தவ்ஹீதும் அதன் வகைகளும்.
தவ்ஹீத் என்பது அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமான அல்லாஹ்வுக்கு அவசியமான வணக்கவழிபாடுகளில் அவனை ஒருமைப்படுத்துவதாகும். அல்லாஹ் கூறுகின்றான்.
"ஜின்னையும்,மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை." (அல்குர்ஆன்.51:56)
"அல்லாஹ்வை வணங்குங்கள், அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள்." (அல்குர்ஆன்.4:36)

1- தவ்ஹீதுர் ருபூபிய்யா.
2- தவ்ஹீதுல் உலூஹிய்யா.
3- தவ்ஹீதுல் அஸ்மா,வஸ்ஸிபாத்.

தவ்ஹீதுர் ருபூபிய்யா என்பது இவ்வுலகத்தைப் படைத்து, பரிபாலிப்பதில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும்.அவனே அக்குகின்றவன்,அழிக்கின்றவன்,உணவளிப்பவன்,உயிர்ப்பிப்பவன், மரணிக்கச் செய்பவன். வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது.அல்லாஹ் கூறுகின்றான்.
"வானத்திலிருந்தும்,பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கின்ற படைப்பாளன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இருக்கின்றானா? வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை." (அல்குர்ஆன்.35:3)
"எவனது கைவசம் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியமிக்கவன் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்."(அல்குர்ஆன்.67:1)
அல்லாஹ்வின் ஆட்சி இவ்வுலகத்திலுள்ள அனைத்தையும் உள்ளடக்கிய ஆட்சியாகும். அதில் அல்லாஹ் விரும்பிய பிரகாரம் ஆட்சி செய்வான்.நிர்வகிப்பதில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல் என்பது அவன் மட்டுமே அனைத்துப்படைப்பினங்களையும் நிர்வகிப்பவன், கடலிலே உண்டான படைப்பினங்கள்,தரையிலே உண்டான படைப்பினங்கள், மனித ஜீவராசிகள் பறவையிணங்கள்,காட்டிலே மிருகங்கள், கண்ணுக்குத்தெரியாத எத்தனையோ படைப்பினங்கள் அனைத்தையும் நிர்வகிப்பவன் அல்லாஹ் என்று நம்புவதாகும். அல்லாஹ் கூறுகின்றான்.
"அறிந்து கொள்ளுங்கள்! படைத்தலும்,அட்சியும் அவனுக்கே உரியன அகில உலகத்திற்கும் அதிபதியாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்." (அல்குர்ஆன்.7:54)
இதுதான் எல்லாப் படைப்பினங்களையும் உள்ளடக்கிய நிர்வகித்தல் என்பதின் பொருளாகும்.
மனிதர்களில் சொற்பமானர்களைத் தவிர வேறு யாரும் அல்லாஹ் இப்படிப்பட்டவன் அவனுக்கே ஆட்சி சொந்தமானது தவ்ஹீத் என்ற அர்த்தம் வஹ்தா என்ற பதத்திலிருந்து பிறந்தது வஹ்தா என்றால்? ஒருவன் என்பது பொருள் என்பதை விளங்கி நிர்வகிப்பதில்லை.இப்படியானவர்கள் வெளித்தோற்றத்தில் நிர்வாகிகளே தவிர அவர்களின் உள்ளங்களில் உலகம் என்ற தன்மையை நிறைத்தவர்கள் என்று சொன்னாலும் அது மிகையாகாது.அல்லாஹ் கூறுகின்றான்.
"அவர்களது உள்ளங்கள் அவற்றை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும் ஆணவமாகவும் அவற்றை மறுத்தனர்,குழப்பம் விளைவித்தோரின் இறுதி முடிவு என்னவாயிற்று? என்பதை (நபியே!) நீர் காண்பீராக!".(அல்குர்ஆன்.27:14)
இவைகளே தவ்ஹீதுர் ரூபூபிய்யா எனப்படும்.

