அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ,
இரைவனுடைய வாழ்வெடுத்து நெடு நிலத்தைக் காற்பாதற்கு மறைவிடத்தை நிறையழித்த
இறைவனுக்கே எல்லாப் புகழும் அல்ஹம்துலில்லாஹ்...அவன் பெயர் கொண்டு
..அண்டை வீட்டார் அவர்களோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பை
இவ்விடதிதில் தரிசனம் செய்கின்றேன்.
அல்லாஹ் இந்த உலகிலே
பல்கோடிப் படைப்பினங்களைப் படைத்து அதிலிம் சிறந்த மிகஉயர்ந்த படைப்பாக
அல்லாஹ் மனிதனைப் படைத்து இருக்கின்றான்.இந்த மனிதனுக்கு அல்லாஹ் சில
கடமைகளையும்,உரிமைகளையும் வழங்கியிருக்கின்றான்.
மனிதன் மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும்,உரிமைகளும். மனிதன் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், உரிமைகளையும்.
அல்லாஹ் மனிதனுக்குச் செய்ய வேண்டியகடமைகளையும்,
உரிமைகளையும்.
பெற்றார்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், உரிமைகளையும்.
பிள்ளைகள் பெற்றார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும்,
உரிமைகளையும்.
கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும்,
உரிமைகளையும்.
மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும்,
உரிமைகளையும்.
அல்லாஹ் ஏற்பாடு செய்திருக்கின்றான். இந்த உலகில் நாம் வாழ்வதற்காக
அல்லாஹ் பல்வேறு பட்ட அருட்கொடைகளை எமக்கு தந்திருக்கின்றான். இதற்காக
நாங்கள் அல்லாஹ்வுக்கு நன்றியுடைய மனிதர்களாக வாழ்ந்திருக்கின்றோமா? என்ற
கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளே கேட்போமாயின் புரிந்து கொள்ள
முடியும்.
எனவே மனிதன் மனிதனுக்குச் செய்ய வேண்டிய அவைகளில் அண்டை வீட்டாருடன் ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அதன் நன்மைகள் என்ன? அதன் தீமைகள் என்ன? என்பதை அல்குர்ஆனிலும், அல்ஹதீஸிலும் சில வற்றை இங்கு நோக்களாம் இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!
பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதை களுக்கும், ஏழைகளுக்கும்,
உறவினரான அண்டை வீட்டாருக்கும், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், பயணத்
தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்!
பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன். 4:36)
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன். 51:56)
மக்களை விட்டும் உன் முகத்தை (பெருமையோடு) திருப்பாதே! பூமியில்
செருக்காய் நடக்காதே! அகந்தையும் ஆணவமும் கொண்ட எவனையும் அல்லாஹ்
நேசிப்பதில்லை.(அல்குர்ஆன்.31:18)
உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும்
இறந்து விட்ட தன் சகோதரனின் இறச்சியை உண்ண விரும்புவாரா என்ன? நீங்களே அதை
வெறுப்பீர்கள்.(அல்குர்ஆன்.49:12)
‘ஈமான் கொண்டவர்களே! எந்த ஆண்களும் மற்ற எந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய
வேண்டாம். ஒரு வேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம்.
எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். ஒரு
வேளை இவர்கள் அவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம். நீங்கள்
ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப்
பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான
பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தையைக்
கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரர்கள். (அல்குர்ஆன்.49:11)
நம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள்.
ஏனெனில் சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் (பிறரைத்)
துருவித்துருவி ஆராயாதீர்கள். (அல்குர்ஆன்.49:12)
நம்பிக்கை
கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு (அவர்கள் குற்றம் புரியாதிருக்கவே
எவர்கள் துன்பம் அளிக்கின்றார்களோ அவர்கள் ஒரு மாபெரும் அவதூரையும்
வெளிப்படையான பாவத்தின் விளைவையும் தம்மீது சுமந்து கொள்கிறார்கள்.
(அல்குரஆன்.33:58)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக்
கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப்
பாழாக்கி விடாதீர்கள்! (அல்குர்ஆன் 47:33)
உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்து விட்ட தன் சகோதரனின் இறச்சியை உண்ண விரும்புவாரா என்ன? நீங்களே அதை வெறுப்பீர்கள்.(அல்குர்ஆன்.49:1
‘ஈமான் கொண்டவர்களே! எந்த ஆண்களும் மற்ற எந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒரு வேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். ஒரு வேளை இவர்கள் அவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம். நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தையைக் கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரர்கள். (அல்குர்ஆன்.49:11)
நம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் (பிறரைத்) துருவித்துருவி ஆராயாதீர்கள். (அல்குர்ஆன்.49:12)
நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு (அவர்கள் குற்றம் புரியாதிருக்கவே எவர்கள் துன்பம் அளிக்கின்றார்களோ அவர்கள் ஒரு மாபெரும் அவதூரையும் வெளிப்படையான பாவத்தின் விளைவையும் தம்மீது சுமந்து கொள்கிறார்கள். (அல்குரஆன்.33:58)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்! (அல்குர்ஆன் 47:33)