Powered By Blogger

Thursday, January 3, 2013

சூரத்துல் பாத்திஹா

                       
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி      வபரக்காத்துஹூ...
                           அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் அல்ஹம்துலில்லாஹ்.....

                                                  சூரத்துல் பாத்திஹா.

                                     அத்தியாயம்- 1

                                      வசனங்கள் - 7


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கினிறேன்.

அதிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் பகழும். (1:1)

(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன். (1:2)

தீர்ப்பு நாளின் அதிபதியும் அவனே (1:3)

(அல்லாஹ்வே!) நாம் உன்னையே வணங்குகின்றோம், உன்னிடமே உதவியும் தேடுகின்றோம். (1:4)

நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக!. (1:5)

(அது) நீ யார் மீது அருள் புரிந்தாயோ அவர்களின் வழி. (அது உன்) கோபத்துக்குள்ளானவர்களினதோ , வழிதவறியவர்களினதோ வழி அல்ல. (1:6,7)
 

ஸூரத்துல் பாத்திஹாவின் சிறப்பு:

‘குர்ஆன் உடைய ஸூராக்களிலேயே மிக்க மகத்துவம் வாய்ந்ததாகும். திரும்ப ஓதப்படக் கூடிய ஏழு ஆயத்துகளைக் கொண்டதும் மகத்தான குர்ஆனுமாகும்’ என்று ஒரு ஹதீஸின் வாசகம்.

‘சூரத்துல் பாத்திஹாவாகிறது அர்ஷுகு கீழுள்ள (பிரத்தியேக) இடத்திலிருந்து எனக்கு வழங்கப்பட்டுள்ளது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘ஒரு தடவை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் வருகை தந்து அமர்ந்திருந்தார்கள். அப்போது மேலிருந்து (வானத்திலிருந்து) ஒரு பெரும் சப்தத்தைக் கேட்டார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கள் தலையை உயர்த்திப் பார்த்து, ‘இது வானத்திலுள்ள கதவொன்று திறக்கப்படுகின்ற சப்தம். அதன் வழியாக ஒரு மகலக்கானவன் பூமிக்கு இறங்கி வருகிறார். அவர்கள் இதுவரை பூமிக்கு வந்ததே கிடையாது என்று கூறினார்கள். அதற்குள் அந்த மலக்கானவர் அங்கு வந்து ஸலாம் கூறி விட்டு, ‘இரண்டு ஒளிகளைக்கொண்டு நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள். அவ்விரண்டு ஒளிகளும் உங்களுக்கு முன்னுள்ள எந்த நபிக்கும் கொடுக்கப்படவில்லை. அவை ஸூரத்துல் பாத்திஹாவும், ஸூரத்துல் பகராவுடைய கடைசி இரண்டு ஆயத்துமாகும். அவ்விரண்டிலிருந்து ஓர் எழுத்தை நீங்கள் ஓதினாலும் அதற்குரிய நன்மை கொடுக்கப்படும்’ என்று கூறினார்.

"குர்ஆன் ஓதப்பட்டால் அதைச் செவி தாழ்த்திக் கேளுங்கள். மவுனமாக இருங்கள்" (அல்குர்ஆன் 7:204)என இறைவன் கூறியுள்ளான்.

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.


அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,
அனுராதபுரம்.
SRI LANKA.
 

1 comment:

  1. சூரத்துல் பாத்திஹாவிற்கு வேறு பெயர்கள் உண்டா?

    ReplyDelete