Powered By Blogger

Tuesday, December 18, 2012

அவசியம் அறிய வேண்டும்.

 
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...அன்பின் சகோதர, சகோதரிகளே...
அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயர் கொண்டு ஆரம்பபம் செய்கின்றேன்.

பெண்களின் குணங்கள்.

குணங்களால் கோத்திரங்களை வெற்றி கொள்ள முடியும்.
     குணங்களால் தலைநிமிர்ந்து வாழ முடியும்.
        குணங்களால் முகத்தில் அழகைக் காணலாம்.
           குணங்களால் நல்லொழுக்கத்தைப் படைக்கலாம்.
              குணங்களால் குடும்பம் மகிழ்ச்சியாகும்.

                                   நேசிப்பதும் கை விடுவதும்
                                 பெண்களின் குணம் என்பார்.
                            ஆனால் அந்த குணத்துக்குப் பின்
ஒரு மனம் உண்டு அதுவே பெண் என்பவளுக்கு இருக்க வேண்டிய தன்மை குணத்திலும் மேலான குணம் பெண் பெண்ணாக இருப்பது.


(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும்,தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.(அல்குர்ஆன்24:30)

நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் என்ற நேர் எதிரான குணங்கள் உள்ளவனாக மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.

நல்ல செயல்கள் செய்யக் கூடியவர்களை நற்பண்பாளர் என்று போற்றப்படுவதுண்டு. தீய செயல்களை செய்யக் கூடியவர்களை மோசமானவன் என்று தூற்றப்படுவதுண்டு.

மனிதன் என்ற நிலையிலிருந்து ஒருவர் செய்யும் அனைத்துக் காரியங்களையும் முழுமையாக சரியாகச் செய்ய முடியாது. அதே போல் ஒருவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியான முடிவுகளாகவே அமையும் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் ஆதமின் சந்ததிகள் தவறிழைக்கக் கூடியவர்களாகவே படைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த அடிப்படையில் மனிதனிடம் இருக்கும் பண்புகள், குணங்கள் , தண்ணீரைக் கண்டால் பயிர்கள் எப்படிப் பசுமையாக நிமிர்ந்து நிற்கின்றதோ அதைப் போன்று மனிதனின் பண்புகள் குணங்கள் தலைநிமிர்ந்து நிற்பதையே நபியவர்கள் அவர்களின் வாழ்க்கையில் எண்ணிளடங்காத பண்புகளையும்,குணங்களையும் விதை போட்டு விதைத்துக் காட்டினாரகள், பெண் என்பவளுக்கு உதாரணமாக நபியவர்களின் அருமை மகள் பாத்திமா(ரலி)அவர்களை முன்னுதாரணமாக, பெண்களுக்கு பெண்மை சேர்க்கும் தேவதையாக, பெண்கள் பண்பால்,அன்பால்,குணத்தால், நடத்தையால் இப்படி என்ற கோட்டை வரைந்து காட்டவே அன்பையும்,பண்பையும், குணத்தையும் தன் மகளிடம் அல்லாஹ்வின் அருளால் வளர்த்தெடுத்தார்கள். இவர்களே சுவர்க்கத்தின் தலைவி என்ற பட்டத்தையும் பெற்றார்கள் என்றால் இது முழு உலக பெண்களுக்கும், பொக்கிஷம் என்று சொன்னால் இது மிகையாகாது.

இன்னும் ஒரு விஷயம் பெண்கள் மூலமாக வரக்கூடிய விபரீதம் குணம்அற்ற பெண்களே ஆடைகளில் காட்டும் ஒரு வகையான வேடிக்கை ஆண்கள் குற்றம் புரிவதற்குக் கூட பெண்களின் இந்த முறையற்ற ஆடைக் கலாச்சாரமும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. பெண்கள் தமக்குத் தாமே அழிவையும், இழிவையும் தேடிக்கொள்பவர்காக இருப்பது வேடிக்கைக்குரியது. பாதுகாப்புக் கவசத்தையே துளையிட்டு உபயோகிப்பதாகவே இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலைமையும் உள்ளது. அதாவது சல்வார் என்பது கூட ஒரு ஒழுக்கமான ஆடை தான் அதையே மிகவும் இறுக்கமாக இடுப்பு வரை பிளந்து காற்றில் பறக்க அணிகின்றனர். ஹபாயா என்பது கூட நவீன பெஷனாக மாறியுள்ளது. அதனையும் மிக இறுக்கமாக அணிந்து தலையை மட்டும் மெல்லிய துணியால் காயத்துக்கு போட்ட பெண்டேஜ் மாதிரி சுற்றி மூடிவிடுகின்றனர். மற்ற மறைக்க வேண்டிய பகுதிகளை மறைக்க மறந்து விடுகின்றனர். அல்லாஹ் இட்ட கட்டளையையும் சேர்த்தே மறந்து விடுகின்றனர் என்பதை நற்குணம் உள்ள பெண்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

