங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். மாற்றமாக, தான் செய்த தீங்குகள்,
அட்டூழியங்கள், அனாச்சாரங்கள் போன்றவற்றை அவன் ஏற்றுக்கொள்ளாதபோது அவனது
தவ்பாவிற்கு எத்தகைய பெறுமானமும் இருக்காது. அத் ‘தவ்பா’ ஆனது தன்னைத்தானே
ஏமாற்றிக்கொள்வதாகவே அமையும். மனிதன் என்பவன் பாவம் செய்யவேமாட்டான் என
ஒருபோதும் எம்மால் கூறமுடியாது. ஏனெனில்; பாவம் செய்யும் இயல்பைக்
கொண்டவனாகவே அவன் படைக்கப்பட்டுள்ளான் என்பதை பின்வரும் ஹதீஸ் எமக்கு
மிகத்தெளிவாக எடுத்துச்சொல்கின்றது.
‘நீங்கள் பாவம்
செய்யாதவர்களாக இருப்பின் அல்லாஹ் உங்களை அழித்துவிட்டு இன்னுமோர்
படைப்பைப் படைப்பான். அவர்கள் பாவம் செய்வார்கள் அல்லாஹ்விடம்
மன்னிப்புக்கோருவார்கள், அல்லாஹ் அவர்களை மன்னிப்பான்’ (முஸ்லிம்: 6965)
பொன்னான போதனைகளைக் கேட்கின்றோம், மெய்யான வழிமுறைகளைப் படிக்கின்றோம்,
நேரான பாதையை கண்திறந்து பார்க்கின்றோம், அல்குர்ஆனின் அச்சமூட்டும்
எச்சரிக்கைகளை உணர்கின்றோம். ஆனால் மேலே சொல்லப்பட்ட வசனத்திற்கு
சொந்தக்காரர்களாக, அதற்கு உடன்பட்டவர்களாக நமது நிலையையும்,நமது மனைவி
மக்கள் நிலையையும் நாம் மாற்றியதாக இல்லை. காரணம் இவ்வுலகிற்கு நாமும்
அடிமையாகி நமது மனைவி மக்களையும் அடிமைக்கு நாஷமான கருவிகளை விலைகொடுத்து
வாங்கி சத்தியப்பதையை மறைத்து, அசத்தியப் பாதையை திறந்து கொடுக்கின்றோம்.
குர்ஆனின் வசனங்களை செவிதாழ்த்தி அழவேண்டிய உள்ளம் ,கேடுகெட்ட
சினிமாக்களையும்,சீரியல் போன்ற காட்சிகளையும் பார்த்து பல விதமான உணர்வுகளை
தன் உள்ளத்தில் கோட்டை கட்டும் சமூகத்தின் நிலையையும் பார்க்கின்றோம்.
மனித சமுதாயம் அனைவருக்கும் ஏராளமான பொறுப்புகளை, கடமைகளை இஸ்லாம்
வழங்கியுள்ளது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட யாரும் பொறுப்புகளிலிருந்து,
கடமைகளிலிருந்து விலகி நிற்க முடியாது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
பொறுப்புகள் பற்றி நபியவர்கள் பொன்னான போதனையை உணர்த்திக் காட்டினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே.
உங்கள் பொறுப்புகளைப் பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது
ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாüயாவார். அவர்களை (ஆட்சி
புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப்
பொறுப்பாளன்.அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான்.
பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள்.
அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன்
எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாüயாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்)
குறித்து விசாரிக்கப்படுவான். ஆக,நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே.
உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல் : புகாரி 2554
இந்த உலகத்தில் நன்றாக உழைக்கவேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும், சொத்து
சேர்க்கவேண்டும், ஆடம்பரமான வீடு கட்டவேண்டும், இப்படி இன்பமாக வாழவேண்டும்
என்பதற்காகவேண்டி நமது முஸ்லிம் சகோதர, சகோதரிகள் வைத்தியராகவோ,
பொறியியளாலராகவோ, சட்டத்தரணியாகவோ, ஆசிரியராகவோ, கனணித்துறையிலோ இது போன்ற
கல்வித்துறையிலோ, பாடகராகவோ, இசையமைப்பாளராகவோ, நடனமாடுபவராகவோ வேறு ஏதாவது
வியாபாரத்தையோ செய்துகொண்டிருக்கிறார்கள். இதில் எது சத்தியப் பாதை, எது
பிரயோசனம் அழிக்கும் என்ற கேள்வியை சாதாரண மனிதன் கூட திடீர் என்று பதில்
சொல்லுவான் ஆனால் மார்க்கத்தை விளங்கி அதன் வடிவில் செயல்படுத்தக் கூடிய
மனிதன் எதில் பணம் அதிகமோ அதைத்தான் செய்யத்துணிவான். இதுதான் இஸ்லாம்
சொன்ன வழியா. மறுமைக்காக வாழ்ந்து, மறுமையில் நிம்மதி சந்தோஷத்தை
விரும்பக்கூடிய ஒரு அடியான் பிரயோசனங்களைத்தான் இவ்வுலகில் நிலைநாட்டுவான்
அல்லாஹ் அல்குர்ஆனில் சுவர்க்கத்தைப் பற்றி அதன் இன்பத்தைப்பற்றி
வரிசைக்கிரமாக சொல்லிக்காட்டுகின்றான்..‘(இறைவனை)
அஞ்சியோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை! அதில் மாற்றமடையாத
தண்ணீரைக்கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப்போகாத பாலாறுகளும், அருந்துபவருக்கு
இன்பம் தரும் மது ஆறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும் இருக்கும். அங்கே
அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் தனது இறைவனிடத்திலிருந்து மண்ணிப்பும்
உண்டு. (இவர்கள்) நரகத்தில் நிரந்தரமாகத் தங்கி குடல்களைத் துண்டாக்கி
விடும் கொதிக்கும் நீர் புகட்டப்பட்டவனைப் போன்றவர்களா?’ (அல்குர்ஆன். 47: 15)
‘அவர்களுக்கு நிலையான சொர்க்கச்சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில்
ஆறுகள் ஓடும். தங்கக்காப்புகள் அவர்களுக்கு அணிவிக்கப்படும். ஸுந்துஸ்,
இஸ்தப்ரக் எனும் பச்சைப்பட்டாடைகளை அவர்கள் அணிவார்கள். அதில் உள்ள
ஆசனங்களில் அவர்கள் சாய்ந்திருப்பார்கள். இதுவே சிறந்த கூலி. அழகிய
தங்குமிடம்.’
(அல்குர்ஆன். 18:31)
எனவே..அல்லாஹ் நமக்கு வழங்கிய இஸ்லாமிய
மார்க்கம் தன்னிறைவு பெற்ற மார்க்கமாகும்.மனித வாழ்க்கைக்கு தேவையான
அத்துனை வழிகாட்டல்களையும் உள்ளடக்கிய முழுமையாக நிறைவு பெற்ற மார்க்கம்
இஸ்லாம்.கொள்கைகள்,வணக்கங்கள்,
குடும்பவிவகாரங்கள்,கொடுக்கல் வாங்கல்,
தனி மனித ஒழுக்கங்கள் என இஸ்லாம் பேசாத எந்த வாழ்க்கை நெறியுமில்லை
என்றுகூறுமளவிற்குபூரணத்துவம் பெற்ற மார்க்கத்தையே நாம் பெற்றுள்ளோம்.
இதுவே சத்திய மார்க்கமாகும். நமக்குள் இத்தூய இஸ்லாத்தை சத்தியத்தின் பால்
இட்டுச் செல்ல வேண்டுமானால் நம்மை நாம் மார்றியமைக்க வேண்டும். நமது
தொழில்களில் என்னை விட அவன் அதிக வருமானம் பெருகின்றான் என்று நமது
கண்ணால் கம்டாலோ, செவியால் கேட்டாலோ அடுத்த நிமிடம் நமது உள்ளத்தில் ஒரு
போராட்டம் அவனை விட நான் மேலே இருக்க வேண்டும் என்ற ஒரு வகையான உணர்வு இந்த
உணர்வு நம்மை மாற்ற வேண்டும் என்று படாத பாடு படுகின்றோம். இது நல்லதா
கெட்டதா என்று கேட்டால் இந்த முடிவு வழிகேட்டில்தான் கொண்டு போய்விடும்.
