Powered By Blogger

Monday, December 17, 2012

அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன்

                                                       
 
                                      அத்தியாயம் : 55

                                               மொத்த வசனங்கள் : 78

                              அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன்

அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.

இந்த அர்ரஹ்மான் சூராவில் மனிதன் படைக்கப்பட்டது்.
மனிதனுக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கப்பட்டதும்.
மனிதனுக்கு எல்லா வசதிகளையும் அமைத்துக் கொடுக்கப்பட்டதும்.
மனிதனுக்கு நரகத்தின் தன்மைகள் அதன் வர்ணங்கள் சொல்லப்பட்டதும்.
மனிதனுக்கு சுவனத்தின் இன்பத்தைப் பற்றி சொல்லப்பட்டதும்.
மனிதனுக்கு சுவர்க்கத்தில் கனிகளும்,கண்ணிகளும் உண்டு என சொல்லப்பட்டதும்.
மனிதனுக்கு 30 இடத்தில் அதே கேள்வி கேட்க்கப்பட்டதும்.
இதே சூராவில்தான் இத்துணையும் சொள்ளப்பட்டுள்ளது..

இவைகள் நிறைந்த இந்த சூரா முழுமையாக மனிதன் சிந்திக்க முழு வசதிகளும் நிறைந்த சூராவாகும்.. இன்ஷா அல்லாஹ் படிப்போம்,செயல்படுவோம், சுவனம் நுழைவோம்.

இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அர்ரஹ்மான் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதற்குப் பெயராக ஆக்கப்பட்டது.


1- அளவற்ற அருளாளன்.

2- இக்குர்ஆனை அவனே கற்றுக்கொடுத்தான்.

3- அவனே மனிதனைப் படைத்தான்.

4- அவனுக்குப் (பேச்சுத்) தெளிவையும் அவனே கற்றுக் கொடுத்தான்.

5- சூரியனும்,சந்திரனும் கணக்கின் படி (இயங்குகின்றன.)

6- இன்னும் செடி,கொடிகளும்,மரங்களும் (அவனுக்கே) சிரம்பணிகின்றன.

7- 8 இன்னும் அவனே வானத்தை உயர்த்தினான். நீங்கள் நிறுவையில் வரம்பு மீறாதிருப்பதற்காக தராசையும் ஏற்படுத்தினான்.

9- இன்னும் நீங்கள் நிறுவையை நீதியாக நிலைநாட்டுங்கள். இன்னும் நிறுவையில் குறையு செய்து விடாதீர்கள்.

10- மேலும் பூமியை மனிதர்களுக்காக அவனே ஏற்படுத்தினான்.

11- அதிலே பழங்களும், பாளைகளுடைய பேரித்தம் மரங்களும் இருக்கின்றன.

12- இன்னும் தொலியுடைய தானியமும், நறுமணமுள்ள செடியும் இருக்கின்றன.

13- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

14- சுட்ட மண்பாண்டம் போன்ற(தட்டினால்)ஓசை வரக்கூடிய களிமண்ணினால்(முதல்) மனிதனை அவன் படைத்தான்.

15- இன்னும் அவன் ஜின்னை நெருப்புக் கொழுந்திலிருந்து படைத்தான்.

16- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

17- (அவனே) இரு கிழக்கினதும் இரட்சகன். மேலும் இரு மேற்கினதும் இரட்சகன்.

18- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

19- அவனே இரு கடல்களையும் ஒன்றுடன் ஒன்று சந்திக்குமாறு விட்டு விடுகிறான்.

20- ஒன்றையொன்று தாண்டமுடியாத திரை அவ்விரண்டுக்குமிடையில் இருக்கின்றது.

21- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

22- அவ்விரம்டிலிருந்தும் முத்தும்,பவளமும் வெளியாகின்றன.

23- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

24- கடலில் செல்லும் மலைகளைப் போன்ற உயர்ந்த கப்பல்களும் அவனுக்கே உரியன.

25- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

26- (பூமியாகிய) அதன்மீதுள்ள அனைத்தும் அழியக் கூடியதே.!

27- மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இரட்சகனின்
(சங்கையான) முகமே நிலைத்திருக்கும்.

28- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

29- வானங்கள் மற்றும் பூமியிலுள்ளோர் அவனிடமே (தனது தேவைகளைக்) கேட்கின்றனர். அவன் ஒவ்வொரு நாளும் காரியத்திலேயே இருக்கிறான்.

30- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

31- மனு,ஜின் ஆகிய இரு கூட்டத்தினரே! வெகு விரைவில் (விசாரனைக்கான நேரத்தை) உங்களுக்கு ஒதுக்குவோம்.

32- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

33- மனு,ஜின் கூட்டத்தினரே! வானங்கள், மற்றும் பூமியின் ஓரங்களைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின் நீங்கள் கடந்து செல்லுங்கள். வல்லமையுடனேயன்றி நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.

34- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

35- நெருப்புச் சுவாலையும்,புகையும் உங்கள் இரு சாரார் மீதும் அனுப்பப்படும். அப்போது நீங்கள் உதவி பெற மாட்டீர்கள்.

36- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

37- வானம் பிளக்கும் போது அது எண்ணெய் போன்ற ரோஜா நிறமாகி விடும்.

38- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

39- அந்நாளில் மனிதனோ,ஜின்னோ அவரவரது பாவம் குறித்து (தெளிவுபெறுவதற்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்.

40- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

41- குற்றவளிகள் அவர்களின் அடையாளங்களைக் கொண்டே அறியப்படுவார்கள். எனவே முன்நெற்றி முடிகளையும், பாதங்களையும் கொண்டு அவர்கள் பிடிக்கப்படுவார்கள்.

42- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

43- இதுவே குற்றவாளிகள் பொய்ப்பித்துக் கொண்டிருந்த நரகமாகும். (எனக் கூறப்படும்.)

44- அவர்கள் இதற்கிடையிலும் , கடுமையாகக் கொதிக்கும் நீருக்கிடையிலும் சுற்றுவார்கள்.

45- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

46- யார் தனது இரட்சகன் முன்நிற்பதை அஞ்சினாரோ அவருக்கு இரு சுவனச் சோலைகள் உள்ளன.

47- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

48- அவை இரண்டும் அடர்ந்த கிளைகளையுடையன.

49- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

50- அவ்விரண்டிலும் இரு நீரூற்றுக்கள் ஓடிக் கொண்டிருக்கும்.

51- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

52- அவ்விரண்டிலுமுள்ள ஒவெவொரு கனி வர்க்கத்திலும் இரு வகை உள்ளன.

53- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

54- அவர்கள் விரிப்புகள் மீது சாய்ந்தவர்களாக இருப்பர். அதன் உற்பகுதிகள் "இஸ்தப்ரக்" எனும் பட்டினால் ஆனது. இன்னும் அவ்விரு சுவனச் சோலைகளின் கனிகள் (கொய்வதற்கு) சமீபமாக இருக்கும்.

55- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

56- அவற்றில் பார்வை தாழ்த்திய கண்ணழகிகளும் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனோ ,ஜின்னோ அவர்களைத் தீண்டியதில்லை.

57- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

58- அவர்கள் முத்தையும்,பவளத்தையும் போன்று இருப்பார்கள்.

59- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

60- நன்மைக்குக் கூலி நன்மையன்றி வேரென்ன?

61- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

62- மேலும் அவ்விரண்டும் அல்லாத(வேறு) சுவனச் சோலைகளும் உள்ளன.

63- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

64- அவ்விரண்டும் கரும் பச்சை நிறமுடையவை.

65- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

66- அவ்விரண்டிலும் பொங்கி வழியும் இரு நீரூற்றுகள் உள்ளன.

67- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

68- அவ்விரண்டிலும் கனியும், பேரித்தையும்,மாதுளையும் உள்ளன.

69- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

70- அவற்றில் அழகிய நற்குணமுள்ள கன்னிகளும் இருப்பார்கள்.

71- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

72- (அவர்கள்) கூடாரங்களில் மறைத்து வைக்கப்பட்ட வெண்மையான கண்ணழகிகளாவர்.

73- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

74- இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனோ,ஜின்னோ அவர்களைத் தீண்டியதில்லை.

75- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

76- அவர்கள் பச்சை நிறக் கம்பளங்களின் மீதும், அழகான விரிப்புக்களின் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

77- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

78- மகத்துவமும், கண்ணியமுமுடைய உமது இரட்சகனின் பெயர் பாக்கியமுடையதாகி விட்டது.

((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((^^^^^^^^^^^)))))))))))))))))))))))))))))))))))))))))))))))
அஹமட் யஹ்யா,
ஹொரோவபதான,
அனுராதபுரம்.                                                            
SRI LANKA.
((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((^^^^^^^^^^^^^))))))))))))))))))))))))))))))))))))))))))))))
 
இறைவன் அனைத்து படைப்பினங்களையும்விட மனிதர்களை மட்டுமே மிகச் சிறப்பாகப் படைத்துள்ளான்.

