சொல்லிலும்,செயலிலும் இஸ்லாத்தைக் கலப்போம். சமூக உறவில் சகோதரத்துவத்தை வளர்ப்போம்.
1- அல்லாஹ். அல்லாஹ் என்பது. ஒப்புயர்வற்ற வணக்கத்துக்குத் தகுதியான ஒருவனைக் குறிக்க ஆதிகாலம் தொட்டே அல்லாஹ் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. "நீங்கள் எதையும் அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்கள் தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்வே உங்களை வெளியேற்றினான்." (அல்குர்ஆன். 16:78) 2- இலாஹ். இலாஹ் என்றால். வணக்கத்திற்குரியவன்.வணங்கப்படத் தகுதியானவன்.அல்லாஹ்வைக் குறிக்க இலாஹ் என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. "மனிதனின் இரட்சகனும், மனிதர்களின் அரசனும், மனிதர்களின் வணக்கத்திற்குரியவனுமாக இருப்பவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்." (அல்குர்ஆன்.114:1,2,3) 3- ரப்பு. ரப்பு என்பது . தலைவவன், உரிமையாளன், எஜமான் போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
"எங்கள் இரட்சகனே நாம் நம்பிக்கை கொண்டோம். எனவே எம்மை மன்னித்து எங்களுக்கு அருள் புரிவாயாக. " (அல்குர்ஆன். 23:109) 4- அர்ஷ். அர்ஷ் என்றால் . அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் அப்பால் உள்ள அர்ஷ் எனும் சிம்மாசனத்தின் மேலிருந்து ஆட்சி செய்கின்றான். "அல்லாஹ்தான் வானங்களை நீங்கள் பார்க்கக்கூடிய தூண்களின்றி உயர்த்தி பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்." (அல்குர்ஆன். 13:2) 5- அன்ஸார். அன்ஸார் என்றால். மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி வந்த முஸ்லிம்களை அரவணைத்து அவர்களுக்கு உதவி புரிந்தவர்கள் அன்ஸார்கள். "அன்ஸார்" என்றால்? உதவி செய்பவர்கள். "அல்லாஹ் இந்த நபியையும், முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்து விட்டான்." (அல்குர்ஆன். 9:117) 6- இஸ்லாம். இஸ்லாம் என்பது. ஆதம்(அலை)அவர்கள் முதல் நபி(ஸல்)அவர்கள் வரை அல்லாஹ்வினால் அனைத்து மக்களுக்கும் அருளப்பட்டதே இஸ்லாம் மார்க்கம். இஸ்லாம் என்றால்? சாந்தி,சமாதானம் என்று அர்த்தம். "அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக (அங்கிகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம் தான்." (அல்குர்ஆன். 3:19) 7- இன்ஜீல். இன்ஜீல் என்பது ஒரு வேதம்.பல்வேறுபட்ட தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன. அதன்படி மூஸா நபிக்கு தவ்ராத்தும், தாவூத் நபிக்கு ஸபூரும், ஈஸா நபிக்கு இன்ஜிலும் வழங்கப்பட்டதாக அல்குர்ஆன் கூறுகிறது. "அவருக்கு நாம் இன்ஜீலை வழங்கினோம், அதில் நேர்வழியும், ஓளியும் இருக்கின்றன." (அல்குர்ஆன். 5:46)
8- இஃதிகாப். இஃதிகாப் என்றால்.அல்லாஹ்வை வணங்குவதற்காக காலத்தையும்,நேரத்தையும் ஒதுக்கி உலக விவகாரங்களிலிருந்து விடுபட்டு பள்ளியில் தங்கியிருப்பதற்கு இஃதிகாப் என்று கூறப்படும்.
"இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து இஃதிகாபில் இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்” (அல்குர்ஆன். 2:187) “
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் பத்து நாட்கள் இஃதிகாப்
இருப்பார்கள். அவர்கள் மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாப்
இருந்தார்கள்.” என அபூ ஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம் -
புகாரி)
9- இத்தா. இத்தா என்றால்.கணவனை இழந்த அல்லது கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்ட அல்லது கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்ற பெண்கள் குறிப்பிட்ட காலம் மறுமணம் செய்யது காத்திருக்கும் காலத்துக்கு இத்த எனறு சொல்லப்படும். 1- கணவனை இழந்தவர்கள் 4 மாதமும் 10 நாட்களும் . 2- விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களில் மாதவிடாய் ஏற்பட்டவர்கள் மூன்று மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமாகும் வரையும்.3- மாதவிடாய் ஏற்பட்டவர்களும், மாதவிடாய் அற்றுப் போனவர்களும் மூன்று மாதங்கள் வரையும், 4- கர்ப்பிணிகளின் இத்தாக் காலம் குழந்தையைப் பிரசவிக்கும் காலம் வரையும் காத்திருக்க வேண்டும். இவைகளுக்கு இத்த என்று சொல்லப்படும். ‘
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து
நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக்
காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில்
முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை
அல்லாஹ் நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 2:234)
10- இஹ்ராம். இஹ்ராம் என்றால்.ஹஜ் அல்லது உம்ரா செய்பவர்கள் கஃபாவுக்குச் செல்லும் போது "மீகாத்" எல்லையில் அல்லாஹ்வுக்காகச் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் அணியும் ஆடையையே இஹ்ராம் எனப்படும். ஹஜ்ஜுக்குரிய
காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம்
அணிந்து) ஹஜ்ஜைத் தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில்
உடலுறவு, கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு – ஆகியவை செய்தல் கூடாது;
நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தனாகவே இருக்கிறான்;
மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக்
கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் நன்மை
மிக்கது, தக்வா(என்னும் இறையச்சமே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! என்னையே
அஞ்சி வாழுங்கள் (அல்குர்ஆன் 2:197).