அதே நேரம் இந்த முடிவை இஸ்லாத்தோடு சம்பந்தப்படுத்தி மாற்றத்தான் வேண்டும்
என்றால் அந்தத் தொழில் இபாதத்தாக மாறி அது நமக்கு அல்லாஹ் நாடிய பலனை
அழிக்கின்றது.
குடும்பம்
’குடும்பம்’ என்பது ஒரு மனித
சமூகக்கூட்டம். அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இரத்த பந்தம் அல்லது
திருமண உறவுகள் என்பவைகளால் ஒன்றாக இணைக்கப்படுகின்றார்கள். இந்தக்
குடும்பபந்தம் ஒருவர் மற்றவருக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும்
உரிமைகளையும் கொண்டதாகும். இந்த உரிமைகளும் கடமைகளும் மார்க்கத்தினால்
ஏற்படுத்தப்பட்டு, சட்டத்தினால் அமுல்படுத்தப்பட்டு, குடும்பத்தில் அங்கம்
வகிப்பவர்களால் கடைபிடிக்கப்படுகின்றன. குடும்பத்தைப் பாதுகாத்தல்,
பராமரித்தல், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுதல், சிறுவர்களிடம் கருணை
காட்டுதல், முதியவர்களிடம் மரியாதை காட்டுதல், முதியவர்களைப் பாதுகாத்தல்,
குடும்பம் சுமூகமாக நடந்திடத் தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுதல்
ஆகியவைகள் இந்தக் கடமைகளில் அடங்கும்.
“மனிதர்களே! உங்கள்
இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே
ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்.
பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி
உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்.
அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக்
கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும்
(ஆதரியுங்கள்). – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே
இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:1)
செயல்பாடுகள்.
அறிவுக்குப் பொருத்தமான நடைமுறைக்குச் சாத்தியமான வாழ்க்கை நெறியே இஸ்லாம்
ஆகும். ஆயினும் இஸ்லாம் என்றாலே மூட நம்பிக்கையின் மொத்த உருவம் என்று
கருதும் அளவிற்கு இன்று முஸ்லிம்களின் நிலை இருந்து வருகிறது. இந்த மூட
நம்பிக்கைகளில் பெரும்பாலும் பெண்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றனர்
என்றால் மிகையாகாது.
காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன்
நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல)
அமல்கள் செய்து. சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்த
மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ
அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (அல்குர்ஆன் 103:1-3)
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம்
உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)
எவன் நேரான வழியில் செல்லுகிறானோ, அவன் தன்னுடைய நன்மைக்காக நேரான
வழியில் செல்லுகிறான்; எவன் வழிகேட்டில் செல்லுகின்றானோ, அவன் தனக்கே கேடு
செய்து கொண்டான்; ஒருவனுடைய பாவச்சுமையை மற்றெருவன் சுமக்க மாட்டான்;
(நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை.
(அல்குர்ஆன் 17:15)
இவ்வுலகில் ஏராளமான மதங்கள் இருக்கின்றன.
அம்மதங்களுக்கும் இஸ்லாத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அந்த
வித்தியாசத்தின் அடிப்படையிலேயே தனிச் சிறந்த மார்க்கமாக இஸ்லாம்
கருதப்படுகிறது. உண்மை இவ்வாறிருக்க இன்று எவ்வளவோ மூட நம்பிக்கைகள்
புகுந்து முஸ்லிம் மக்களை ஆட்டிப்படைப்பதைப் பார்க்கின்றோம். தூய இஸ்லாமிய
மார்க்கத்தைப் பெரும்பாலோர் முஸ்லிம்களின் செயல்பாடுகளை வைத்துத் தான்
கணக்கிடுகிறார்கள். குர்ஆன், நபிமொழி, நபி(ஸல்) அவர்களின் கொள்கை முழக்கம்
இவை மட்டும் மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கவில்லை; மாறாக அவர்களின்
பழக்க வழக்கங்கள் நடைமுறைகள் ஆகியவையும் மக்களை இஸ்லாத்தின் பக்கம்
ஈர்த்தது. இந்த அடிப்படையில் மனிதனின் செயல்பாடுகளும்
சத்தியப்பாதைக்குமுக்கிய வழிகளாகும்.
நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல்.
மேலும் மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு
ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு
கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன். 3 : 104)
இங்கே நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் - நல்லதைக்
கொண்டு ஏவுபவர்கள், அழைப்பாளர்கள் பற்றியும், தீயவற்றிலிருந்து
தடுப்பவர்கள் பற்றியும் ஒரு முஃமினுடைய மூன்று குணாதிசயங்களைப் பற்றிக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் முதலில் தான்
எந்த நன்மையின் பக்கம் மக்களை அழைக்கின்றோமோ, அந்த நன்மையைப்
பின்பற்றுபவர்களாக இருத்தல் வேண்டும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு
முன் உள்ள நபிமார்களுக்கு சீடர்கள் இருந்தார்கள். அந்த சீடர்கள் தங்களது
நபிமார்கள் மறைந்தவுடன் அந்த நபிமார்கள் எதை எதைக் காட்டித் தரவில்லையோ,
அவற்றை எல்லாம் செய்து கொண்டும், அதன் மூலம் எழுந்த தீமைகளை வேடிக்கை
பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். அதனால் தான் அவர்கள் வரலாறு நெடுகிலும்
அழிக்கப்பட்டு வந்திருப்பதை திருமறை வாயிலாக, ஆது, ஸமூது, மத்யன், ஹுது என
பல்வேறு கூட்டத்தார்கள் ஏன் அழிக்கப்பட்டார்கள் என்ற வரலாற்றை நாம் அறிந்து
கொள்ள முடிகின்றது.இதற்கு முன் வந்த அனைத்து நபிமார்களும்
கண்ட
அனைத்துத் தீமைகளும் இன்றைக்கும் நம் முன்னே பவனி வந்து கொண்டிருக்கும்
பொழுதும், இஸ்லாத்தை வேரடி மண்ணாக அழித்து விடுவதற்கு கிறிஸ்தவ, யூத,
காஃபிர்கள் என அனைவரும் ஒன்று திரண்டிருக்கும் பொழுது, இஸ்லாத்திற்கு
எதிராக ஜாஹிலிய்ய சக்திகளை ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கும் பொழுது,
நன்மையைக் கொண்டு ஏவி தீயவற்றைத் தடுப்பவர்கள், அந்தப் பணியைச் செய்யாமல்
உதாசினத்துடன் நடந்தோமென்றால், எந்தப் பணியை இந்த முஸ்லிம் சமுதாயத்திடம்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விட்டு விட்டுச் சென்றுள்ளார்களோ அந்தப் பணியை
யார் நிறைவேற்றுவது என்ற கேள்வி எழும். இந்தக் கேள்விக்குப் பதில்
வைத்திருப்பவர்கள்
யார்? என்பதையும்,அவற்றை அறிய வேண்டிய பொறுப்பு யார் மீது உள்ளது? என்பதையும் நாம் சிந்தித்தாக வேண்டும்.
இங்கே நம்மைச் சுற்றி தீமைகள் நிறைந்திருக்கின்ற இந்த வேளையில் நன்மையின்
பக்கம் அழைப்பவர்கள் முதலில் தான் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இங்கே
தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.
இன்றைக்கு இஸ்லாத்தின் சட்ட
திட்டங்களை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். அதனை எவ்வாறு செயல்படுத்துவது
என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.