சமூகத்தின் இன்னொரு அங்கமான பெண்களுக்கு வழி காட்ட வேண்டிய தேவை, அதாவது தான் சார்ந்த சமூகம் மட்டுமின்றி, ஏனைய சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மத்தியில் இஸ்லாத்தின் வேறுபாட்டை உணர்த்திக் காட்டுவதன் மூலம், இஸ்லாத்திற்கும் ஏனைய சமூகத்திற்கும் பாலம் அமைக்கும் பெரும் பணியைச் செய்யக் கூடியவர்களாக முஸ்லிம் பெண்கள் திகழ வேண்டியது கட்டாயமாகும்.

எங்கெல்லாம் முஸ்லிம் பெண்கள் சமூகமளிக்கின்றார்களோ, அங்கு சமூகச் சீர்திருத்தத்தைக் காண முடியும். வழிகாட்டியாக, கல்வியறிவு ஊட்டுபவளாக, தன் சொல்லாலும் செயலாலும் சமூக சீர்திருத்தத்தை உருவாக்கக் கூடியவளாக ஒரு பெண் இருக்க வேண்டும்.


"மறுமை நாளின் பொழுது எனக்கு மிகவும் பிரியத்திற்கும் சிநேகத்திற்கும் உரியவர்கள் யாரென்றால், உங்களில் நற்குணம் உள்ளவர்களே" என்று இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள். இன்னும் "மறுமை நாளில் என்னுடைய வெறுப்பிற்குள்ளாகி எனக்கு மிகவும் தூரமாக்கப்படுகின்றவர்கள் பெருமையும் கர்வமும் கொண்டு திரிவோர்தாம்" என்றார்கள். (பத்ஹுல் பாரி 10-456). முஸ்லிம் 15-78. )

நபி(ஸல்) அவர்களின் அறிவுரைகளை நபித்தோழர்களும் நபித்தோழியரும் செவிமடுத்ததோடு மட்டுமல்லாமல், நபி (ஸல்) அவர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையில் அதனை எவ்வாறு நிறுவிக் காட்டினார்கள் என்பதனையும் அவர்கள் தங்கள் கண்களாலேயே கண்டார்கள்; பாடம் படித்துக் கொண்டார்கள். எனவே அவர்கள் அனைவரும் நபி(ஸல்) அவர்களது அறிவுரைகளுக்குக் கட்டுப்பட்டார்கள். இன்னும் அதனைத் தங்களது வாழ்க்கையிலே பேணி நடந்து முழு மனித சமூகத்திற்குமான முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியும் சென்றார்கள். அவர்கள்தாம் நேர்வழி பெற்ற முன்மாதிரிச் சமூகம். இன்றும் சரி.., என்றும் சரி..,

ஒருமுறை அபூதர்(ரலி) அவர்களைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''ஓ அபூதர்..! மிக எளிதாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதும் ஆனால் எடைத்தராசில் அதிக கனமானதுமான இரண்டு நற்பண்புகளைப் பற்றி நான் கூறட்டுமா?" என வினவினார்கள். "நிச்சயமாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களே கூறுங்கள்" என்றார் அபூதர் (ரலி) அவர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நீங்கள் பிறரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். அமைதியை நீட்டித்துக் கொள்ளுங்கள். எனது உயிர் யார் கைவசம் உள்ளதோ (அவன் மீது சத்தியமாக), மேற்கண்ட இரண்டைக்காட்டிலும் மிகச் சிறந்ததொன்றை மக்களில் எவரும் அடைந்து கொள்ள முடியாது"

