Monday, January 21, 2013

அஞ்சுவோம்,அடிபணிவோம்..: ஒரு நாள் வரும்...

அஞ்சுவோம்,அடிபணிவோம்..: ஒரு நாள் வரும்...: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.. அல்லாஹ்வின் பெயர் கொண்டு இத்தொடரை இவ்விடத்தில் தரிசனம் செய்கின்றேன்.. அறியாமை எனும...

Sunday, January 20, 2013

ஒரு நாள் வரும்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..
அல்லாஹ்வின் பெயர் கொண்டு இத்தொடரை இவ்விடத்தில் தரிசனம் செய்கின்றேன்..

அறியாமை எனும் இருட்டில் இருந்துகொண்டு செய்யக்கூடிய காரியங்களை இஸ்லாத்தின் வெளிச்சத்தில் அலசவும், அல்லாஹ்வை நினைவு கூறுவதும் இக்காலம் மட்டுமல்ல எக்காலத்துக்கும் ஒவ்வொரு முஃமினுக்கும் கடமையிலும் கடமை .

 • வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். (அல்குர்ஆன் - 32:5)

கியாம நாளில் நிகழும் காரியங்களைக் குறித்தும் கூறும் போதும் குர்ஆன் 'நாள்' (யவ்ம்) என்னும் பதத்தையே உபயோகப்படுத்தியுள்ளது.

 • அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.  ( அல்குர்ஆன் - 101:4-5)
 • இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.  (அல்குர்ஆன் - 14:48)
 • அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். ( அல்குர்ஆன் - 99:6)   
 • ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான். ( அல்குர்ஆன் - 89:25)   
 • அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். (அல்குர்ஆன் - 88:2-3)   
 • இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில். (அல்குர்ஆன் - 86:9)   
 • அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள். ( அல்குர்ஆன் - 83:6)   
 • அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. (அல்குர்ஆன் - 82:19)   
 • அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் - தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;, தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்- அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். (அல்குர்ஆன் - 80:34-37)   
 • அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். (அல்குர்ஆன் - 79:35)
 • 'பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;' (அல்குர்ஆன் - 79:6)
 • ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார். (அல்குர்ஆன் - 78:38)   
 • நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவறற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் ''அந்தோ கைசேதமே! நான் மணண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!'' என்று (பிரலாபித்துக்) கூறுவான். (அல்குர்ஆன் - 78:40)   
 • அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக. (அல்குர்ஆன் - 78:39)    

ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :- அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணை
ந்து, பள்ளியில் தொழுதீர்களா?

  ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?

*   இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?

விழித்தது முதல் தூங்கும் வரைக்கும் உங்கள் நாவால் யாரையாவது துன்புறுத்தினீர்களா.? அப்படி இருந்தால் அவர்களிடம் சென்று அதற்குப் பரிகாரம் பெற்றீர்களா.?

புறம் இஸ்லாத்தில் ஹராம் இதை எச்சரிக்கும் குர்ஆன் வசங்களைப் பார்த்து உங்கள் உள்ளம் ஆச்சரியம் அடைந்ததா? அப்படி அடைந்தால் அது தான் நமக்கு அருள்.

  ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?

*   தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?

*   தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா?

*   மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா?

  மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா?

  யா அல்லாஹ்..! என்னை அந்த சுவனத்தினுள் பிரவேசிக்க அனுமதிப்பாயாக..! என்று மூன்று முறை கூறினீர்களா?ஏனென்றால், ''யா அல்லாஹ், என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக - என்று மூன்று முறை கூறினால், அந்த சுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ், அவன் அல்லது அவளை என்னுள் நுழைந்து விட அனுமதிப்பாயாக..! (என்று சுவனம் அல்லாஹ்விடம் மன்றாடுகின்றது). (திர்மிதீ)

*   இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழி ஒன்றையேனும் இன்று வாசித்தீர்களா?

  தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அத்தகைய தீங்கினைச் செய்து கொண்டிருப்பவர்களிடமிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா?

  தேவையில்லாத அதிகமான சிரிப்பு, அதிகமான ஜோக்குகள் இவற்றினைத் தவிர்ந்து வாழ முயற்சித்தீர்களா?

  செவிப்புலனையும், பார்வையையும், சிந்திக்கும் திறனையும் இன்னும் இது போன்ற எண்ணற்ற அருட்கொடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் அல்லாஹ்விற்கு, தினமும் நன்றி கூறிக் கொண்டிருக்கின்றீர்களா?

*   இன்றைய தினம் ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உணவளித்தீர்களா அல்லது அவர்களுக்கு உதவினீர்களா?

*   உங்களின் (தவறுகளின்) மீதும், அல்லாஹ்வின் பொருட்டும் உங்களை நீங்களே கடிந்து கொண்டீர்களா?

  பிறர் மீது கடுமையாக நடந்து கொள்வது அல்லது சுய விளம்பரத்துடன் நடந்து கொள்வதனின்றும் தவிர்ந்து கொண்டீர்களா?

  அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதீர்களா?

  ஃபஜ்ருத் தொழுகை அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வினை நினைவு கூர்ந்தீர்களா?

*   நீங்கள் செய்து விட்ட பாவங்களுக்காகவும், இன்னும் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காகவும்,இஸ்திஃக்ஃபார் என்ற பாவ மன்னிப்புக் கோரினீர்களா?

  இறைவா..! உன்னுடைய உவப்பிற்குரிய வழியில், ''ஷஹீத்"" என்ற அந்தஸ்தில் நான் மரணமடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் மனமுருகி வேண்டிக் கொண்டீர்களா? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எவரொருவர் அல்லாஹ்விடம் நேர்மையான முறையில் தான் ஷஹீத் என்ற அந்தஸ்தில் மரணமடைய வேண்டும் என்று விரும்பிக் கேட்கின்றாரோ, அவ்வாறு பிரார்த்திக்கும் அவன் அல்லது அவளின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான், அவன் அல்லது அவள் - அவர்களுடைய படுக்கையில் மரணமடைந்தாலும் சரியே..! (முஸ்லிம்)

*   மார்க்கத்தில் என்னுடைய இதயத்தை நிலைத்திருக்கச் செய்வாயாக என்று பிரார்த்திப்பதுண்டா?

  உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்கள் என்று சில நேரங்கள் உண்டு. அந்த நேரங்களில் நீங்கள் அல்லாஹ்வினிடத்தில் பிரார்த்தித்ததுண்டா?

*   இஸ்லாமிய மார்க்க அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு, புதிய இஸ்லாமிய நூல்களை வாங்கினீர்களா?

  இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் அல்லது மரணித்தவர்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரினீர்களா? ஏனென்றால் அவ்வாறு நீங்கள் செய்கின்ற பிரார்த்தனை ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குகின்றான்.

*   இஸ்லாம் என்ற அருட்கொடையை என்மீது அருளியதன் காரணமாக என்னை முஸ்லிமாக உருவாக்கியவனே.. உனக்கே நன்றிகள் பல என்று அவனது அருட்கொடைகள் பற்றி நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினீர்களா?

*   உங்களது சகோதர மற்றும் சகோதரிகளை அல்லாஹ்விற்காக மட்டுமே அவனது திருப்பொருத்ததினை நாடி சந்தித்ததுண்டா?

*   மக்களையும், உங்களது குடும்பத்தாரையும், உங்களது சகோதர, சகோதரிகளையும் அல்லது அண்டை அயலார்களையும் இன்னும் உங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைத்து அழைப்புப் பணி புரிந்தீர்களா?

*   உங்களைப் பெற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொண்டீர்களா?

*   இன்றைய தினத்தில் ஒரு பிரச்னையைச் சந்தித்து, அதன் பின்னர் : ''இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"" (அவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது) என்று கூறினீர்களா?

  யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்.""

  இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான். பிரார்த்தித்தீர்களா?

  மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.""

*   யா அல்லாஹ்! இந்த செய்திகளை மற்ற வர்களுக்கு எத்தி வைப்பத்தோடு நின்று விடாமல் எங்கள் வாழ்விலும் பின்பற்றி, உன் பொருத்தத்தை அடைத்து, அந்த கடுமயான விசாரணை நாளில் எங்கள் அனைவதராயும் சுவன வாதிகளாத எழுப்புவாயாக!

எனவே...எனவே... எனவே... எனவே.. எனவே.....சற்று சிந்திப்போம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.

 

அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,
அனுராதபுரம்.
SRI LANKA.


Thursday, January 10, 2013

இஸ்லாம் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உண்டு:


 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..
அல்லாஹ்வின் பெயர் கொண்டு இத்தொடரை இவ்விடத்தில் தரிசனம் செய்கின்றேன்..


இஸ்லாம் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உண்டு:

(1) அமைதி, சமாதானம்
(2) ஓரே இறைவனுக்கு முழுமையாக அடிபணிதல்


அண்ட சராசரங்களையும் படைத்து பரிபாலிக்கும் ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவன் இட்ட கட்டளைகளுக்கு முழுமையாக அடிப்பணிந்து ஒருவன் வாழும்பொழுது அவன் இவ்வுலக வாழ்க்கையிலும் மரணத்திற்கு பின்னுள்ள நிரந்தரமான வாழ்க்கையிலும் சமாதானமாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறான்.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ அவர் மகத்தான பாக்கியத்தை அடைந்து விட்டார். (33.71,24:52.)