அதாவது, உலோக இனத்தைவிட தாவர இனம் சிறந்தது. தாவர இனத்தைவிட, அனைத்து உயிரினங்களும் சிறந்தவை. அனைத்து உயிரினங்களை விட, அல்லாஹ் மனிதர்களை மிக உயர்வாகவும், மிகச் சிறப்பாகவும் படைத்துள்ளான்.

இப்படிப்பட்ட உயர்வுக்கு ஏற்றபடி மனித வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைக் கண்டு பிடிக்கும் நல்லறிவையும், ஆற்றலையும், ஒன்றை ஊகித்துணரும் தன்மையையும், இம்மை - மறுமை பற்றிய சிந்தனையையும், ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான வாழ்வாதாரங்கள் அனைத்தையும் படைத்துள்ளான் அல்லாஹ்.

""அல்லாஹ் ஒருவன்; மனிதர்களை எதன் மீது இயற்கையாகப் படைத்தானோ, அத்தகைய அல்லாஹ்வின் இயற்கையைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதன் மீதே மனிதர்களை இயற்கையாக அமைத்துள்ளான் (அல்குர் ஆன்: 30:30)''.

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருளாதாரம் அவசியம் தேவை என்பதை உணர்ந்த இறைவன் அதற்கான வழி வகைகளை அளித்துள்ளான். இறைவனின் சக்திக்கு ஏற்றபடிதான் மனிதனின் செயல்கள் உருவாகின்றன.
அன்பு ஒன்றினால்தான் மனிதன் முழு மனிதனாகின்றான். அவனது உள்ளத்தின் ஆழத்திலே புதைந்து கிடக்கின்ற நீண்ட ஆசைகளை, தேவைகளை நிறைவேற்றக் கூடியது அன்பு மட்டுமே.


அல்லாஹ் மன்னிப்பவன் குர்ஆன் கூறும் பிராத்தனைகள்



بِـــــــــــــــــــــــسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْم
  •  அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயர் கொண்டு ஆரம்பபம் செய்கின்றேன்.
 
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்து விடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இந்த நபியையும் (முஹம்மதையும்) அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் இழிவு படுத்தாத நாளில் அவர்களது ஒளி அவர்கள் முன்னேயும் வலப்புறமும் விரைந்து செல்லும். எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.(66:8)

رَبَّنَا أَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

எங்கள் இறைவனே! எங்களுக்குஇ எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன். (66:8
 
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ وَلاَ تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاًّ لِلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَحِيْمٌ

எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன். (59:10
 
رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصَّالِحِيْنَ
என் இறைவனே! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக! (27:19
 
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَاأَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (2:286


اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِالْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلاَ الضَّـــالِيْنَ.
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்,உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம், நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.  (1:5-7)
 
رَبَّنَــــا تَقَبَّلْ مِـــنَّا  اِنَّــكَ اَنْــتَ السَّمِيْعُ الْعَظِيْمُ وَتُبْ عَلَيْنَا اِنَّــكَ اَنْتَ التَّوَّابُ الــرَّحِيمُ.
எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக! நீச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனும், அறிபவனாகவும் இருக்கின்றாய். எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக நீச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவில்லா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.(2;127,128)


رَبَّــنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي اْلاَخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار
எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக.! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக.!  (2:201)

 رَبَّــنَا أفْرِغْ عَلَـــيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامِنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَفِرِيْنَ.
எங்கள் இறைவனே! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக.(2:250)   
 
سَمِعْنَــا وَأَطَعْنَــا غُفْـــرَانَكَ رَبَّـــنَا وَاِلَيْـــكَ الْمَصِــيْرُ.
எங்கள் இறைவனே! (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம். எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம். (நாங்கள்) மீளுவது உன்னிடமே தான். (2:285)    
 
رَبَّــنَا لاَ تَزِغْ قُلُوْبَنَا بَعْدَ اذْ هَدَيْتَنــَا وَهَبْلَنَــا  مِنْ لَّدُنْكَ رَحْمَةً  اِنَّكَ اَنْتَ الْوَهَّــابُ.
எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழியைக் காட்டிய பின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து  எங்களுக்கு (ரஹ்மத் எனும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!.(3:8)   
 

رَبّــنَا آمَنَّا بِمَا أَنَزَلْتَ وَاتَّبَعْنــَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ.
எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம், எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக.(3:53) 

رَبَّــنَا ظَلَمْنَــا أَنْفُسَنــَا وَاِنْ لَّمْ تَغْفِرْلَنَا وَتَرَحَمْنَا لَنَكُنَنَّ مِنَ الْخَــاسِرِيْنَ.
எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்.(7:23) 



அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,
அனுராதபுரம்,
SRI LANKA.