யமன்
வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருள்களைச் சேகரிக்காமல் ஹஜ்ஜுக்கு
வருவார்கள். மேலும், ‘நாங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்’
என்றும் கூறுவார்கள். மக்கா வந்தடைந்தால் மக்களிடம் யாசகம் கேட்பார்கள்.
இது குறித்தே அல்லாஹ், “(ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி
வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள்
மிகவும் நன்மையானது தக்வா (என்னும் இறையச்சமே) ஆகும்” என்ற வசனத்தை
இறக்கினான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: புகாரி 1523).
11- ஈமான். ஈமான் என்றால் நம்பிக்கை. அல்லாஹ்வையும், வானவர்களையும், தூதர்களையும், வேதங்களையும், மறுமை நாளையும், கழா கத்ர் எனும் விதியையும் நம்புவதே ஈமானாகும்.
இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர்
(வாகனமேதுமின்றி) நடந்துவந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ‘ஈமான்’ எனும்
இறைநம்பிக்கை என்றால் என்ன?’ என்று கேட்டார்.அவர்கள்,
‘ஈமான்’
எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய
தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப்
பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்’
என்று பதிலளித்தார்கள்.‘
இறைத்தூதர் அவர்களே!’ ‘இஸ்லாம்’
(அடிபணிதல்) என்றால் என்ன?’ என்று அவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள்,
‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும்
இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸக்காத்’ தை
வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்’ என்றார்கள்.அம்மனிதர்,
‘இறைத்தூதர் அவர்களே! ‘இஹ்ஸான்’ (நன்மை புரிதல் என்றால் என்ன?’
என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள்
பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வணங்குவதாகும். நீங்கள் அவனைப்
பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன்
அவனை வணங்குவதாகும்.)’ என்று பதிலளித்தார்கள்.அம்மனிதர்,
‘இறைத்தூதர் அவர்களே! மறுமை (நாள்) எப்போது வரும்?’ என்று கேட்கஇ நபி(ஸல்)
அவர்கள், ‘கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்,) கேட்பவரைவிட (அதாவது
உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்க மறுமை நாளின்
அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுகிறேன்:ஒரு (அடிமைப்) பெண்
தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில்
ஒன்றாகும்.காலில் செருப்பணியாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக
இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது
வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து
விஷயங்களில் அடங்கும்.
‘நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும்
என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கிறான்.
இன்னும், அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகிறான். தாம்
நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக)
அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும்
அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்’
(எனும் 31:34 வது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.) பிறகு அந்த மனிதர்
திரும்பிச் சென்றார்.நபி(ஸல்) அவர்கள் ‘அந்த மனிதரைத் திரும்ப
என்னிடம் அழைத்து வாருங்கள்!’ என்று கூறினார்கள். மக்கள் அம்மனிதரைத்
திரும்ப அழைத்து வரச் சென்றார்கள். எங்கேயும் காணவில்லை. பின்னர், நபி(ஸல்)
அவர்கள் ‘இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்
தாம். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர்
வந்திருந்தார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்
: புகாரி
12- கிப்லா. கிப்லா என்றால் முன்னோக்குதல், முன்னோக்கும் திசை எனக் கூறப்படும். தொழுகையின் போது முன்னோக்கும் திசையை கிப்லா என்று சொல்லப்படும்.
"நீர்
எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில்
திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே
திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற)
மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும்,
எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி
பெறுவதுமே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 2:150)
13- பஜ்ர். பஜ்ர் என்பது அதிகாலையைக் குறிக்கும் . அதிகாலையில் தொழப்படும் தொழுகையை பஜ்ர்த் தொழுகை எனவும் குர்ஆன் குறிப்பிடுகின்றது.
"சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை தொழுகையையும், இன்னும் பஜ்ருடைய தொழுகையையும் நிலைநாட்டுவீராக." (அல்குர்ஆன். 17:78) 14- மன்னு ஸல்வா. மன்னு ஸல்வா என்றால்.மூஸா நபியின் சமூகத்தினர் வேண்டிய போது வானத்திலிருந்து அல்லாஹ் இறக்கிய இருவகை உணவை இது குறிக்கும். "இன்னும் உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம், மன்னு ஸல்வா( எனும் உண)வை உங்களுக்கு இறக்கி, நாம் உங்களுக்கு வழங்கிய பரிசுத்தமானவற்றிலிருந்து உண்ணுங்கள் (என்றோம்) எனினும் அவர்கள் எமக்கு அநியாயம் செய்துவிடவில்லை மாறாக அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டனர்." (அல்குர்ஆன்.2:57) 15- ரூஹ் . ரூஹ் என்றால். உயிர் என்று அர்த்தம். அல்குர்ஆனில் பல இடங்களில், ரூஹ் உயிர் ஆத்மா என்றும். ரூஹூல் குத்ஸ் பரிசுத்த ஆத்மா என்றும். இடம்பெற்றுள்ளன. "மர்யமின் மகன் ஈஸாவே! உம்மீதும், உமது தாய் மீதும் உள்ள எனது அருட்கொடைகளை நினைத்துப் பார்ப்பீராக! (ஜிப்ரீல் எனும்) ரூஹூல் குத்ஸைக் கொண்டு உம்மை நான் வலுவூட்டியபோது தொட்டில் பருவத்திலும்,வாலிபப்பருவத்திலும் நீர் மனிதர்களிடம் பேசியதையும், வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும்,இன்ஜீலையும் உமக்கு நாம் காற்றுத்தந்ததையும் (எண்ணிப்பார்ப்பீராக!) (அல்குர்ஆன். 5:110)
எல்லாம்
வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப்
போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும்
உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
No comments:
Post a Comment