Powered By Blogger

Wednesday, December 26, 2012

சொல் ,செயல்,அங்கீகாரம் இதுவே மனிதனின் வாழ்க்கை


 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
சொல் ,செயல்,அங்கீகாரம் இதுவே மனிதனின் வாழ்க்கை என்ற தலைப்பில் சிரு துள்ளி பெரும் வெள்ளம் என்ற நோக்கில் இக்கட்டுரையை இவ்விடத்தில் தரிசனம் செய்கின்றேன்.


“ஸிஹாஹ் ஸித்தஹ்” என்று கூறப்படும் ஆறு கிரந்தங்கள்.
1) புஹாரி
2) முஸ்லீம்
3) அபூதாவுத்
4) திர்மிதி
5) நஸயி
6) இப்னுமாஜா

அல்-ஹதீஸ்” என்பது நபி (ஸல்) அவர்கள்
சொன்னவை
செய்தவை
அங்கீகரித்தவை
இவை அனைத்தும் ஹதீஸ் எனப்படும்
இது திருக்குர் ஆனுக்கும் ஒரு விளக்கமாக அமைந்துள்ளது. இறை வேதத்துக்கு அடுத்தபடியாக கொள்ளத்தக்கது இதுவேயாகும்.


ஆறு ஹதீஸ் கிரந்தங்களின் இமாம்கள்,
1-ஸஹீஹூல் புஹாரி.இமாம் முஹம்மது இஸ்மாயீல் புஹாரி(ரஹ்) பிறப்பு ஹிஜ்ரி 194ல்
இறப்பு ஹிஜ்ரி 256ல் .
திரட்டியவை – 600,000.
தேர்ந்தவை-7563 ஹதீஸ்கள்.
நாடு:புகாரா, (ரஷ்யா)

2-ஸஹீஹ் முஸ்லிம்.இமாம் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்)
பிறப்பு ஹஜ்ரி 204ல் அல்லது 206ல்
இறப்பு ஹிஜ்ரி 261ல்
திரட்டியவை-300,000 .
தேர்ந்தவை-7563 ஹதீஸ்கள்.
நாடு: நைஷாபூர் ஈரான் (பாரசீகம்)

3-ஸூனனு அபீதாவூது. இமாம் அபூ தாவூது சுலைமான் அஸ்ஸஜஸ்தானீ
பிறப்பு ஹிஜ்ரி 202ல்
இறப்பு ஹிஜ்ரி 275ல்.
திரட்டியவை-500,000 .
தேர்ந்தவை-5274 ஹதீஸ்கள்.
நாடு: சிஜிஸ்தான் (இராக்)

4-ஜாமிவுத் திர்மிதீ. இமாம் அபூஈஸா முஹம்மது இப்னு ஈஸா திர்மிதீ(ரஹ்)
பிறப்பு ஹிஜ்ரி 209ல்
இறப்பு ஹிஜ்ரி 279ல்.
தேர்நதவை- 3956 ஹதீஸ்கள்.
நாடு: திர்மிதி (குராஸான்)

5-ஸூனனுந் நஸாயீ. இமாம் அபூ அப்துர்ரஹ்மான் அந்நஸாயீ
பிறப்பு ஹிஜ்ரி 215ல்
இறப்பு ஹிஜ்ரி 303ல்.
தேர்ந்தவை-5761 ஹதீஸ்கள்.
நாடு:நஸா (ஈரான்)
 
6- ஸீனனு இப்னுமாஜா இமாம் அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு யாசீர்
பிறப்பு ஹிஜ்ரி 209ல்
இறப்பு ஹிஜ்ரி 273ல் .
தேர்ந்தவை-4341 ஹதீஸ்கள்.
நாடு: ஆதர்பைஜான் (ஈரான்)
( ஸிஹாஹ் ஸித்தாவின் மொத்த ஹதீஸ்கள் – 34,458 ஹதிஸ்கள்)
 

இரு அருட்கொடைகளை நஷ்டத்திற்குள்ளாக்கக்கூடாது.
1) ‘ஆரோக்கியம்,
2) "ஓய்வு நேரம் ஆகிய இந்த இரண்டு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்’
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி)

முஸ்லிம்களில் சிறந்தவர்கள் யார்.
‘உங்களில் (முஸ்லிம்களில்) சிறந்தவர்கள் யார் எனில், யார் குர்ஆனைக் கற்று, (பிறருக்கும்) கற்றுத் தருகிறார்களோ அவர்கள்’ (அறிவிப்பவர் : உதுமான் (ரலி), நூல்: புகாரி)

காலத்தைத் திட்டுவது
‘காலத்தைத் திட்டுவதன் மூலம் மனிதர்கள் எனக்கு தீங்கிழைக்கிறார்கள். காலத்திற்குச் சொந்தக்காரன் நானே! இரவையும் பகலையும் மாறி வரச்செய்பவனும் நானே! என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்’ (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர்.
நீதிபதிகள் மூன்று வகைப்படுவர்: அவர்களில் ஒரு வகையினர் சுவனத்திற்கும், இரு வகையினர் நரகத்திற்கும் செல்வர்: உணமையை அறிந்து அதன் படி தீர்ப்பு வழங்கியவர் சுவனம் செல்வர். உணமையை அறிந்திருந்தும் அநீதமாக தீர்ப்பு வழங்கியவரும், உணமையை அறியாமலேயே தீர்ப்பு வழங்கியவரும் நரகம் புகுவார். (அறிவிப்பவா : புரைதா (ரலி), நூல் : அபூதாவுது)