தொழுகையில் எப்படி
நிற்பது, கைகளை எங்கே கட்டுவது, எவ்வாறு குனிவது, எவ்வாறு சுஜுது செய்வது
உள்ளிட்ட அனைத்தையும் நாம் கற்று வைத்திருக்கின்றோம். ஆனால் இந்த இஸ்லாம்
மார்க்கம், இத்துடன் நின்று விட்டதா? மேற்கண்ட முறைப்படி குனிந்து
நிமிர்ந்து விட்டால், ஒரு முஸ்லிமினுடைய கடமை முடிந்து விட்டதா? என்று
கேட்டால் இல்லை என்ற பதிலையே நீங்கள் தருவீர்கள். ஏனெனில், இறைவன் தன்னுடைய
திருமறையிலே மேலே கூறியுள்ளதை இங்கே மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு
வந்து பாருங்கள்.
நன்மையை ஏவ வேண்டும்! தீமையைத் தடுக்க வேண்டும்! இதற்கென ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
நன்மையும்,தீமையும்.
உண்மை முஸ்லிம், மனிதர்களிடம் மென்மையாக, நிதானமாக, நளினமாக நடந்து
கொள்வார். அவரது மென்மை நேசிக்கப்படும்; அவரது நளினம் போற்றப்படும்;
அவரது நிதானம் புகழப்படும். ஏனெனில், இவை புகழத்தக்க நற்பண்புகளாகும்.
அதன்மூலம் மனிதர்களை நெருங்கி அவர்களது நேசத்திற்குரியவராகத் திகழ
முடியும். அல்லாஹ் தனது அடியார்களிடம் அப்பண்புகளை விரும்புகிறான்
இஸ்லாமிய சமுதாய அமைப்பு என்பது, தன்னை தான்தோன்றித்தனமாக
அடையாளப்படுதவில்லை. மாறாக மனிதனை சிந்தனா சக்தி உள்ளவனாகவும், அடுத்தவர்
பற்றிய கவலை உடையோனாகவும் அடையாளப் படுத்த முனைகிறது. அதாவது நன்மையின்
பக்கம் மனிதனை இழுப்பவனாகவும் தீமைகள் அவை எந்த உருவத்தில் தலைகாட்டினாலும்
எதிர்த்துப் போராடும் படி மக்களை தட்டி எழுப்புவனாக இருக்க வேண்டும்
என்றும், தீமைகளை எதிர்த்து நிற்பதில் தன்னிடமிருக்கும் சக்திகள்
அனைத்தையும் பயன்படுத்தி இவற்றின் மூலம் சமுதாயத்தில் வலுவானதொரு ஒழுக்கச்
சூழலை உருவாக்குவதும் ஒவ்வொரு மனிதனிதும் மிக பெரிய கடமையாக இருக்கிறது
என்பதையும் வலியுறுத்திச் சொல்கிறது...எனவே மனிதன் உலகத்திற்கு பாரிய
பொறுப்புக்களொடு வந்திருக்கிறான்.. இந்த பொறுப்பக்களிலிருந்து விடுபட
நினைக்கும் எந்த மனிதனும். அல்லாஹ்வின் பார்வையில் நல்ல மனிதனாக
இனங்காணப்படடாட்டான். அவன் வெறும் சுயநலம் மிக்கவனாகவும், அல்லாஹ்வின்
திருப்தியைப் பெறாதவனாகவுமே கணிக்கப்படுவான்..
நன்மையும் தீமையும்
சமமாகி விடாது. ஆதலால் தீமையை நீர் நன்மையைக்கொண்டே தடுத்துக்கொள்ளும்.
அவ்வாறாயின் உம்முடைய கொடிய விரோதியை அதே சமயத்தில் உம்முடைய மெய்யான,
மிக்க நெருங்கிய சிநேகிதனைப் போல் காண்பீர். பொறுமையுடையோர்களைத் தவிர
மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி பெரும்பாக்கியம் உடையவர்களைத்
தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (அல்குர்அன் 41:34,35)
மென்மையை வலியுறுத்தும் சான்றுகள், முஸ்லிமின் சமுதாய வாழ்வில் பிரதிபலிக்க
வேண்டிய உயரிய பண்பு என்பதை உறுதிப் படுத்துகிறது. நளினம் என்பது
அல்லாஹ்வின் உயரிய பண்புகளில் ஒன்றாகும். அது தனது அடியார்களிடம்
பிரதிபலிப்பதை அல்லாஹ் விரும்புகிறான்.