ஒரு முஸ்லிம் பெண்மணி தன்னைச் சார்ந்த சமுதாயத்தவர் அனைவரிடமும் வாய்மையுடன் நடந்து கொள்வாள். ஏனென்றால் அவள் இஸ்லாமிய அடிப்படையின் கீழ் வாழக் கூடியவள்; அதனைக் கற்றறிந்தவள். அவள் கற்றறிந்திருக்கின்ற அவளது மார்க்கப் போதனைகள் யாவும் அவளை வாய்மையுடன் வாழவே பயிற்றுவித்திருக்கின்றன. அவ்வாறு வாழ்வதே அவளுக்கு உற்சாகம் அளிக்கின்றது. அதேநேரத்தில் பொய்யாக நடப்பதும் பேசுவதும் தீமையானது; கெட்டது. உண்மையில் வாய்மை என்பது நல்லவற்றை நோக்கிக் கொஞ்சங் கொஞ்சமாகக் கொண்டு சென்று, இறுதியில் சுவனத்தை அதன் பரிசாகப் பெற்றுத் தரும், ஆனால் பொய்மையோ தீமையின் பக்கம் அழைத்துச் சென்று இறுதி இருப்பிடத்தை நரகத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
"உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார்".
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.
(புகாரீ 6094)

எனவே பெண் என்பவள் ஆணின் விலா எழும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஆண்களை விட பெண்கள் எல்லா விஷயங்களிலும் வித்தியாசமானவள், ஆண்களுக்கும்,பெண்களுக்கும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகவே இருக்கும். ஆண்களுக்கு இருக்கும் சக்தி பெண்களுக்கு இருக்காது, ஆண்களுக்கு இருக்கும் தனிப் பயணம் பெண்களுக்கு இருக்காது அவளுக்கு துணைப் பயணம் அவசியம் இப்படி ஒவ்வொன்றிலும் பெண் என்பவள் அவளுக்கு சில கட்டுப்பாடுகள் அவளுக்குள்ளே அமைகின்றது மானத்துக்கும், மரியாதைக்கும் அடிப்படைதான் பெண் என்பவள். அவளுக்கு நல்ல குணம் வேண்டும், பண்பாடு வேண்டும், மனிதனோடு பேசும் நாகரீகம் வேண்டும். மொத்தத்தில் பெண் பெண்ணாக இருக்க வேண்டும்..


  மறுமையின் நாளும் மனிதனும்,

பல விசயங்களை இலக்காக கொண்டு வாழும் நாம் நமது விருப்பங்களை அடைவதற்காக அல்லும் பகலுமாக பாடுபட்டுவருகிறோம். இந்நேரத்தில் நமது குறிக்கோளுக்கு முட்டுக்கட்டையாக ஏதாவது நடந்துவிட்டால் தலை வெடித்து சிதைந்து போகும் அளவிற்கு கவலை கவ்விக்கொள்கிறது.
உலக வாழ்க்கையோடு மறுமை வாழ்க்கையை அஞ்சக்கூடியவர்கள் எத்தனை பேர் என்று எவராலும் முழுமையாகச் சொல்ல முடியாது. காரணம் ஆக்கின்றவன் அல்லாஹ்,அழிக்கின்றவன் அல்லாஹ்.இந்த அடிப்படையில் மறுமை வாழ்க்கையில் மனிதன் என்ற இரு பாலாரும் ஆண்,பெண் என்ற இருவரும் இவ்வுலகில் தன் வாழ்க்கையை நேராக,சீராக அமைத்தால் மறுமையில் உள்ள பொக்கிஷங்களை உணர முடியும். இன்றைய நவீனயுகம் என்று சொல்லக்கூடிய இந்த பொய்யான உலகில் பெண்களின் நிலை என்று சொல்லக்கூடிய ஒரு சிறிய தலைப்பை எடுத்தால் ஏறாழமான வரிகளை எழுதிக் குவிக்கலாம் காரணம் அந்த அளவுக்கு மறுமையை மறந்து அந்நிய கலாச்சாரப் பெண்கள் எப்படியெல்லாம் நாடகம் ஆடுகின்றார்களோ அதே வடிவில் இஸ்லாமிய பெண்கள் உலா வருவதை யாரும் மறுக்கவோ,மறக்கவோ முடியாத விஷையம். இதற்கெல்லாம் யார் பொறுப்புதாரிகள். யாரின் வயிற்றில் பத்து மாதம் இருந்து இவ்வுலகை வந்தடைந்து உம்மா,வாப்பா என்று முகம் பார்த்து பேசினதோ,சிரித்ததோ அதே உம்மா,வாப்பாதான் இவர்களுக்கு பொறுப்புதாரிகள் என்பதை மறவாதீர்கள்.