மனிதன் மரணித்த பின்பும் பயன் தரக் கூடியது.
‘மனிதன் இறந்து விடடால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அமல்கள் அனைத்தும் அவனை விட்டும் துண்டிக்கப்படுகின்றது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று விஷயங்கள் 1) நிரந்தர தாமம் 2) பயன் தரும் கல்வி 3) இறந்தவருடைய சாலிஹான பிள்ளைகள் செய்யும் துஆ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)

இரு விஷயங்கள் ஒருவரிடம் இருந்தால்
1) இறை நெறியை மேற்கொள்வதில் தன்னைவிட மேலானவரைப் பார்த்தல்
2) உலக வசதிகளைப் பொருத்தவரை தன்னை விடக் கீழானவரைப் பார்த்து இறைவனுக்கு நன்றி செலுத்துதல் (திர்மிதி)


எல்லாவற்றையும் விட சிறந்த செல்வம்
இறைவனை நினைவு கூறும் நாவு.
இறைவனுக்கு நன்றி செலுத்தும் உள்ளம்.
இறை வழியில் நடந்திட கனவனுக்கு உதவிடும் நம்பிக்கையுள்ள மனைவி. (திர்மிதி)

ஐந்து கேள்விகளுக்கு விடைதராமல் மனிதன் மறுமையில் இறைவனின் நீதி மன்றத்திலிருந்து அகன்று செல்ல முடியாது.
1) வாழ்நாளை எப்படி கழித்தான்.
2) வாலிபத்தை எவ்வாறு கழித்தான்.
3) எவ்வாறு செல்வத்தை ஈட்டினான்.
4) அந்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான்.
5) அவன் அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டான். (திர்மிதி)


முனாஃபிக்குகளின் அடையாளங்கள் .
பேசினால் பொய் கலந்து பேசுவான்.
வாக்குறுதியை மீறுவான்.
நம்பினால் மோசடி செய்வான் (புஹாரி)

வாழ்நாள் அதிகரிக்கப்படவும், உணவு விஸ்தீரிக்கப்படவும் விரும்புகிறவர்கள்.செய்ய வேண்டியவை.
‘வாழ்நாள் அதிகரிக்கப்படவும், உணவு விஸ்தீரிக்கப்படவும் விரும்புகிறவர்கள் தம் சுற்றத்தினருடன் (உறவினர்களுடன்) நல்லுறவு பாராட்டுவாராக’ (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
(ஆதாரம் :புகாரி)

ஏழு நபர்களுக்கு மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்
1) நீதமான ஆடசியாளர்
2) அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த வாலிபன்
3) யாருடைய உள்ளம் அல்லாஹ்வின் பள்ளியை நினைத்த வண்ணம் இருக்கிறதோ அவர்
4) அல்லாஹ்வுக்காகவே விருப்பம் கொண்டு, சந்தித்து, பிரிந்த இருவர் 5) அழகும் அந்தஸ்தும் உள்ள பெண் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்த போது, நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர் 6) வலக்கரம் என்ன கொடுத்தது என்று தன் இடக்கரம் அறியாத அளவுக்கு இரகசியமாக தர்மம் செய்தவர்
7) தனிமையில் அல்லாஹ்வின் அச்சத்தால் கண்ணீர் மல்க அல்லாஹ்வை நினைவு கூர்பவர். (புகாரி)


ஒரு பெண் மணமுடிக்கப்பட வேண்டிய காரணங்கள்.
‘ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். அவளின் செல்வத்திற்காக, அவளின் அந்தஸ்திற்காக, அவளின் அழகிற்காக, அவளின் மார்க்கத்திற்காக. நீ மார்க்கப் பற்றுள்ளவளைத் தேர்ந்தெடுத்து அவளை மணமுடித்துக் கொள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

பொறாமை நல்லமல்களை அழித்து விடும்.
நெருப்பு விறகை அழித்து விடுவதைப் போல் பொறாமை நன்மையை அழித்து விடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அபூதாவுத்)

மறுமை நாளில் முஃமினின் தராசில் கணமாக இருக்கும் செயல்.
‘மறுமையில் ஒரு அடியானின் தராசில் நற்குணங்களைத் தவிர வேறெதுவும் கணமானதாக இருக்காது. அசிங்கமான கெட்ட வார்த்தை பேசுபவனை அல்லாஹ் வெறுக்கிறான்’ (அறிவிப்பவர் : அபுதர்தா (ரலி), ஆதாரம் : திமிதி மற்றும் அஹ்மத்)

பெருமை
‘எவனுடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவன் சொர்க்கம் செல்ல முடியாது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அப்போது ஒரு மனிதர் ‘என்னுடைய உடையும், என் காலனிகளும் அழகாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புவது பெருமையா?’ என்று கேட்டார். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘இறைவன் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறைப்பதும், மக்களை இழிவாகக் கருதுவதுமாகும்’ என விளக்கினார்கள். (அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம்: முஸ்லிம் மற்றும் திர்மிதி)

திருடன்.
‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தனது ருகூவையும், ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தாகள். (அறிவிப்பவர் : அபூகதாதா ரலி, நூற்கள் அஹ்மத், ஹாகிம், தப்ரானி)
 
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
 
அஹமட் யஹ்யா,
ஹொரோவபதான,
அனுராதபுரம்.
SRI LANKA.
 

No comments:

Post a Comment