ஒழுக்கம்.
மனிதப்
படைப்பின் நோக்கமே வணக்கம் நாம் வணக்கம் என்றால் என்ன என்பதை அறிய
வேண்டும். வணக்கம் என்பதற்கு அறிஞர்கள் கூறும் விளக்கம் என்னவெனில்
‘இறைகட்டளைகள் அனைத்துமே வணக்கமாகும்’ என்பதாகும். அதாவது இறைவனுடைய
மற்றும் அவனுடைய தூதருடைய ஏவல் விலக்கல்களை வாழ்வில் பேணி வாழ்வதே
வணக்கமாகும் என்பதாகும்.
இந்த வகையில் அல்லாஹ் மற்றும் அவனுடைய
தூதர் (ஸல்) அவர்கள் போதித்த இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைப் பேணி நடப்பதும்
சிறந்த வணக்கமாகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த சிறிய
தொகுப்பில் இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகளின் பட்டியலைக் காண்போம். இவைகளை
பேணி நடக்கும் ஒரு முஃமின் இன்ஷா அல்லாஹ் மறுமையில் சிறந்த
நற்பேறுகளையுடைவராக விளங்கலாம்.
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
ஒழுக்க மாண்புகள்!
* அறிந்தவனுக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுதல். இது நேசத்தை உண்டாக்கும். வெறுப்பையும் பிரிவையும் அகற்றும்.
* பிறரிடம் முகமலர்ச்சியுடன் புன்முறுவல் பூத்தல். இது அன்பையும் நேசத்தையும் வளர்க்கும்.
* வலது கரத்தால் உண்ணுதல் மற்றும் குடித்தல். இடது கரத்தால் குடிப்பது ஷத்தானின் செயலாகும்.
* உண்ண மற்றும் குடிக்க ஆரம்பிக்கும் போது ‘பிஸ்மில்லாஹ்’ கூறுதல். இந்த செயல்கள் முடிவுற்ற பிறகு ‘அல்ஹம்துலில்லாஹ்’ கூறுதல்
* ‘தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ கூறுதல்; அதைக் கேட்டவர் ‘யர்ஹமுகல்லாஹ்’ என்று கூறுதல்.
* நோயாளியிடம் சென்று நோய் விசாரித்தல்
* ஜானாஸாவை பின்தொடர்ந்து சென்று தொழுகையிலும் அதை அடக்கம் செய்வதிலும் கலந்து கொள்ளுதல்
* பள்ளிவாசலில் நுழையும் போது வலது காலை முன்வைத்து நுழைந்து நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆவை ஓதுதல்.
* பள்ளியிலிருந்து வெயியேறும் போது இடது காலை முற்படுத்துதல்
* வீடு மற்றும் பிற இடங்களில் நுழையும் போதும் அல்லது அதிலிருந்து
வெளியேறும் போதும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வழிமுறைகளைப் பேணி
அதற்குரிய துஆக்களை ஓதுதல்
* பயணத்தின் போது அதற்குரிய ஒழுக்கங்களைப் பேணுதல்
* பெற்றோருக்கு உபகாரம் செய்து அவர்களிடம் நன்முறையில் நடந்து கொண்டு
அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முறைப்படி செய்தல். இது அல்லாஹ்வின்
கட்டளையாகும். இதில் கவன் குறைவாக இருந்து விட்டால் மறுமை நாளில் மிகவும்
கைசேதப் பட வேண்டியதிருக்கும்.
* உறவினர், அண்டை வீட்டார், மற்றும் சிறுவர், சிறுமியரிடம் நன்முறையில் நடந்து கொள்ளுதல்.