ஒவ்வொரு முஸ்லிமுடைய தெளிவான குறிக்கோள் இந்த மறுமை வெற்றியேயாகும். ஏனெனில் இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானது கிடையாது. ஆனால் மறுமை வாழ்க்கையோ முடிவில்லா நிரந்தரம். இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்ற முடிவு நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அதை சுவைத்தே ஆக வேண்டும். உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறந்து போனார்கள்…. நேற்று இருந்தவன் இன்று இல்லை, இன்று வாழக்கூடியவர்கள் அனைவரும் நிச்சயம் ஒரு நாள் மரணித்தே தீருவார்கள். அல்லாஹ் ஏற்படுத்திய நியதி இது ,அது நிச்சயம்


எல்லா நிலைகளிலும் ஏற்றுக்கொண்ட ஈமானில் உறுதியாக இருப்பது மிகவும் அவசியமானதாகும். உறுதியான நம்பிக்கைக் கொண்டு, அதில் நிலையாக நிற்க கூடியவர்களையே அல்லாஹ் வெற்றியாளர்கள் என கூறுகிறான்.
வானத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தரக் கூடியதோ நிலத்தில் தங்கி விடுகி றது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான். (அல்குர்ஆன் 13:17)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களை அடித்துக்கொண்டிருப்பவர்களாவார்
கள். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள் நடப்பார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள்.
அறிவிப்பவர் ; அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (3971)
 

மறுமை நாளின் அடையாளங்கள்.

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777, 50

வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவுநாளின் அடையாளங்களில் ஒன்று” என நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777

யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்
நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று நபியவர்கள் அவர்கள் கூறிய போது ’எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ’தகுதியற்றவர்களிடம் ஒருகாரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 59, 6496

காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று)ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபியவர்கள் காட்டிய அடையாளம்.
நூல் : திர்மிதீ 2254)

நபி (ஸல்) அவர்கள் ‘(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். ‘ஹர்ஜ்’ பெருகிவிடும்” என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘கொலை, கொலை” என்று பதிலளித்தார்கள்.
அபூஹுரைரா (ரலி).
புஹாரி : 7061

கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
நூல் : புகாரி 85, 1036, 6037, 7061

பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள். என்று நபி(ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 3971, 5098

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று
நபி(ஸல்) கூறினார்கள்.
நூல்: ஹாகிம் 4/493

உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால்,நீங்களும் நுழைவீர்கள்” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது
யூதர்களையும், கிறித்தவர்களையுமா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர்.அதற்கு நபி(ஸல்) அவர்கள் ’வேறு யாரை (நான்
குறிப்பிடுகிறேன்)” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3456, 7319

நபி(ஸல்) அவர்கள் பத்து
விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
1 - புகை மூட்டம். 2 - தஜ்ஜால். 3 – (அதிசயப்) பிராணி.
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது. 5 - ஈஸா (அலை) இறங்கி வருவது. 6 - யஃஜுஜ், மஃஜுஜ். 7 - கிழக்கே ஒரு பூகம்பம்.
8 - மேற்கே ஒரு பூகம்பம். 9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்.
10 - இறுதியாக ஏமனி’லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்.
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162.


மறுமை நாளின் அடையாளங்கள், அந்த நாளின் அமலி துமலிகள், ஒரு மனிதன் இவைகளை நம்ப வேண்டும்.


திருமணம்.

இஸ்லாமிய மார்க்கத்தில் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் வாழ்க்கை ஒப்பந்தமாகும். திருமணம் புரியவுள்ள ஆணும் பெண்ணும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் தங்களது பரிபூரண சம்மதத்தை தெரிவிக்க வேண்டியது மிக அவசியமாக வலியுறுத்தப்பட்ட விஷயமாகும்.

குணங்களில் அழகானவரே ஈமானில் முழுமையானவர். தன் மனைவியிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவரே உங்களில் சிறந்தவர் என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி),
நூல் : திர்மிதி, அஹ்மத்.