எவர் அல்லாஹ்வின் தூதருக்குக் கீழ்படிகிறாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்தவர் ஆவார். (4:30)

இத்தூதருக்கு வழிப்படுங்கள் உங்கள் செயல்களை நீங்கள் வீணாக்கிவிடாதீர்கள். (47:33)

இங்கு மேலே சொல்லப்பட்ட அல்குர்ஆன் வசனங்கள் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டுமென்பதை உணருகிறோம்.

ஹதீஸ் என்றால் என்ன?

அல் ஹதீஸ் என்பது நபி (ஸல்) அவர்கள் சொன்னவை, செய்தவை, மற்றவர்கள் செய்யும்போது அங்கீகரித்தவை ஆகியவற்றை குறிக்கும்.

இவை நபி(ஸல்)அவர்களின் குடும்பத்தார்களான அஹ்லுல் பைத்துக்களாலும், தோழர்களான சஹாபாக்களாலும் குறித்து வைக்கப்பட்டும் மனனம் செய்யப்பட்டும் பாதுக்காக்கப்பட்டது. பிற்காலத்தில் வந்த இமாம்களால் இவை நூல் வடிவில் தொகுக்கப்பட்டது.

இந்த நூல்களில் மிக ஆதாரப்பூர்வமானவை:-
புகாரி,
முஸ்லிம்,
அபூதாவூத்,
திர்மிதி,
இப்னு மாஜா,
நஸாயி
எனும் ஆறு கிரந்தங்களாகும். இதற்கு அறபியில் "ஷீஆஉ ஸித்தா" என்று சொல்லப்படும்.


ஹதீஸ் குதுஸி என்றால்?
அல்லாஹ் சொல்கிறான் என்று முன்னுரையிட்டு நபி(ஸல்) அவர்கள் சொல்லும் பொன்மொழியாகும். இந்த தகவல் குர்ஆனில் இருக்காது.

அல்குர்ஆனும், ஹதீஸூல் குத்ஸியும்..

அல்குர்ஆன் என்பது அல்லாஹ்விடமிருந்து ஜிப்ரீயில்(அலை)அவர்கள் மூலமாக நபி(ஸல்)அவர்களுக்கு வஹியின் மூலம் அருளப்பட்டது. உதாரணமாக அல்லாஹ் கூறுகின்றான்.. இதைப் போன்ற ஒரு அத்தியாயத்தையாயினும் கொண்டு வந்து காட்டுங்கள் என அல்குர்ஆன் சவால் விட்டது. அந்த சவால் அன்று தொட்டு இன்று வரைக்கும் முறியடிக்கப்படாமல் தொடர்கின்றது என்றால் இது ஒரு அற்புதமாகும்.

ஹதீஸூல் குத்ஸி இந்த சவாலுக்கு அடங்காது. அந்த வார்த்தைகள் அல்லாஹ் சொன்னதாக நபி(ஸல்)அவர்கள் கூறியது. ஹதீஸூல் குத்ஸியைப் பொறுத்தவரையில் அவற்றின் கருத்து வஹி மூலம் பெறப்பட்டது.ஆனால் அந்தக் கருத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் நபி(ஸல்)அவர்களது தெரிவாகும்.

இதனால் தான் ஹதீஸையும், ஹதீஸூல் குத்ஸியையும் அறிவிக்கும் போது நபி(ஸ்ல) அவர்கள் பயன்படுத்திய அதே வார்த்தை மறந்து விட்டால் அல்லது தவறி விட்டால் நபியவர்கள் இந்த அர்த்தத்தில் பேசினார்கள் என்று கூறலாம். ஆனால் குர்ஆன் வசங்களைக் கூறும் போது அவ்வாறு கூற முடியாது.

நாம் ஏற்கனவே குறிப்பட்டது போன்று அல்குர்ஆனை ஓதுவது இபாதத்தாகும். ஆனால் ஹதீஸ், ஹதீஸூல் குத்ஸியை ஓதுவது இபாதத்தாகாது. அவ்வாறே தொழுகை போன்ற அமல்களில் ஹதீஸ்களை கிராஅத்துக்குப் பதிலாக ஓதவும் முடியாது.

இதனால் கீழே நபியவர்களை ஆரம்பமாக ஒருவர் வந்து நபியவர்களிடத்தில் இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன? இஹ்ஸான் என்றால் என்ன? என்ற ஹதீஸ் தொடரையும், அதற்கு கீழ் ஹதீஸூல் குத்ஸி சிலதையும் முடியுமான அளவு தந்துள்ளோம் ..இன்ஷா அல்லாஹ் ..இதை விளங்க அல்லாஹ் நல்லருள் புரிய வேண்டும்.

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனங்களுக்கு மத்தியில் இருந்தார்கள். (அப்போது) ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! “ஈமான்” என்றால் என்ன? எனக்கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “அல்லாஹ்வையும் அவனது (மலக்குகளை) அமரர்களையும், அவனது வேதத்தையும், அவனது சந்திப்பையும், அவனது தூதர்களையும் நம்பிக்கை கொள்வதும், இறுதியாக எழுப்பப்படுவோம் என்பதை நீ நம்பிக்கை கொள்வதுமாகும்” என்றனர்.

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! “இஸ்லாம்” என்றால் என்ன? என (வந்திருந்தவர்) கேட்டார். (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “அல்லாஹ்வை நீ வணங்குவதும், அவனுக்கு நீ எதையும் கூட்டாக்காமல் இருப்பதும், விதியாக்கப்பட்ட தொழுகைகளை நீ நிறைவேற்றுவதும், விதியாக்கப்பட்ட ஜகாத்தை நீ நிறைவேற்றி வருவதும், ரமளானில் நீ நோன்பு நோற்பதுமாகும்” என்றனர்.


அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இஹ்ஸான் என்றால் என்ன என (வந்திருப்பவர்) கேட்டார். (அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள்) நிச்சயமாக நீர் அல்லாஹ்வைக் காண்பது போன்றே வணங்குவதாகும். நிச்சயமாக நீர் அல்லாஹ்வைப் பார்க்கவில்லையாயினும், அல்லாஹ் நிச்சயமாக உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்” என்றனர்.
(வந்திருந்தவர்) “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (“கியாமத்” எனப்படும்) இறுதி நாள் எப்போது”? எனக் கேட்டனர். (அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள்) “கேட்டவரை விட கேட்கப்படுபவர் இது பற்றி மிக அறிந்தவரல்லர். ஆயினும் அதன் அடையாளங்களைப் பற்றி உமக்கு அடுத்து அறிவிக்கிறேன் (எனக்கூறி) அடிமைப்பெண் தனது எஜமானனைப்பெற்று விடுவாளாயின் அது அந்நாளின் அடையாளங்களில் உள்ளதாகும். ஆடையில்லாதவர்களும் காலில் செருப்பணியாதவர்களும் மக்களுக்குத் தலைவர்களாக ஆகிவிடுவார்களாயின் அது(வும்) அந்நாளின் அடையாளங்களில் உள்ளதாகும். ஆடு மேய்த்துத் திரிபவர்கள் மிக உயர்ந்த நீண்ட கட்டிடங்களுக்கு உரிமையாளர்களாகி விடுவார்களாயின் அது(வும்) அந்நாளின் அடையாளங்களில் உள்ளாதாகும். (இன்னும்) ஐந்து விஷயங்கள் - அவைகளை அல்லாஹ்வையன்றி வேறு யாரும் அறியமாட்டார்கள்” (எனக் கூறிவிட்டு) பிறகு


நிச்சயமாக அல்லாஹ்விடமே இறுதிநாள் பற்றிய அறிவு உண்டு. அவனே மழையை இறக்கி வைக்கிறான். மேலும் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அவனே அறிகிறான். எந்த ஆத்மாவும் நாளை எதைச் செய்யும் என அதற்கு தெரியாது. எந்த ஆத்மாவும் பூமியில் இறப்பெய்தும் என்பதையும் அது அறியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் (செய்திகளை) அறிவிப்பவனாகவும் இருக்கிறான்” அல்குர்ஆன் : 31: 34 என்ற வசனத்தை ஒதிக்காட்டினார்கள்.

அதன் பிறகு (வந்திருந்த அந்த ) மனிதர் திரும்பச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “அந்த மனிதரை மீண்டும் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றனர். அவரைத் திரும்ப அழைத்துவரச் சென்றவர்கள் யாரையும் (அம்மனிதரைக்) காணவில்லை என்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இவர்கள்தான் (வந்து சென்றவர்தான்) ஜிப்ரீல், மனிதர்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக வந்தனர்” என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு
புகாரி : 883
 

ஹதீஸ் குத்ஸிகள்

1- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: 'ஆதமுடைய மகனே! நீ (எனக்காக) செலவிடு. நான் உனக்காக செலவு செய்வேன்.
நூல்: புகாரீ, முஸ்லிம்.

2- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: என்னுடைய அடியான் என்னைப்பற்றி நினைக்கின்ற விதத்தில் நான் உள்ளேன். அவன் என்னைப் பற்றி அவனது மனத்திற்குள் நினைவு கூர்ந்தால், நானும் அவனைப் பற்றி எனது மனதிற்குள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு சபையில் நினைவு கூர்ந்தால், நானும் அவர்களை விட மேலான (வானவர்கள் நிறைந்த) சபையில் அவனை நினைவு கூறுகிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சான் அளவு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு முழம் அளவு நெருங்குவேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் அளவிற்கு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்வேன். என்னை நோக்கி அவன் நடந்து வந்தால், அவனை நோக்கி நான் ஓடிச் செல்வேன்.
நூல்:புகாரி, முஸ்லிம்.

3- நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹுத்தஆலா படைப்பினங்களை படைக்க முடிவு செய்தபோது, தன் வசமுள்ள ஏட்டில், 'என்னுடைய கருணை என்னுடைய கோபத்தை மிகைத்துவிடும் (என்று) தன் மீது கடைமையாக்கி எழுதி தன் வசம் வைத்துக்கொண்டான்'. நூல்:புகாரி,முஸ்லிம்,நஸயீ,இப்னு
மாஜா.

4- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் சொன்னான்: ஆதமுடைய மக்கள் காலத்தை திட்டுகிறார்கள்.(ஆனால்) நானே காலமாக (காலத்தின் போக்கை நிர்ணயிப்பவனாக) உள்ளேன. என்னுடைய கரத்திலேயே இரவும், பகலும் உள்ளன.
புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், தாரமி, முஅத்தா.

5- நபிமுஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறினான்: நானே (எத்தேவையுமின்றி) தன்னிறைவு உள்ளவனாக விளங்கும்போது, எனக்குத் துணையாக யாரும் தேவையில்லை. யாரேனும் எனக்கு வேறொருவரை இணைவைக்கும் விவத்தில்; ஒரு செயலைச் செய்தால்,(எனது உதவியின்றி) அவனுடைய இணைவைப்புடன் அவனை நான் விட்டு விடுகிறேன்.
நூல்: முஸ்லிம், அஹ்மத், இப்னுமாஜா.

6- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறினான்: நானே (எத்தேவையுமின்றி) தன்னிறைவு உள்ளவனாக விளங்கும்போது, எனக்குத் துணையாக யாரும் தேவையில்லை. யாரேனும் எனக்கு வேறொருவரை இணைவைக்கும் விவத்தில்; ஒரு செயலைச் செய்தால்,(எனது உதவியின்றி) அவனுடைய இணைவைப்புடன் அவனை நான் விட்டு விடுகிறேன்.
நூல்: முஸ்லிம், அஹ்மத், இப்னுமாஜா.

7- நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா இப்னு ஆமிர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
'மலை உச்சியில் நின்று, தொழுகைக்கு அழைப்புக் கொடுத்து பின்பு தொழுகின்ற இடையனை (ஆடு மேய்ப்பவனை)க் கண்டு அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்.' அப்போது அல்லாஹ் கூறுகிறான்: 'என்னுடைய இந்த அடியானை பாருங்கள். அவன் தொழுகைக்கு அழைப்புக் கொடுத்து விட்டு, தொழுகிறான். அவன் என்னைப் பற்றி மிக அச்சஉணர்வு கொண்டவனாக விளங்குகிறான். என்னுடைய (இந்த) அடியானின் பாவங்களை நான் மன்னித்து, அவனை சுவர்கத்தினுள் நுழையச் செய்துவிட்டேன்.'
நூல்: நஸயீ, அஹ்மத், அபூதாவுத்.

8- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இறுதித் தீர்ப்பு நாளில், அல்லாஹ்விடத்தில், அடியானின் கடமைகளில் முதன் முதலாக அவனுடைய தொழுகை பற்றியே விசாரிக்கப்படும். (தொழுகையை சரியாக நிறைவேற்றி) அவை செவ்வனே அமைந்திருந்தால், அடியான் வெற்றியும் ஜெயமும் பெறுவான். (தொழுகையை சரியாக நிறைவேற்றாது இருந்ததின் காரணமாக) அவைகளில் குறை காணப்பட்டால், அடியான் தோல்வியும், நஷ்டமும் அடைவான். அவனது கடமையான தொழுகையில் ஏதாவது குறையிருப்பின், கட்டாய தொழுகையிலுள்ள பழுதை நீக்கி, அதனை முழுமைபடுத்த, அடியான் உபரி தொழுகைகளை தொழுதுள்ளானா என்று பாருங்கள். என்று அல்லாஹ் கட்டளையிடுவான். பின்னர் (நோன்பு, ஜகாத் போன்ற) அனைத்துக் கடமைகளுக்கும் இதே முறையில் தீர்ப்பளிக்கப்படும்.
நூல்: திர்மிதி.

9- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் அல் கிஃபாரி(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறினான்: 'அடியார்களே! அநீதி இழைப்பதை என் மீது ஹராம் ஆக்கியுள்ளேன். (நீங்கள்) உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அநீதி இழைப்பதையும் தடை செய்துள்ளேன். எனவே, ஒருவர் மற்றவருக்கு அநீதி இழைக்காதீர்கள்.

என் அடியார்களே! உங்களில் நான் நேர்வழி காட்டியவர்களைத்;;;; தவிர மற்றவர்கள் அனைவரும் வழி கேட்டிலுள்ளீர்கள். எனவே என்னிடம் நேர் வழியை வேண்டுங்கள். நான் உங்களுக்கு நேர்வழியைக் காட்டுவேன்.

என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பசியுடன் இருக்கின்றீகள். எனவே என்னிடம் உணவை வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிப்பேன்.

என் அடியார்களே! உங்களில் நான் ஆடையளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆடையின்றி உள்ளீர்கள். எனவே என்னிடம் ஆடையை வேண்டுங்கள். நான் உங்களுக்கு ஆடை அணிவிப்பேன்.

என் அடியார்களே! நீங்கள் இரவும், பகலும் பாவம் செய்கின்றீர்கள். நான் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பேன். எனவே என்னிடம் பாவமன்னிப்ப தேடுங்கள். நான் பாவங்களை மன்னிப்பேன்.

என் அடியார்களே! எனக்கு நன்மையோ, தீமையோ செய்வதற்கு உங்களால் கண்டிப்பாக முடியாது. அவ்வாறு இயன்றால் அல்லவா எனக்கு நன்மையோ, தீமையோ செய்வீர்கள்.

என் அடியார்களே! முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் பயபக்தியுடையவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் அதிகரித்து விட முடியாது.

என் அடியார்களே! முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் கொடியவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் குறைக்க முடியாது.

என் அடியார்களே! முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், ஓர் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் (எதையாவது) வேண்டினால், நான் அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வேண்டியதை கொடுத்தாலும், என்னிடமுள்ளவற்றுக்கு, ஒரு ஊசியைக் கடலில் முக்கி எடுத்தால் ஏற்படும் இழப்பைவிட அதிகமான இழப்ப ஏற்படாது.

என் அடியார்களே! நிச்சயமாக நான் உங்களுடைய செயல்களைக் கொண்டே அடையாளம் காண்பேன். பிறகு அவைகளுக்கு கூலியும் வழங்குவேன். எனவே (மறுமையில் தனக்கு) நன்மையைக் காண்பவன் அல்லாஹ்வாகிய என்னை புகழட்டும். இதற்கு மாறாக காண்பவன், தன்னைத் தானே பழித்துக் கொள்ளட்டும்.
நூல்:முஸ்லிம்.

10- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறினான் : இறுதித் தீர்ப்பு நாளில் மூன்று நபர்களுக்கு நான் எதிராளியாக (பகைவனாக) இருப்பேன். ஒருவன் என் பெயரைச் சொல்லி கொடுத்த வாக்கை முறித்தவன். சுதந்திர மனிதனை விற்று, அத்தொகையை விழுங்கியவன். மற்றொருவன். வேலையாளை அமர்த்தி, அவனிடம் முழு வேலையையும் வாங்;கியபின், அவனுக்குரிய கூலியைக் கொடுக்காதவன்.
நூல்: புகாரி.

11- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் (தனது) ஒரு அடியானை நேசித்தால், அவன் ஜிப்ரயீல் (அலை) அவர்களை அழைத்து நான் இன்ன மனிதரை நேசிக்கின்றேன். எனவே நீயும் அவரை நேசிப்பீராக என்று கூறுவான். ஜிப்ரயீல் (அலை) அவ்வாறே நேசிப்பார். பின்பு ஜிப்ரயீல் (அலை) அல்லாஹ் இன்ன மனிதரை நிச்சயமாக நேசிக்கிறான். எனவே அவரை நேசியுங்கள். என்று வானலோகத்தில் அறிவிப்பார். (பின்னர்) வானவர்களும் அம்மனிதரை நேசிப்பார்கள். பின் பூமியில் அவர் அங்கீகரிக்கப்படுவார். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், அல்லாஹ் (தனது) ஒரு அடியான் மீது கோபம் கொண்டால், ஜிப்ரயீல் (அலை) அவர்களை அழைத்து நான் இன்ன மனிதர் மீது கோபம் கொண்டுள்ளேன். எனவே நீரும் அவர்மீது கோபம் கொள்வீராக என்று கூறுவான். பின் ஜிப்ரயீல் (அலை) அவர் மீது கோபம் கொள்வார். பின் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வானவர்களை அழைத்து அல்லாஹ் இன்ன மனிதர் மீது நிச்சயமாக கோபம்கொண்டுள்ளான். எனவே நீங்கள் அவர் மீது கோபம்கொள்ளுங்கள். என்று அறிவிப்பார். எனவே வானவர்களும் அவர் மீது கோபம் கொள்வார்கள். இவ்வுலகிலும் அவர்மீது கோபம் நிலை நாட்டப்படும். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி, முஸ்லிம்.


எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
 

அஹமட் யஹ்யா,
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.
 

அல்குர்ஆன் ஓதுவதன் சிறப்புக்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயர் கொண்டு ...ஆரம்பம் செய்கின்றேன்... அல்ஹம்துலில்லாஹ்..

அல்குர்ஆனைக் கற்பதற்கும், கற்றுக்கொடுப்பதற்கும், அதனை ஓதுவதற்கும் பல சிறப்புகள் உள்ளன.
அவற்றில் சில...

அல்குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதின் சிறப்பு.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். உங்களில் சிறந்தவர் அல்குர்ஆனைக் கற்று அதனைப் பிறருக்கும் கற்றுக்கொடுப்பவராவார்.(நூல். புகாரி.)

மனிதனை அல்லாஹ் இவ்வுலகில் படைத்து அவனை நேரான வழியில் நல்வழி காட்டுவதற்காக அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான். அதே வரிசையில் கடேசியாக நபி(ஸல்)அவர்களை "றஹ்மதுல்லில்ஆலமீனாக" இவ்வுலகுக்கு அனுப்பி இந்தக் குர்ஆனை அவர்களுக்கு வானவர் ஜிப்ரீயில்(அலை)அவர்கள் மூலமாக அனுப்பி ஓதுவீராக !என்று கற்றுக் கொடுத்தது தான் ஆரம்பம். அதிலிருந்து அல்குர்ஆனை கற்று அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே சிறந்தவர் என்ற  உன்னப் போதனையை நபியவர்கள் கூறிக் காட்டினார்கள்.

அல்குர்ஆனை ஓதுவதற்கான கூலி.


Wednesday, January 9, 2013

மரணத்தை வென்ற பெண்மணி ரிஷானா நபீக்

 
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.. நேர்வழி காட்டுவானாக. ஆமீன்.

இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து மூதூரிலுள்ள ரிசானாவின் வீட்டின் நிலமைகளை படங்களில் காணலாம். 
 
 
 
 

சவூதி அரேபியாவில் 2013.1.9 ம் திகதி மரண தண்டனை வளங்கி முடிவு பெற்ற பொண்ணான பொண்மணி ரிஷானா நபீக் என்பரின் மரணம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து முஸ்லீம் மக்களுக்கு இது ஒரு மறக்க முடியாத ஒரு விஷயம். ரிஷானா நபீக் கூறிய சில வரிகள் கீழே இருக்கின்றது இதைப் பார்த்தாவது நம் இளஞ்சர்கள் சமூதாயம் இனியாவது சீதனம் என்ற கொடூர லட்ச்சங்களை கை நீட்டி வாங்குவதை தடுப்போம் . மரணமடைந்த ரிஷாவின் கடேசி வசிய்யத் என்ற வார்த்தை ஆண் சமூதாயமே சீதனம் வேண்டாம் என்ற வார்த்தைக்கு மதிப்பழித்தாள் அல்லாஹ் நமக்கு நல்லருள் புரிவான்,

ஈமான் கொண்டவர்களே நம்மால் முடிந்தளவு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருவோம்.

எல்லா ஆண்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்

என் பெயரால்

முக நூல்களில்

அகநூல்களில்

பிரநூல்களில்

தர்க்கம்புரியும்

தர்க்கவாதிகளே

உங்களோடு

சிலநிமிடங்கள்

நான் ஒன்ரும் கோழை அல்ல

அழுதுபுலம்பி ஓடி ஒழிந்துகொள்ள

நான் எப்போதும்

அன்னையர்கள்

ஆயிஷா , பாத்திமா

பாசறையில்

பக்குவப்பட்டவள்

திருமறையின்

நபிவழியில்

ஷரியா நன்னெறியில்

மரணித்துப்போவதில்

மனவேதனை ஒன்றும் இல்லை

உங்களுக்கெல்லாம் ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள ஆசை எனக்கு

எனக்காக கண்ணீர்வடிக்க வேண்டாம்

ஏன் பிராத்தனைகூட செய்யவேண்டாம்

குருவிக்கூடு போன்ற என் குடும்பத்தைகொஞ்சம் எட்டிப்பாருங்கள்

அல்லாஹ்வின் மீது ஆணையாக என் அண்ணை அழமாட்டாள்

தயவுசெய்து ஆறுதல் என்ற பெயரால்

அவளைநீங்கள் கோழை ஆக்கி விடாதீர்கள்

உங்களால் முடிந்தால்

உங்கள் ஆண்பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்

சீதனம் என்பது குடும்ப அனுமதியோடு செய்யப்படும் விபச்சாரம் என்று

நாளை என் தங்கைகளும்

உங்கள் பெண்பிள்ளைகளும்

தீன் ஒளியில் ஊரினில் வாழட்டும்.


நம் நாட்டில் மனச்சாட்சி இல்லாத எத்தனை உள்ளங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது கட்டிய மனைவியை காசுக்காக அயல் நாட்டுக்கு அனுப்பும் வெட்கம் கெட்ட ஒரு கூட்டமும் நம் இஸ்லாமியர்களில் இருக்கத்தான் செய்கின்றாகள் !!!!!!!!!!!!!!!!!!!!! கண்ணியம் மிக்க இளைன்சர்களே அல்லாஹ் உங்களுக்கு மிகுந்த கூலிகளை வழங்குவான் "ரிசானா" போன்ற ஏழை பெண்களை சீதனம் இன்றி திருமணம் செய்து கொள்ளுங்கள் நாம் யாரும் இந்த பூமியில் பல்லாயிரம் காலம் வாழ்ந்து விடப்போவதில்லை ஏழைகள் மீது அன்பு காட்டுங்கள் !!! யா அல்லாஹ் இந்த பூமியில் வாழும் அத்தனை ஏழைகளுக்கும் உன் அருளை இறக்கி அருள் செய்வாயாக !!!!!!!!!!

யா அல்லாஹ் இந்த பொண்ணான பொண்மணிக்கு உனது மேலான ஜன்னத்துல் பிர்தௌசைக் கொடுப்பாயாக.
 
அஹமட் யஹ்யா.ஹொரோவபதான,அனுராதபுரம்.SRI LANKA. 
 

Sunday, January 6, 2013

வெல்லும் சத்தியம், அழியும் அசத்தியம்

 
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.. நேர்வழி காட்டுவானாக. ஆமீன்.

சத்தியமும்,அசத்தியமும் ஒன்றோடு ஒன்று வேறுபட்டது. சத்தியம் என்பது உண்மையைக்கு நேரானது. அசத்தியம் என்பது உண்மைக்கு மாறானது. சத்தியம் மறுமையில் வாய்மை சேர்க்கும். அசத்தியம் மறுமையில் பொய்மை சேர்க்கும். இதுதான்,இப்படித்தான்,என்று நேரான கோட்டை கீரி வழிகாட்டியது சத்தியம்.. கோணலான கோட்டைக் கீரி வா வா என்று வழிகேட்டில் அழைப்பது தான் அசத்தியம்... ஒருமை, பண்மையாக எப்படி வேண்டுமானாலும் சொன்னாலும் கூட சத்தியம் நிச்சயம் வெற்றியே.. இந்த சத்தியப் பாதையை மேலோங்கவும், அது சொல்லும் போதனைகளை பொறுப்போடு செய்யவுமே இவ்வுலகில் மானிட சமூகம் படைக்கப்பட்டது .
எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே ஒழுக்கமும் நன்னடத்தையும் நமது உடலில் உள்ள உயிரையும் நாம் சுவாசிக்கும் சுவாசத்தையும் போன்றது. குர்ஆனிலும் நபி மொழியிலும் அல்லாஹ்வின் மார்க்கம் ஒரு வலுவான கட்டடத்திற்கு உதாரணமாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த மாளிகையின் அடித்தளமாயிருப்பது ஈமான் என்றால் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள தூண்களும், சுவர்களும், மேற் கூரையுமே இஸ்லாமாகும். இஸ்லாம் என்ற மாளிகையை கட்டி எழுப்புவதற்கும் அதை உறுதியாய் எழிலுடன் நிலை நிறுத்துவதற்கும் தேவையான இரண்டு விஷயங்கள்தான் தக்வா எனும் இறையச்சம் இஹ்ஸான் எனும் ஒழுக்கமும் நன்னடத்தையுமாகும்.

