மனிதனாகப்
பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.
ஏனென்றால், நாம் ஏதோ ஒரு வகையில் பிறரிடம் உதவி பெற்றே வாழ்கிறோம். எனவே,
உதவி செய்து வாழ்தல் இன்றியமையாதது ஆகும்.
உதவி செய்யாமல்
சேர்த்து வைக்கும் பொருளால் பயன் எதுவும் விளைவதில்லை. அந்தப் பொருள்
வீணாகத்தான் அழியும். ஏனென்றால் இந்த உலகில் மனிதன் நிலையாக வாழ்வதில்லை.
எனவே மனிதன் வாழும் காலத்திலேயே தான் சேர்த்த பொருளைப் பிறருக்குக்
கொடுத்து உதவ வேண்டும்
உதவி செய்யும் போது அந்த உதவியை
உயர்ந்தோருக்குச் செய்கிறோமா, தாழ்ந்தோருக்குச் செய்கிறோமா என்று
சான்றோர்கள் பார்ப்பதில்லை, உதவி தேவைப்படுபவர் வேண்டியவராக இருந்தாலும்
வேண்டாதவராக இருந்தாலும் எல்லோருக்கும் கொடுத்து உதவுவார்கள்.
மற்றவர்க்குசெய்யும்சிறுதொண்டு
கஷ்டத்தைபோக்கும்மருந்துப்பொருள்,
மகிழ்ச்சியைஉண்டாக்கும்மாணிக்கப் பொருள். வாழ்கையில்கற்றுக்கொள்ளும்நற்பண்பும்கூட.... முதுமைக்கு உதவிகைத்தடி முயற்சிக்குஉதவிதன்னம்பிக்கை தன்னம்பிக்கைக்குஉதவிநேர்மறைஎண்ணம் நேர்மறை எண்ணத்துக்குஉதவிஅன்பு,,,,,,,