இளைஞர்களை திருமணத்திற்கு தூண்டும் வகையில் திருமணத்தினால் விளையும் நன்மைகளைப் பற்றியும் இஸ்லாம் பேசுகின்றது.மனிதனிடம் காணப்படும் உணர்ச்சிகளில் பாலுணர்வே மிகவும் பலமானது. அதைத் தீர்த்துக்கொள்வதற்கான இயல்பானதும், கௌரவமானதும். பாதுகாப்பானதுமான வழியாக திருமணம் அமைந்திருப்பதாக இஸ்லாம் கருதுகின்றது. குழந்தைச் செல்வத்தைப் பெறுவது திருமணத்தின் மற்றுமொரு விளைவாகும். உலக வாழ்வு நிலைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண் பெண் உறவையாகும். திருமணத்திற்கூடாக குழந்தைச் செல்வம் பெறப்படல் வேண்டும் என்பது ஒரு முக்கிய எதிர்ப்பார்ப்பு என்பதனாலேயே நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கக் கூடிய பெண்களை திருமணம் முடிக்குமாறு தூண்டினார்கள்.மனஅமைதியும் உளத்திருப்தியும் திருமணத்தின் மூலம் எதிர்ப்பார்க்கப்படும் மற்றுமொரு நன்மையாகும். எந்த மனிதனும் வாழ்க்கைத்துனையின்றி மனஅமைதியை பெறுவது சிரமசாத்தியமானதாகும். ஓர் ஆணும் பெண்ணும் திருமணத்திற்கூடாக இணைகின்ற போதே இருவரது வாழ்வும் நிறைவு பெறுகின்றது.
 

நீ நல்லொழுக்கமுள்ளவளை மணம் புரிவதன் மூலம் வெற்றியடைந்துகொள்! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி)
நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)

பெண்களை அவர்களின் அழகுக்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் அழகு அவர்களை அழித்துவிடலாம்; அவர்களின் செல்வத்திற்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் செல்வம் அவர்களை தவறச் செய்திடலாம்; நல்லொழுக்கத்திற்காக அவர்களை மணமுடியுங்கள்; நல்லொழுக்கமுள்ள அழகற்ற கருநிறத்து அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள பெண்ணைவிட) மேலானவள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பு: இப்னு அம்ர்(ரழி)
நூல்: இப்னு ஹிப்பான், அஹ்மத்)

எவருக்கு திருமண வயது வந்து விட்டதோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவரது கண்களையும், வெட்கஸ்தலங்களையும் பாதுகாக்கும் அரணாக அமைகிறது. எவருக்கு திருமணம் செய்ய வசதிபடவில்லையோ அவர் நோன்பு வைத்துக்கொள்ளட்டும். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்(ரழி)
நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மத்)

எங்கள் மனைவிக்கு நாங்கள் ஆற்றவேண்டிய கடமைகள் யாவை? என நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது 'நீ உன்ணும்போது அவளுக்கும் உணவளிக்க வேண்டும்; நீ ஆடை அணியும்போது அவளுக்கு ஆடை அணிவித்தல் வேண்டும்; அவளது முகத்தில் அடித்தலாது' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா(ரழி) நூல்: அபூதாவூத்)


அடுத்தபடியாக பெண் மஹரை நிர்ணயிப்பது மிகவும் முக்கியமான அம்சமாக உள்ளது. இந்த மஹரை நிர்ணயிப்பது மணம் செய்து கொள்ளக் கூடிய பெண்ணின் தனி உரிமையாக உள்ளது. இதை அந்தப் பெண் விரும்பினால் விட்டுக் கொடுக்கலாம். தான் விரும்பியதை கேட்கவும் செய்யலாம். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: “நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள்.” (அல்குர்ஆன் 4:4).

உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்குதிருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1.அவளது செல்வத்திற்காக.
2.அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3.அவளது அழகிற்காக.
4.அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவே,மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
அறிவிப்பாளர்.அபூஹுரைரா (ரலி) அவர்கள்
( நூல்.புகாரி – 5090)
 