(நபியே) பிரகடனம் செய்வீராக: ""சத்தியம் வந்து விட்டது. அசத்தியம் அழிந்து விட்டது. திண்ணமாக அசத்தியம் அழியக்கூடியதே' (அல்குர்ஆன்17:81)
அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தைக் குழப்பி விடாதீர்கள். அறிந்து கொண்டே சத்தியத்தை நீங்கள் மூடி மறைக்காதீர்கள். (திருக்குர்ஆன்2:42)
""சத்தியம் வந்து விட்டது. இனி, அசத்தியத்தினால் எதுவும் செய்ய முடியாது!'' (அல்குர்ஆன்34:49)

இறைவன் வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தான். ஒவ்வொரு நதியும் ஓடையும் தம் கொள்ளளவிற்கு ஏற்ப நீரால் நிரம்பி ஓடியது. பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அதன் மேற்பாகத்தில் பொங்கும் நுரையைச் சுமந்து செல்கிறது. நகைகள், பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்வதற்காக மக்கள் உலோகங்களை நெருப்பில் உருக்கும் போதும் இதே போன்ற நுரை ஏற்படுகிறது. இறைவன் இவற்றையே சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உவமையாகக் கூறுகின்றான். (பலன் தராத) நுரை ஒன்றுமில்லாமல் போய் விடுகின்றது. எது மக்களுக்குப் பலன் அளிக்கின்றதோ அது பூமியில் தங்கி விடுகின்றது! இவ்வாறு இறைவன் உவமானங்கள் மூலம் தன் செய்திகளை விளக்குகின்றான். (அல்குர்ஆன்13:17)

சத்தியம் வந்தே தீரும் அசத்தியம் அழிந்தே தீரும் அல்லாஹ் அல்குர்ஆனில் இப்படிக்கூறுகின்றான்,,‘அல்லாஹ்வை நோக்கி அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?’ ( அல்குர்ஆன்.41:33)
இந்த வசனம் உணர்த்தும் உண்மை நிலைக்கு நாம் சொந்தக்காரர்களாகி விட்டோமா?. அல்லது ஆகப்போகின்ரோமா?. அல்லது ஆகத்தான் வேண்டமா?. என்ற மூன்று கேள்விக்கும் தடுமாற்றம் இல்லாத பதில் யாருடைய உள்ளத்தில் எழும்புகின்றது.. சிந்திக்கும் சமூகத்திற்கு இந்த வசனத்தின் உண்மை நிலை நிச்சயம் புரியும். இன்றைய சிறர்கள் நாளைய தலைவர்கள் என்றும் இன்றைய பெரியவர்கள் மறுநிமிட போதகர்கள் என்றும் நம்மை நாம் பறைசாட்டிக்கொண்டிருக்கும் இதே வேளையில். உலகம் என்ற நான்கு சுவருக்கும் மத்தியில் நமக்குள்ளே சத்தியம் மறுக்கப்படுகின்றது என்றால் கவலைக்குரிய விடமே தவிர வேறில்லை. கண்ணை மூடினாலும் பாவம், கண்ணைத்திறந்தாலும் பாவம். இப்படியான உலகில் தன்னை நான் ஒரு முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நமக்குள் இஸ்லாத்தின் வழிமுறைகள் நடை பாவனைகள் எந்தளவுக்கு மேலோங்குகின்றது என்பதையும் சிந்திக்கக்கடமைப்பட்டிருக்கின்றோம்.சத்தியப் பாதையில் இருக்கும் ஒரு மனிதன் அடுத்த நிமிடம் வேறு பாதைக்கு அடியாகின்றான், மதுவுக்கும்,போதைக்கும், கேடுகெட்ட நடத்தைக்கும் மாற்றுவழி அமைக்கின்றான் என்றால் இதை சிந்திப்பது காலத்தின் தேவையே...

அல்லாஹ்வும், அவனது இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் ஏவிய பிரகாரமே மனிதன் தன் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டியவனாகின்றான். இருந்தபோதிலும் மனிதன் என்ற வகையில் அவனது இயல்பு அவனைப் பாவம் செய்யத்தூண்டுகின்றது. அதன் பிரகாரம் அவன் பாவத்தில் விழுந்துவிடுகின்றான். அல்-குர்ஆனும், அஸ்-ஸுன்னாவும் போதிக்கும் விடயங்கள் பால் செல்லவேண்டியவன் iஷத்தானின் வழிகாட்டுதலின் பின்னால் சென்றுவிடுகின்றான். இவ்வாறு அல்லாஹ்வைவிட்டு வெகுதூரம் சென்ற மனிதனை மீண்டும் அவன் பால் திருப்பும் முகமாகவே அல்லாஹ் அவனுக்கான ‘தவ்பா’ என்ற வாசலைத் திறந்து வைத்திருக்கின்றான்.

அந்த வகையில் பாவம் செய்த ஒரு மனிதன், தான் செய்த தீங்குகளிலிருந்து அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்புத் தேடவேண்டுமாயின் முதலாவதாக, தான் செய்த பாவங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். மாற்றமாக, தான் செய்த தீங்குகள், அட்டூழியங்கள், அனாச்சாரங்கள் போன்றவற்றை அவன் ஏற்றுக்கொள்ளாதபோது அவனது தவ்பாவிற்கு எத்தகைய பெறுமானமும் இருக்காது. அத் ‘தவ்பா’ ஆனது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதாகவே அமையும். மனிதன் என்பவன் பாவம் செய்யவேமாட்டான் என ஒருபோதும் எம்மால் கூறமுடியாது. ஏனெனில்; பாவம் செய்யும் இயல்பைக் கொண்டவனாகவே அவன் படைக்கப்பட்டுள்ளான் என்பதை பின்வரும் ஹதீஸ் எமக்கு மிகத்தெளிவாக எடுத்துச்சொல்கின்றது.

‘நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருப்பின் அல்லாஹ் உங்களை அழித்துவிட்டு இன்னுமோர் படைப்பைப் படைப்பான். அவர்கள் பாவம் செய்வார்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோருவார்கள், அல்லாஹ் அவர்களை மன்னிப்பான்’ (முஸ்லிம்: 6965)

பொன்னான போதனைகளைக் கேட்கின்றோம், மெய்யான வழிமுறைகளைப் படிக்கின்றோம், நேரான பாதையை கண்திறந்து பார்க்கின்றோம், அல்குர்ஆனின் அச்சமூட்டும் எச்சரிக்கைகளை உணர்கின்றோம். ஆனால் மேலே சொல்லப்பட்ட வசனத்திற்கு சொந்தக்காரர்களாக, அதற்கு உடன்பட்டவர்களாக நமது நிலையையும்,நமது மனைவி மக்கள் நிலையையும் நாம் மாற்றியதாக இல்லை. காரணம் இவ்வுலகிற்கு நாமும் அடிமையாகி நமது மனைவி மக்களையும் அடிமைக்கு நாஷமான கருவிகளை விலைகொடுத்து வாங்கி சத்தியப்பதையை மறைத்து, அசத்தியப் பாதையை திறந்து கொடுக்கின்றோம். குர்ஆனின் வசனங்களை செவிதாழ்த்தி அழவேண்டிய உள்ளம் ,கேடுகெட்ட சினிமாக்களையும்,சீரியல் போன்ற காட்சிகளையும் பார்த்து பல விதமான உணர்வுகளை தன் உள்ளத்தில் கோட்டை கட்டும் சமூகத்தின் நிலையையும் பார்க்கின்றோம். மனித சமுதாயம் அனைவருக்கும் ஏராளமான பொறுப்புகளை, கடமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட யாரும் பொறுப்புகளிலிருந்து, கடமைகளிலிருந்து விலகி நிற்க முடியாது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். பொறுப்புகள் பற்றி நபியவர்கள் பொன்னான போதனையை உணர்த்திக் காட்டினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே. உங்கள் பொறுப்புகளைப் பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாüயாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளன்.அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாüயாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக,நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல் : புகாரி 2554


இந்த உலகத்தில் நன்றாக உழைக்கவேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும், சொத்து சேர்க்கவேண்டும், ஆடம்பரமான வீடு கட்டவேண்டும், இப்படி இன்பமாக வாழவேண்டும் என்பதற்காகவேண்டி நமது முஸ்லிம் சகோதர, சகோதரிகள் வைத்தியராகவோ, பொறியியளாலராகவோ, சட்டத்தரணியாகவோ, ஆசிரியராகவோ, கனணித்துறையிலோ இது போன்ற கல்வித்துறையிலோ, பாடகராகவோ, இசையமைப்பாளராகவோ, நடனமாடுபவராகவோ வேறு ஏதாவது வியாபாரத்தையோ செய்துகொண்டிருக்கிறார்கள். இதில் எது சத்தியப் பாதை, எது பிரயோசனம் அழிக்கும் என்ற கேள்வியை சாதாரண மனிதன் கூட திடீர் என்று பதில் சொல்லுவான் ஆனால் மார்க்கத்தை விளங்கி அதன் வடிவில் செயல்படுத்தக் கூடிய மனிதன் எதில் பணம் அதிகமோ அதைத்தான் செய்யத்துணிவான். இதுதான் இஸ்லாம் சொன்ன வழியா. மறுமைக்காக வாழ்ந்து, மறுமையில் நிம்மதி சந்தோஷத்தை விரும்பக்கூடிய ஒரு அடியான் பிரயோசனங்களைத்தான் இவ்வுலகில் நிலைநாட்டுவான் அல்லாஹ் அல்குர்ஆனில் சுவர்க்கத்தைப் பற்றி அதன் இன்பத்தைப்பற்றி வரிசைக்கிரமாக சொல்லிக்காட்டுகின்றான்..‘(இறைவனை) அஞ்சியோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை! அதில் மாற்றமடையாத தண்ணீரைக்கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப்போகாத பாலாறுகளும், அருந்துபவருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும் இருக்கும். அங்கே அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் தனது இறைவனிடத்திலிருந்து மண்ணிப்பும் உண்டு. (இவர்கள்) நரகத்தில் நிரந்தரமாகத் தங்கி குடல்களைத் துண்டாக்கி விடும் கொதிக்கும் நீர் புகட்டப்பட்டவனைப் போன்றவர்களா?’ (அல்குர்ஆன். 47: 15)