* குழந்தைப் பெற்றவர்களுக்கு வாழ்துக் கூறுதல்
* திருமணம் செய்தவர்களுக்கு பரக்கத்திற்காக துஆச் செய்தல்
* சோதனைக் குள்ளாக்கப்பட்டவனுக்கு ஆறுதல் கூறுதல்.
* ஆடை, காலணிகள் போன்றவற்றை அணியும் போதும் கழற்றும் போதும் இஸ்லாம் கற்றுத் தந்த முறையில் செய்தல்
* கொடுக்கல் வாங்கலின் போது நீதமாக நடந்துக் கொள்ளுதல்
* சொல்லிலும் செயலிலும் உண்மையைக் கடைபிடித்தல்
* செய்வதிலும் விடுவதிலும் நம்பிக்கையைக் கடைபிடித்தல்
* கற்பை பேணி பாதுக் காத்துக்கொள்ளுதல்
* இருப்பதைக் கொண்டு திருப்தியடைதல்
* வெட்கம், வீரம், தர்மமம், தூய்மை, வாக்கு மாறாமை போன்ற நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுதல்
* தாழ்ந்த குணங்களை விட்டும் தவிர்ந்துக் கொள்ளுதல்.
* தேவையுடையவருக்கு உதவி செய்தல். அடியான் அவனது சகோதரனுக்கு உதவும் போது அல்லாஹ் அவனுக்கு உதவுகிறான்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ
அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது
நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால்
நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில்
என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான்
நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு
முழமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை
நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு
அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி
ஓடிச் செல்வேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்.அபூ ஹுரைரா (ரலி) .
நூல்.புஹாரி : 7405
இந்த வசனம் உணர்த்தும் உண்மை நிலைக்கு நாம் சொந்தக்காரர்களாகி விட்டோமா?. அல்லது ஆகப்போகின்ரோமா?. அல்லது ஆகத்தான் வேண்டமா?. என்ற மூன்று கேள்விக்கும் தடுமாற்றம் இல்லாத பதில் யாருடைய உள்ளத்தில் எழும்புகின்றது.. சிந்திக்கும் சமூகத்திற்கு இந்த வசனத்தின் உண்மை நிலை நிச்சயம் புரியும். இன்றைய சிறர்கள் நாளைய தலைவர்கள் என்றும் இன்றைய பெரியவர்கள் மறுநிமிட போதகர்கள் என்றும் நம்மை நாம் பறைசாட்டிக்கொண்டிருக்கும் இதே வேளையில். உலகம் என்ற நான்கு சுவருக்கும் மத்தியில் நமக்குள்ளே சத்தியம் மறுக்கப்படுகின்றது என்றால் கவலைக்குரிய விடமே தவிர வேறில்லை. கண்ணை மூடினாலும் பாவம், கண்ணைத்திறந்தாலும் பாவம். இப்படியான உலகில் தன்னை நான் ஒரு முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நமக்குள் இஸ்லாத்தின் வழிமுறைகள் நடை பாவனைகள் எந்தளவுக்கு மேலோங்குகின்றது என்பதையும் சிந்திக்கக்கடமைப்பட்டிருக்கின்
அல்லாஹ்வும், அவனது இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் ஏவிய பிரகாரமே மனிதன் தன் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டியவனாகின்றான். இருந்தபோதிலும் மனிதன் என்ற வகையில் அவனது இயல்பு அவனைப் பாவம் செய்யத்தூண்டுகின்றது. அதன் பிரகாரம் அவன் பாவத்தில் விழுந்துவிடுகின்றான். அல்-குர்ஆனும், அஸ்-ஸுன்னாவும் போதிக்கும் விடயங்கள் பால் செல்லவேண்டியவன் iஷத்தானின் வழிகாட்டுதலின் பின்னால் சென்றுவிடுகின்றான். இவ்வாறு அல்லாஹ்வைவிட்டு வெகுதூரம் சென்ற மனிதனை மீண்டும் அவன் பால் திருப்பும் முகமாகவே அல்லாஹ் அவனுக்கான ‘தவ்பா’ என்ற வாசலைத் திறந்து வைத்திருக்கின்றான்.