மேலே கூறப்பட்ட அல்குர்ஆன்,அல்ஹதீஸின் விளக்கங்களை நோக்கும் போது சில உண்மைகளை நிச்சயம் புறிந்து கொள்ளலாம்.
1- வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்லொழுக்கமுள்ளவளைத் திருணம் செய்து கொள்ள வேண்டும்.
2- எண்ணம் என்ற ஒன்றால். அழகு, செல்வம் என்பதற்காக மட்டும்மல்ல, இதில் நல்லொழுக்கம் அவசியம். அழகற்ற கருநிற அடிமைப் பெண் தீய ஒழுக்கமுள்ள பெண்ணை விட மேலானவள்.
3- யாருக்கு திருமண வயது வந்து விட்டதோ அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்..அது அவர்களின் பார்வைக்கும்,வெக்கஸ்தளங்களுக்க
ும் பாதுகாப்பாகவும், சக்தியற்றவர் நோன்பு பிடிக்கட்டும் என்றும் திருமணத்துக்கு உச்சாகம் ஊட்டுகின்றது.
4- ஒரு மனைவியை அவன் பெறும் போது அவளுக்கு அவன் செய்ய வேண்டிய கடமைகள் அவன் உண்ணும் போதும்,உடுக்கும் போதும் அவளுக்கும் சரிசமமாக நிறைவேற்ற வேண்டும்.அவளின் முகத்தில் அடிக்கவும் கூடாது.
5- பெண்ணுக்கு மஹரை நிர்ணயிக்கும் பொறுப்பும்,உரியையும் பெண்ணுக்கே உரியது. அவளின் மஹரை மனமகன் மனமுடனும்,மகிழ்வுடனும் கொடுக்கவேண்டும்.
6- வாழ்க்கைத் துணையில்லாதவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்.இது பெற்றோரின் பொறுப்பு இதனால் அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான்.
7- நபியவர்களின் சாபம். ஒரு பெண்ணை அவளின் அழகுக்காக,செல்வத்துக்காக, குடும்பப் பாரம்பரியத்துக்காக, நல்லொழுக்கத்துக்காக மட்டும் மணந்து கொள்ள வேண்டும். இவைகள் அல்லாமல் இருந்தால் அவனுக்கு நபியவர்கள் சாபமிட்டார்கள். இதில் உள்ளச்சம் அவசியம்.. வாழப்போவது இருவருமே.


எந்தப் பெண் கிடைத்தாலும் கட்டிக் கொள்ளலாம் என்ற இலக்கற்ற நிலையில் திருமணத்திற்கு தயாராகி விடாதீர்கள். உங்களுக்கு வாழ்க்த்துணையாக வருபவள் உங்களில் பாதியாக வாழப்போகிறவள் என்பதை கவனத்தில் வையுங்கள். திருமணத்திற்கு முன் மனைவியாக வருபவள் யார்? என்பதை கவனியுங்கள்.

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. (அல் குர்ஆன் 2:188)

"உங்களிலிருந்து உங்களுக்கான ஜோடியைப் படைத்து அதனிடம் நீங்கள் அமைதி காணுமாறு அமைந்திருப்பது அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும். உங்களிடையே அன்பையும் இரக்கத்தையும் அவன் ஆக்கி யுள்ளான்" (அல்குர்ஆன். 30: 21)

மேலே கூறப்பட்ட பெண்களின் குணங்கள், மறுமை நாளின் அடையாளங்கள், திருமணம் .இந்த மூன்று விஷயங்களில் கூறப்பட்டது ஒரு உண்மையான முஃமின் இவைகளையும் அறிந்து,புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக . காரணம் இவை போன்ற தலைப்புக்கள் நாள்தோறும் கோர்வை செய்தாலும் மனிதன் ஏதோ ஒரு வகையில் கண்டும் காணாமலும் தன் வழிப்பாதையை அமைத்துக்கொள்கின்றான். ஆனால் இஸ்லாம் என்பது போதனையில் வளர்ந்தது, அதை அறிய வேண்டியது மனிதனின் கடமைகள்.
எனவே பெண்கள் பெண்களாகவும், உலகில் வாழுகின்ற மனிதன் மறுமைக்கு தயார் செய்து கொள்ள அதன் அடையாளங்களையும் தினமும் அறிந்தவனாகவும், மனிதனை அல்லாஹ் ஜோடியாகப் படைத்தான் இந்த இரு ஜோடிகளும் அவர்களுக்கு ஜோடிகளைத் தேடிக்கொள்வதும் அந்தத் திருமணம் என்ற ஒப்பந்தத்தில் அவர்களுக்கு உள்ள கடமைகளையும் உரிமைகலையும் உணர்நது திருமணம் என்ற இன்பத்தை அடைய வேண்டும் . அல்லாஹ் நமக்கு நல்லருள் புரிவானாக
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
****************************************
 

அஹமட் யஹ்யா,
ஹொரோவபதான,
அனுராதபுரம்.
SRI LANKA.
((((((((((((((((((((((((((((********))))))))))))))))))))))