‘அவர்களுக்கு நிலையான சொர்க்கச்சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். தங்கக்காப்புகள் அவர்களுக்கு அணிவிக்கப்படும். ஸுந்துஸ், இஸ்தப்ரக் எனும் பச்சைப்பட்டாடைகளை அவர்கள் அணிவார்கள். அதில் உள்ள ஆசனங்களில் அவர்கள் சாய்ந்திருப்பார்கள். இதுவே சிறந்த கூலி. அழகிய தங்குமிடம்.’
(அல்குர்ஆன். 18:31)


எனவே..அல்லாஹ் நமக்கு வழங்கிய இஸ்லாமிய மார்க்கம் தன்னிறைவு பெற்ற மார்க்கமாகும்.மனித வாழ்க்கைக்கு தேவையான அத்துனை வழிகாட்டல்களையும் உள்ளடக்கிய முழுமையாக நிறைவு பெற்ற மார்க்கம் இஸ்லாம்.கொள்கைகள்,வணக்கங்கள்,
குடும்பவிவகாரங்கள்,கொடுக்கல் வாங்கல், தனி மனித ஒழுக்கங்கள் என இஸ்லாம் பேசாத எந்த வாழ்க்கை நெறியுமில்லை என்றுகூறுமளவிற்குபூரணத்துவம் பெற்ற மார்க்கத்தையே நாம் பெற்றுள்ளோம். இதுவே சத்திய மார்க்கமாகும். நமக்குள் இத்தூய இஸ்லாத்தை சத்தியத்தின் பால் இட்டுச் செல்ல வேண்டுமானால் நம்மை நாம் மார்றியமைக்க வேண்டும். நமது தொழில்களில் என்னை விட அவன் அதிக வருமானம் பெருகின்றான் என்று நமது கண்ணால் கம்டாலோ, செவியால் கேட்டாலோ அடுத்த நிமிடம் நமது உள்ளத்தில் ஒரு போராட்டம் அவனை விட நான் மேலே இருக்க வேண்டும் என்ற ஒரு வகையான உணர்வு இந்த உணர்வு நம்மை மாற்ற வேண்டும் என்று படாத பாடு படுகின்றோம். இது நல்லதா கெட்டதா என்று கேட்டால் இந்த முடிவு வழிகேட்டில்தான் கொண்டு போய்விடும். அதே நேரம் இந்த முடிவை இஸ்லாத்தோடு சம்பந்தப்படுத்தி மாற்றத்தான் வேண்டும் என்றால் அந்தத் தொழில் இபாதத்தாக மாறி அது நமக்கு அல்லாஹ் நாடிய பலனை அழிக்கின்றது.


குடும்பம்

’குடும்பம்’ என்பது ஒரு மனித சமூகக்கூட்டம். அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இரத்த பந்தம் அல்லது திருமண உறவுகள் என்பவைகளால் ஒன்றாக இணைக்கப்படுகின்றார்கள். இந்தக் குடும்பபந்தம் ஒருவர் மற்றவருக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் உரிமைகளையும் கொண்டதாகும். இந்த உரிமைகளும் கடமைகளும் மார்க்கத்தினால் ஏற்படுத்தப்பட்டு, சட்டத்தினால் அமுல்படுத்தப்பட்டு, குடும்பத்தில் அங்கம் வகிப்பவர்களால் கடைபிடிக்கப்படுகின்றன. குடும்பத்தைப் பாதுகாத்தல், பராமரித்தல், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுதல், சிறுவர்களிடம் கருணை காட்டுதல், முதியவர்களிடம் மரியாதை காட்டுதல், முதியவர்களைப் பாதுகாத்தல், குடும்பம் சுமூகமாக நடந்திடத் தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் ஆகியவைகள் இந்தக் கடமைகளில் அடங்கும்.

“மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:1)

செயல்பாடுகள்.

அறிவுக்குப் பொருத்தமான நடைமுறைக்குச் சாத்தியமான வாழ்க்கை நெறியே இஸ்லாம் ஆகும். ஆயினும் இஸ்லாம் என்றாலே மூட நம்பிக்கையின் மொத்த உருவம் என்று கருதும் அளவிற்கு இன்று முஸ்லிம்களின் நிலை இருந்து வருகிறது. இந்த மூட நம்பிக்கைகளில் பெரும்பாலும் பெண்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்றால் மிகையாகாது.

காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து. சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்த மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (அல்குர்ஆன் 103:1-3)

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)

எவன் நேரான வழியில் செல்லுகிறானோ, அவன் தன்னுடைய நன்மைக்காக நேரான வழியில் செல்லுகிறான்; எவன் வழிகேட்டில் செல்லுகின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; ஒருவனுடைய பாவச்சுமையை மற்றெருவன் சுமக்க மாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (அல்குர்ஆன் 17:15)

இவ்வுலகில் ஏராளமான மதங்கள் இருக்கின்றன. அம்மதங்களுக்கும் இஸ்லாத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அந்த வித்தியாசத்தின் அடிப்படையிலேயே தனிச் சிறந்த மார்க்கமாக இஸ்லாம் கருதப்படுகிறது. உண்மை இவ்வாறிருக்க இன்று எவ்வளவோ மூட நம்பிக்கைகள் புகுந்து முஸ்லிம் மக்களை ஆட்டிப்படைப்பதைப் பார்க்கின்றோம். தூய இஸ்லாமிய மார்க்கத்தைப் பெரும்பாலோர் முஸ்லிம்களின் செயல்பாடுகளை வைத்துத் தான் கணக்கிடுகிறார்கள். குர்ஆன், நபிமொழி, நபி(ஸல்) அவர்களின் கொள்கை முழக்கம் இவை மட்டும் மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கவில்லை; மாறாக அவர்களின் பழக்க வழக்கங்கள் நடைமுறைகள் ஆகியவையும் மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது. இந்த அடிப்படையில் மனிதனின் செயல்பாடுகளும் சத்தியப்பாதைக்குமுக்கிய வழிகளாகும்.

நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல்.

மேலும் மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன். 3 : 104)

இங்கே நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் - நல்லதைக் கொண்டு ஏவுபவர்கள், அழைப்பாளர்கள் பற்றியும், தீயவற்றிலிருந்து தடுப்பவர்கள் பற்றியும் ஒரு முஃமினுடைய மூன்று குணாதிசயங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் முதலில் தான் எந்த நன்மையின் பக்கம் மக்களை அழைக்கின்றோமோ, அந்த நன்மையைப் பின்பற்றுபவர்களாக இருத்தல் வேண்டும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் உள்ள நபிமார்களுக்கு சீடர்கள் இருந்தார்கள். அந்த சீடர்கள் தங்களது நபிமார்கள் மறைந்தவுடன் அந்த நபிமார்கள் எதை எதைக் காட்டித் தரவில்லையோ, அவற்றை எல்லாம் செய்து கொண்டும், அதன் மூலம் எழுந்த தீமைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். அதனால் தான் அவர்கள் வரலாறு நெடுகிலும் அழிக்கப்பட்டு வந்திருப்பதை திருமறை வாயிலாக, ஆது, ஸமூது, மத்யன், ஹுது என பல்வேறு கூட்டத்தார்கள் ஏன் அழிக்கப்பட்டார்கள் என்ற வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.இதற்கு முன் வந்த அனைத்து நபிமார்களும்
கண்ட அனைத்துத் தீமைகளும் இன்றைக்கும் நம் முன்னே பவனி வந்து கொண்டிருக்கும் பொழுதும், இஸ்லாத்தை வேரடி மண்ணாக அழித்து விடுவதற்கு கிறிஸ்தவ, யூத, காஃபிர்கள் என அனைவரும் ஒன்று திரண்டிருக்கும் பொழுது, இஸ்லாத்திற்கு எதிராக ஜாஹிலிய்ய சக்திகளை ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கும் பொழுது, நன்மையைக் கொண்டு ஏவி தீயவற்றைத் தடுப்பவர்கள், அந்தப் பணியைச் செய்யாமல் உதாசினத்துடன் நடந்தோமென்றால், எந்தப் பணியை இந்த முஸ்லிம் சமுதாயத்திடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விட்டு விட்டுச் சென்றுள்ளார்களோ அந்தப் பணியை யார் நிறைவேற்றுவது என்ற கேள்வி எழும். இந்தக் கேள்விக்குப் பதில் வைத்திருப்பவர்கள்
யார்? என்பதையும்,அவற்றை அறிய வேண்டிய பொறுப்பு யார் மீது உள்ளது? என்பதையும் நாம் சிந்தித்தாக வேண்டும்.
இங்கே நம்மைச் சுற்றி தீமைகள் நிறைந்திருக்கின்ற இந்த வேளையில் நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் முதலில் தான் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இங்கே தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.
இன்றைக்கு இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.
தொழுகையில் எப்படி நிற்பது, கைகளை எங்கே கட்டுவது, எவ்வாறு குனிவது, எவ்வாறு சுஜுது செய்வது உள்ளிட்ட அனைத்தையும் நாம் கற்று வைத்திருக்கின்றோம். ஆனால் இந்த இஸ்லாம் மார்க்கம், இத்துடன் நின்று விட்டதா? மேற்கண்ட முறைப்படி குனிந்து நிமிர்ந்து விட்டால், ஒரு முஸ்லிமினுடைய கடமை முடிந்து விட்டதா? என்று கேட்டால் இல்லை என்ற பதிலையே நீங்கள் தருவீர்கள். ஏனெனில், இறைவன் தன்னுடைய திருமறையிலே மேலே கூறியுள்ளதை இங்கே மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து பாருங்கள்.
நன்மையை ஏவ வேண்டும்! தீமையைத் தடுக்க வேண்டும்! இதற்கென ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.