எல்லா வகையான வணக்கவழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும். அப்படியென்றால் மனிதன் அல்லாஹ்வுடன் வணங்குவதற்கும் திருப்தியைத் தேடுவதற்கும் எவரையும் ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. ஒரு மனிதனுக்கு தேவைகள் ஏற்பட்டால், கஷ்டங்கள் வந்தால் அந்த அவ்லியாக்கலையும், அந்த கப்ருகளையும், அந்த மகான்களையும்,அந்த ஷேஹையும் இவர்களிடத்தில் சென்று அவர்களுக்குப் பணிந்து எங்கள் தேவைகளை நிறைவேற்றுங்கள் நாங்கள் இவ்வளவு கானிக்கை தருகின்றோம் என்று அவர்களின் காலில் விழுவது மடமையிலும் மடமை.அல்லாஹ் ஒருவன் அவனிடத்தில் தான் எல்லாத்தேவைகளையும் முறையிடவேண்டும். இந்த வகைத் தவ்ஹீதுக்காகத்தான் அல்லாஹ் மனிதனை இவ்வுலகில் படைத்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்.
"ஜின்னையும்,மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை." (அல்குர்ஆன்.51:56)
அல்லாஹ் தூதர்களை அனுப்பியதும், வேதங்களை அருளியதும் எல்லா வகையான வணக்கவழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்காகத்தான். அல்லாஹ் கூறுகின்றான்.
"(நபியே!) உமக்கு முன் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும் 'வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறு யாருமில்லை, எனவே என்னையே வணங்குங்கள்' என்று நாம் வஹி அறிவிக்காமல் இல்லை."(அல்குர்ஆன்.21:25)
தூதர்கள் அழைப்பு விடுத்தபோது இணைவைப்போர் ஏற்க மறுத்ததும் எல்லா வகையான வணக்கவழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது என்ற இந்த வகையைத்தான் மறுத்தனர். அல்லாஹ் கூறுகின்றான்.
"எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு விட்டு அல்லாஹ்வை மட்டும் நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காக எங்களிடம் நீர் வந்திருக்கிறீரா? நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு நீர் எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும் என்று அவர்கள் கூறினார்கள்." (அல்குர்ஆன்.7:70)
எனவே வணக்கங்களில் எதையும் அல்லாஹ் படைத்த படைப்பினங்குகளுக்குச் செய்யக்கூடாது. அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மலக்குமார்களுக்கோ, அவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கோ, நல்லடியார்களுக்கோ , படைப்பினங்களில் வேறு எவருக்கும் செய்யக்கூடாது. ஏனெனில் வணக்கம் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானதாகும். இதுவே தவ்ஹீதுல் உலூஹிய்யா எனப்படும்.

இது அல்லாஹ் தனக்கு என்னென்ன பெயர்கள்,பண்புகள் இருப்பதாகக் கூறியுள்ளானோ அல்லது அவனது தூதருக்கு என்னென்ன பெயர்கள்,பண்புகள் இருப்பதாகக் கூறியுள்ளானோ அவற்றை நம்பி அவற்றை மாற்றாமல் , மறுக்காமல் எந்த விதத்தில் என விவபிக்காமல், உவமைப்படுத்தாமல் அவற்றிற்குரிய எதார்த்த நிலையில் அல்லாஹ்வின் கண்ணியத்திற்கும்,மகத்துவத்திற்கும் ஏற்ற விதத்தில் அப்படியே அல்லாஹ்வுக்காகச் செய்வதாகும்.
உதாரணமாக அல்லாஹ் தனக்கு ஹய்யுல் கய்யூம். நித்திய ஜீவன் இவ்வுலகம் முழுவதையும் நன்கு நிர்வகிப்பவன் எனப் பெயர் சூட்டியுள்ளான். எனவே நாம் ஹய்யு என்பது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று என நம்புவது கடமையாகும். இப்பெயரில் அடங்கியுள்ள தன்மையை நம்புவதும் கடமையாகும். அதுதான் நித்திய ஜீவன். அதற்கு முன்பு இல்லை என்ற நிலையும் கிடையாது.பின்பு அழிவு என்ற நிலையும் இருக்காது. இன்னும் அல்லாஹ் தனக்கு ஸமீஃ, கேட்பவன் என்று பெயர் சூட்டியுள்ளான். ஸமீஃ என்பது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று என நாம் நம்புவது அவசியமாகும்.
உதாரணமாக. அல்லாஹ் கூறுகின்றான்.
"அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது என்று யூதர்கள் கூறுகின்றனர்.அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன, இவ்வாறு கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர்.மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடிவாறு வழங்குவான்". (அல்குர்ஆன்.5:64)
தாராளமாக வாரி வழங்கக்கூடிய இரு கைகள் தனக்கு இருப்பதாக அல்லாஹ் கூறியுள்ளான். மனிதனும் அவ்வாறே அல்லாஹ்வுக்கு அள்ளி வழங்கக்கூடிய இரு கைகள் உள்ளன என்று நம்பவது அவசியமாகும். எனினும் நமது உள்ளத்தில் அதற்கொரு வடிவத்தைக் கற்பனை செய்வதோ, அவ்விரு கைகளும் இன்ன விதத்தில் உள்ளன என்று நாவால் மொழிவதோ படைப்பினங்களின் கைகளுடன் அவ்விரண்டையும் ஒப்பிடுவதோ கூடாது. ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்.
"அவனைப் போல் எதுவுமில்லை. அவன் செவியுறுபவன், பார்ப்பவன்." (அல்குர்ஆன். 42:11)
இந்த தவ்ஹீத் அஸ்மா,வஸ்ஸிபாத் எனும் தவ்ஹீத் பற்றிய சுருக்கமான கருத்து என்னவெனில் அல்லாஹ் தனக்கு என்னென்ன பெயர்களை,குணங்களைக் கொண்டுள்ளானோ அல்லது அவன் தூதர் நபியவர்கள் அல்லாஹ்வுக்கு என்னென்ன பெயர்களைக் குணங்களைக் கூறியுள்ளார்களோ அவற்றை மாற்றாமல் ,மறுக்காமல், எந்த விதத்தில் என விவரிக்காமல் உவமைப்படுத்தாமல் அவற்றுக்குரிய எதார்த்த நிலையில் அப்படியே கொடுப்பது ,செயல் படுவது ஒவ்வொரு முஸ்லிமான ஆண்,பெண் இரு பாலார் மீதும் கடமையாகும்.