அந்த வகையில் பாவம் செய்த ஒரு மனிதன், தான் செய்த தீங்குகளிலிருந்து அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்புத் தேடவேண்டுமாயின் முதலாவதாக, தான் செய்த பாவங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். மாற்றமாக, தான் செய்த தீங்குகள், அட்டூழியங்கள், அனாச்சாரங்கள் போன்றவற்றை அவன் ஏற்றுக்கொள்ளாதபோது அவனது தவ்பாவிற்கு எத்தகைய பெறுமானமும் இருக்காது. அத் ‘தவ்பா’ ஆனது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதாகவே அமையும். மனிதன் என்பவன் பாவம் செய்யவேமாட்டான் என ஒருபோதும் எம்மால் கூறமுடியாது. ஏனெனில்; பாவம் செய்யும் இயல்பைக் கொண்டவனாகவே அவன் படைக்கப்பட்டுள்ளான் என்பதை பின்வரும் ஹதீஸ் எமக்கு மிகத்தெளிவாக எடுத்துச்சொல்கின்றது.
‘நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருப்பின் அல்லாஹ் உங்களை அழித்துவிட்டு இன்னுமோர் படைப்பைப் படைப்பான். அவர்கள் பாவம் செய்வார்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோருவார்கள், அல்லாஹ் அவர்களை மன்னிப்பான்’ (முஸ்லிம்: 6965)
‘அவர்களுக்கு நிலையான சொர்க்கச்சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். தங்கக்காப்புகள் அவர்களுக்கு அணிவிக்கப்படும். ஸுந்துஸ், இஸ்தப்ரக் எனும் பச்சைப்பட்டாடைகளை அவர்கள் அணிவார்கள். அதில் உள்ள ஆசனங்களில் அவர்கள் சாய்ந்திருப்பார்கள். இதுவே சிறந்த கூலி. அழகிய தங்குமிடம்.’
(அல்குர்ஆன். 18:31)
எனவே..அல்லாஹ் நமக்கு வழங்கிய இஸ்லாமிய மார்க்கம் தன்னிறைவு பெற்ற மார்க்கமாகும்.மனித வாழ்க்கைக்கு தேவையான அத்துனை வழிகாட்டல்களையும் உள்ளடக்கிய முழுமையாக நிறைவு பெற்ற மார்க்கம் இஸ்லாம்.கொள்கைகள்,வணக்கங்கள்,
குடும்பவிவகாரங்கள்,கொடுக்கல் வாங்கல், தனி மனித ஒழுக்கங்கள் என இஸ்லாம் பேசாத எந்த வாழ்க்கை நெறியுமில்லை என்றுகூறுமளவிற்குபூரணத்துவம் பெற்ற மார்க்கத்தையே நாம் பெற்றுள்ளோம். இதுவே சத்திய மார்க்கமாகும். நமக்குள் இத்தூய இஸ்லாத்தை சத்தியத்தின் பால் இட்டுச் செல்ல வேண்டுமானால் நம்மை நாம் மார்றியமைக்க வேண்டும். நமது தொழில்களில் என்னை விட அவன் அதிக வருமானம் பெருகின்றான் என்று நமது கண்ணால் கம்டாலோ, செவியால் கேட்டாலோ அடுத்த நிமிடம் நமது உள்ளத்தில் ஒரு போராட்டம் அவனை விட நான் மேலே இருக்க வேண்டும் என்ற ஒரு வகையான உணர்வு இந்த உணர்வு நம்மை மாற்ற வேண்டும் என்று படாத பாடு படுகின்றோம். இது நல்லதா கெட்டதா என்று கேட்டால் இந்த முடிவு வழிகேட்டில்தான் கொண்டு போய்விடும். அதே நேரம் இந்த முடிவை இஸ்லாத்தோடு சம்பந்தப்படுத்தி மாற்றத்தான் வேண்டும் என்றால் அந்தத் தொழில் இபாதத்தாக மாறி அது நமக்கு அல்லாஹ் நாடிய பலனை அழிக்கின்றது.
No comments:
Post a Comment