நன்மையும்,தீமையும்.

உண்மை முஸ்லிம், மனிதர்களிடம் மென்மையாக, நிதானமாக, நளினமாக நடந்து கொள்வார். அவரது மென்மை நேசிக்கப்படும்; அவரது நளினம் போற்றப்படும்; அவரது நிதானம் புகழப்படும். ஏனெனில், இவை புகழத்தக்க நற்பண்புகளாகும். அதன்மூலம் மனிதர்களை நெருங்கி அவர்களது நேசத்திற்குரியவராகத் திகழ முடியும். அல்லாஹ் தனது அடியார்களிடம் அப்பண்புகளை விரும்புகிறான்

இஸ்லாமிய சமுதாய அமைப்பு என்பது, தன்னை தான்தோன்றித்தனமாக அடையாளப்படுதவில்லை. மாறாக மனிதனை சிந்தனா சக்தி உள்ளவனாகவும், அடுத்தவர் பற்றிய கவலை உடையோனாகவும் அடையாளப் படுத்த முனைகிறது. அதாவது நன்மையின் பக்கம் மனிதனை இழுப்பவனாகவும் தீமைகள் அவை எந்த உருவத்தில் தலைகாட்டினாலும் எதிர்த்துப் போராடும் படி மக்களை தட்டி எழுப்புவனாக இருக்க வேண்டும் என்றும், தீமைகளை எதிர்த்து நிற்பதில் தன்னிடமிருக்கும் சக்திகள் அனைத்தையும் பயன்படுத்தி இவற்றின் மூலம் சமுதாயத்தில் வலுவானதொரு ஒழுக்கச் சூழலை உருவாக்குவதும் ஒவ்வொரு மனிதனிதும் மிக பெரிய கடமையாக இருக்கிறது என்பதையும் வலியுறுத்திச் சொல்கிறது...எனவே மனிதன் உலகத்திற்கு பாரிய பொறுப்புக்களொடு வந்திருக்கிறான்.. இந்த பொறுப்பக்களிலிருந்து விடுபட நினைக்கும் எந்த மனிதனும். அல்லாஹ்வின் பார்வையில் நல்ல மனிதனாக இனங்காணப்படடாட்டான். அவன் வெறும் சுயநலம் மிக்கவனாகவும், அல்லாஹ்வின் திருப்தியைப் பெறாதவனாகவுமே கணிக்கப்படுவான்..

நன்மையும் தீமையும் சமமாகி விடாது. ஆதலால் தீமையை நீர் நன்மையைக்கொண்டே தடுத்துக்கொள்ளும். அவ்வாறாயின் உம்முடைய கொடிய விரோதியை அதே சமயத்தில் உம்முடைய மெய்யான, மிக்க நெருங்கிய சிநேகிதனைப் போல் காண்பீர். பொறுமையுடையோர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி பெரும்பாக்கியம் உடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (அல்குர்அன் 41:34,35)

மென்மையை வலியுறுத்தும் சான்றுகள், முஸ்லிமின் சமுதாய வாழ்வில் பிரதிபலிக்க வேண்டிய உயரிய பண்பு என்பதை உறுதிப் படுத்துகிறது. நளினம் என்பது அல்லாஹ்வின் உயரிய பண்புகளில் ஒன்றாகும். அது தனது அடியார்களிடம் பிரதிபலிப்பதை அல்லாஹ் விரும்புகிறான்.

ஒழுக்கம்.

மனிதப் படைப்பின் நோக்கமே வணக்கம் நாம் வணக்கம் என்றால் என்ன என்பதை அறிய வேண்டும். வணக்கம் என்பதற்கு அறிஞர்கள் கூறும் விளக்கம் என்னவெனில் ‘இறைகட்டளைகள் அனைத்துமே வணக்கமாகும்’ என்பதாகும். அதாவது இறைவனுடைய மற்றும் அவனுடைய தூதருடைய ஏவல் விலக்கல்களை வாழ்வில் பேணி வாழ்வதே வணக்கமாகும் என்பதாகும்.

இந்த வகையில் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் போதித்த இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைப் பேணி நடப்பதும் சிறந்த வணக்கமாகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த சிறிய தொகுப்பில் இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகளின் பட்டியலைக் காண்போம். இவைகளை பேணி நடக்கும் ஒரு முஃமின் இன்ஷா அல்லாஹ் மறுமையில் சிறந்த நற்பேறுகளையுடைவராக விளங்கலாம்.

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)

ஒழுக்க மாண்புகள்!

* அறிந்தவனுக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுதல். இது நேசத்தை உண்டாக்கும். வெறுப்பையும் பிரிவையும் அகற்றும்.

* பிறரிடம் முகமலர்ச்சியுடன் புன்முறுவல் பூத்தல். இது அன்பையும் நேசத்தையும் வளர்க்கும்.

* வலது கரத்தால் உண்ணுதல் மற்றும் குடித்தல். இடது கரத்தால் குடிப்பது ஷத்தானின் செயலாகும்.

* உண்ண மற்றும் குடிக்க ஆரம்பிக்கும் போது ‘பிஸ்மில்லாஹ்’ கூறுதல். இந்த செயல்கள் முடிவுற்ற பிறகு ‘அல்ஹம்துலில்லாஹ்’ கூறுதல்

* ‘தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ கூறுதல்; அதைக் கேட்டவர் ‘யர்ஹமுகல்லாஹ்’ என்று கூறுதல்.

* நோயாளியிடம் சென்று நோய் விசாரித்தல்

* ஜானாஸாவை பின்தொடர்ந்து சென்று தொழுகையிலும் அதை அடக்கம் செய்வதிலும் கலந்து கொள்ளுதல்

* பள்ளிவாசலில் நுழையும் போது வலது காலை முன்வைத்து நுழைந்து நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆவை ஓதுதல்.

* பள்ளியிலிருந்து வெயியேறும் போது இடது காலை முற்படுத்துதல்

* வீடு மற்றும் பிற இடங்களில் நுழையும் போதும் அல்லது அதிலிருந்து வெளியேறும் போதும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வழிமுறைகளைப் பேணி அதற்குரிய துஆக்களை ஓதுதல்

* பயணத்தின் போது அதற்குரிய ஒழுக்கங்களைப் பேணுதல்

* பெற்றோருக்கு உபகாரம் செய்து அவர்களிடம் நன்முறையில் நடந்து கொண்டு அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முறைப்படி செய்தல். இது அல்லாஹ்வின் கட்டளையாகும். இதில் கவன் குறைவாக இருந்து விட்டால் மறுமை நாளில் மிகவும் கைசேதப் பட வேண்டியதிருக்கும்.

* உறவினர், அண்டை வீட்டார், மற்றும் சிறுவர், சிறுமியரிடம் நன்முறையில் நடந்து கொள்ளுதல்.

* குழந்தைப் பெற்றவர்களுக்கு வாழ்துக் கூறுதல்

* திருமணம் செய்தவர்களுக்கு பரக்கத்திற்காக துஆச் செய்தல்

* சோதனைக் குள்ளாக்கப்பட்டவனுக்கு ஆறுதல் கூறுதல்.

* ஆடை, காலணிகள் போன்றவற்றை அணியும் போதும் கழற்றும் போதும் இஸ்லாம் கற்றுத் தந்த முறையில் செய்தல்

* கொடுக்கல் வாங்கலின் போது நீதமாக நடந்துக் கொள்ளுதல்

* சொல்லிலும் செயலிலும் உண்மையைக் கடைபிடித்தல்

* செய்வதிலும் விடுவதிலும் நம்பிக்கையைக் கடைபிடித்தல்

* கற்பை பேணி பாதுக் காத்துக்கொள்ளுதல்

* இருப்பதைக் கொண்டு திருப்தியடைதல்

* வெட்கம், வீரம், தர்மமம், தூய்மை, வாக்கு மாறாமை போன்ற நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுதல்

* தாழ்ந்த குணங்களை விட்டும் தவிர்ந்துக் கொள்ளுதல்.

* தேவையுடையவருக்கு உதவி செய்தல். அடியான் அவனது சகோதரனுக்கு உதவும் போது அல்லாஹ் அவனுக்கு உதவுகிறான்.


 
உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்.அபூ ஹுரைரா (ரலி) .
நூல்.புஹாரி : 7405 
 

எனவே சத்தியப்பாதையில் உத்தமர்களாக, உன்னதப்போதகர்களாக, நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் மக்களாக, நன்மைக்கும்,தீமைக்கும் வீத்தியாசம் அறிந்தவர்களாக, குடும்பம்,கோத்திரம் என்பதின் மனிப்பை உணர்ந்தவர்களாக, பொறுப்புக்களை வெறுப்பின்றி செய்யக்கூடியவர்களாக அல்லாஹ் நம் அனைவர்களையும் மாற்றியருள்வானாக
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
 

அஹமட் யஹ்யா,
ஹொரோவபதான,
அனுராதபுரம்,
SRI LANKA.
 

Saturday, January 5, 2013

நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதும், தூய்மையான நட்பும்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...
அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் அல்ஹம்துலில்லாஹ்.....
அன்புச்சகோதர சகோதரிகளே.....


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக மறுக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக்கொண்டார்.
(அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி),
நூல்: அபூதாவூத் 4061)


நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள் புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:71)

ஒவ்வொரு மனிதனும் இந்த உலக வாழ்க்கையில் பலவிதமான உறவுகளைப் பெறுகின்றான். ஒரே மனிதன் கணவனாகவும், மகனாகவும் தந்தையாகவும் நண்பனாகவும் இன்னும் பல நிலையைக் கொண்டவனாகவும் இருக்கிறான்.

இதுபோன்ற உறவுகளில் சிலதை அவன் பெறாவிட்டாலும் நட்பு என்ற உறவையாவது பெற்றிருப்பான். ஏனென்றால் சிறியவர்கள் பெரியவர்கள் கொடியவர்கள் நல்லவர்கள் ஆகிய அனைவரும் யாரையாவது ஒருவரை நண்பர்களாக தேர்வுசெய்யாமல் இருப்பதில்லை.


* நல்ல நண்பனை தேர்வு செய்வதற்கு முன்னால்...நல்லவர்களை நண்பர்களாக்குதல்.
* அல்லாஹ்விற்காக நட்பு வைத்தல்.மேலான ஒரு இபாதத்.
* உயிர் காப்பான் தோழன். இதுக்கு அர்த்தம் உலகம் அறிந்த உண்மை.
* நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல். இதுதான் இன்றைய காலத்தின் கருவூலம்.
* தவறு செய்தால் மன்னிப்பு கோர வேண்டும். இது மனிதனுக்கு நபியவர்கள் படிப்பித்த பாடம்.
* பிரதி உபகாரம் செய்ய வேண்டும். இந்த உபகாரம் மறுமைக்கு சாதனமாக அமையும்.
* நட்பை வெளிப்படுத்த வேண்டும். இது உள்ளச்சத்தோடு சம்பந்தப்பட்டது.
* குறைகளை துருவித் துருவி ஆராயக்கூடாது. இதுதான் மனிதனின் கேவளமான செயல்..இன்ஷா அல்லாஹ் தவிர்நது கொள்வோம்.
* ஏமாற்றக்கூடாது. ஏமாற்றமும், தன்னை ஏமாறும் நிலையும் வேப்பண்ணையைப் போன்றது.
* கோபம் கொள்ளக்கூடாது. கோபத்தால் விளையும் பயிர்தான் நாஷாம் என்ற வழி.
* மானத்துடன் விளையடக்கூடாது. மானம் என்பது மகத்தான ஒன்று இந்த விஷயத்தில் தன்னைத் தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.
* பெருமையடிக்கக் கூடாது. பெருமை என்ற நஞ்சுப்பொருள் நன்மை என்ற அச்சுப்பொருளை தின்று விடும்.
* நட்பை முறித்துவிடக் கூடாது. சேர வேண்டும் அல்லாஹ்வுக்காக, பிரிய வேண்டும் அல்லாஹ்வுக்காக.
* முதலில் நல்ல எண்ணத்தை மனதில் வித்திட வேண்டும். அந்த எண்ணம் என்னும் விதையில் இருந்து நற்செயல் என்னும் மரம் முளைக்கத் தொடங்கிவிடும்.
* நாம் செய்யும் குற்றங்களை எடுத்துச் சொல்லும் மனிதர்களிடம் நன்றியுணர்வு கொண்டவர்களாக நடந்து கொள்ள வேண்டும். அவரால் தான் நம்மைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறோம்.
* கண்களால் நல்லதையே பாருங்கள். காதுகள் நல்ல விஷயத்தை மட்டும் கேட்கட்டும். மனம் எப்போதும் நல்லதையே சிந்திக்கட்டும்.
* செல்வத்தில் பெருமை கொள்ளாதீர்கள். தேவைகளை குறைத்துக் கொண்டு இருப்பதில் திருப்தி காணுங்கள்

இன்ஷா அல்லாஹ்..... இவைகளே ஒரு நல்ல நட்புக்கும்,குடும்பத்திற்கும், கோத்திரங்களுக்கும்,உறவுகளுக்கும்,சின்னஞ் சிறார்களுக்கும் வெளிச்சம் தரும் செயல்களே... மறவாதீர்கள், மறுக்காதீர்கள் என்றைக்கும் இப்போதனையை நெஞ்சினில் அழமாக பதித்து வைத்துக்கொள்ளுங்கள். 
 

"நட்பு என்பது பாராட்டும் குணம் கொண்டதாக இருக்கவேண்டும். நம் நண்பனை நல்வழிப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும்"

இந்த உலகின் சக்தி வாய்ந்த அம்சங்களில் ஒன்று நட்பு. ஒரு மனிதனின் மனநிலை கட்டமைப்பில் நட்பும் முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்களின் ஆளுமையில் நண்பர்களுக்கு பங்குள்ளது. சமயத்தில், குடும்பமும், உறவினர்களும் செய்ய முடியாதவற்றை நண்பர்கள் செய்து விடுகிறார்கள்.

ஒரு நல்ல நண்பன், எப்போதுமே, தனது சக நண்பனின் முன்னேற்றம் மற்றும் நலன் சார்ந்த விஷயங்களிலேயே அக்கறையாக இருப்பான். தனது நண்பன் தீமைகளின் பக்கம் சென்றால்கூட, புத்திசொல்லி திருத்த முயற்சிப்பான். ஒருவேளை, தான் ஏதேனும் கெட்டப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாலும்கூட, தன் நண்பன் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகாதபடி தடுப்பான். அந்த நல்ல நண்பன் சீரிய சிந்தனைக்கும், அறிவு முன்னேற்றத்திற்கும், ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கும் எப்போதும் துணை நிற்பான். அவனும் உயர்வதோடு, தன்னை சார்ந்தவன் உயரவும் அவன் காரணமாக இருப்பான்.

இன்று பெரும்பாலானவர்களின் அன்பு பாரபட்சம் பார்த்தே ஏற்படுகிறது. தேவையானபோது தொடர்பு கொள்வதும், தேவைக்காக பழகுவதும், கூடிப் பொழுதுபோக்குவதுமே நட்பென்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நிஜத்தில் அது நட்புமல்ல, அன்புமல்ல, வெறும் சுயநலமே!

“பிறரைப் பார்த்து நீ புன்னகைப்பது கூட ஒரு அறச்செயல்” ஆனால் வாய்விட்டுச் சிரித்தாலோ, அனைவரிடமும் சிரித்துப் பழகினாலோ சமூக வழக்கில் தப்பாய்ப் பார்க்கும் கண்ணோட்டம் பரவி இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாமே வலியவந்து எல்லோரிடமும் சிரித்துப் பழகி தொடர்ந்து அன்புறவில் ஈடுபடுவது சாத்தியமற்ற ஒன்றுதான். இருந்தாலும் நாம் எத்தனை பேருடன் நட்புறவுடன் இருக்கிறோமோ, அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்ததற்கான அடையாளம்.

`என்னை நேசிப்பவரை நான் நேசிப்பேன், எனக்கு உதவி செய்தவருக்கு நான் உதவி செய்வேன்’ என்பதுவே பலரின் எழுதப்படாத அன்பு இலக்கணம். பழிக்குப் பழி என்பதற்கும், இதற்கும் வித்தியாசமே இல்லை.

நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது. எனவே நம்முடைய இரு உலக வாழ்க்கையும் சிறப்புடன் விளங்க நல்ல நண்பர்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதை நபி(ஸல்) அவர்கள் கூறிக்காட்டினார்கள்.

நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)
நூல் : புகாரி (2101)


தீமையான காரியங்களில் நன்பனுக்க ஒத்துப் போவது கூடாது. நன்பன் நன்மையான காரியங்களைச் செய்ய மறந்து விட்டால் உண்மை நன்பன் அவனுக்கு ஞாபகமூட்ட வேண்டும். நண்பன் தொழ மறந்து விட்டால் இதை அவனிடத்தில் தெரியப்படுத்தி அவனை தொழ வைக்க வேண்டும். நண்பன் நல்ல காரியங்களைச் செய்தால் அவனுடன் சேர்ந்து நாமும் செயல்பட வேண்டும்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (4655)


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தோழர்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் அவர்களில் யார் தன்னுடைய தோழரிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ அவராவார்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: திர்மிதி 1867)


என் விஷயத்தில் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும் என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்பவர்களுக்கும் எனது பிரியும் உறுதியாகி விட்டது என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆத் (ரலி)
நூல் : அஹ்மத் (21114)


(அல்லாஹ்வின் தூதரே) ஒரு மனிதர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால் (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது. நபி (ஸல்)அவர்கள்மனிதன் யார் மீது அன்பு வைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான் என்று கூறினார்கள். 
(அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரி 6170)


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
''நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப் படும்) நிலையான நற்செயலே ஆகும்.''
(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 6464)
 

சொல்லிலும்,செயலிலும் இஸ்லாத்தைக் கலப்போம்.
சமூக உறவில் சகோதரத்துவத்தை வளர்ப்போம்.
இன்ஷா அல்லாஹ்......

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
*****************************************

அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.