Powered By Blogger

Monday, December 17, 2012

அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன்

                                                       
 
                                      அத்தியாயம் : 55

                                               மொத்த வசனங்கள் : 78

                              அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன்

அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.

இந்த அர்ரஹ்மான் சூராவில் மனிதன் படைக்கப்பட்டது்.
மனிதனுக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கப்பட்டதும்.
மனிதனுக்கு எல்லா வசதிகளையும் அமைத்துக் கொடுக்கப்பட்டதும்.
மனிதனுக்கு நரகத்தின் தன்மைகள் அதன் வர்ணங்கள் சொல்லப்பட்டதும்.
மனிதனுக்கு சுவனத்தின் இன்பத்தைப் பற்றி சொல்லப்பட்டதும்.
மனிதனுக்கு சுவர்க்கத்தில் கனிகளும்,கண்ணிகளும் உண்டு என சொல்லப்பட்டதும்.
மனிதனுக்கு 30 இடத்தில் அதே கேள்வி கேட்க்கப்பட்டதும்.
இதே சூராவில்தான் இத்துணையும் சொள்ளப்பட்டுள்ளது..

இவைகள் நிறைந்த இந்த சூரா முழுமையாக மனிதன் சிந்திக்க முழு வசதிகளும் நிறைந்த சூராவாகும்.. இன்ஷா அல்லாஹ் படிப்போம்,செயல்படுவோம், சுவனம் நுழைவோம்.

இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அர்ரஹ்மான் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதற்குப் பெயராக ஆக்கப்பட்டது.


1- அளவற்ற அருளாளன்.

2- இக்குர்ஆனை அவனே கற்றுக்கொடுத்தான்.

3- அவனே மனிதனைப் படைத்தான்.

4- அவனுக்குப் (பேச்சுத்) தெளிவையும் அவனே கற்றுக் கொடுத்தான்.

5- சூரியனும்,சந்திரனும் கணக்கின் படி (இயங்குகின்றன.)

6- இன்னும் செடி,கொடிகளும்,மரங்களும் (அவனுக்கே) சிரம்பணிகின்றன.

7- 8 இன்னும் அவனே வானத்தை உயர்த்தினான். நீங்கள் நிறுவையில் வரம்பு மீறாதிருப்பதற்காக தராசையும் ஏற்படுத்தினான்.

9- இன்னும் நீங்கள் நிறுவையை நீதியாக நிலைநாட்டுங்கள். இன்னும் நிறுவையில் குறையு செய்து விடாதீர்கள்.

10- மேலும் பூமியை மனிதர்களுக்காக அவனே ஏற்படுத்தினான்.

11- அதிலே பழங்களும், பாளைகளுடைய பேரித்தம் மரங்களும் இருக்கின்றன.

12- இன்னும் தொலியுடைய தானியமும், நறுமணமுள்ள செடியும் இருக்கின்றன.

13- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

14- சுட்ட மண்பாண்டம் போன்ற(தட்டினால்)ஓசை வரக்கூடிய களிமண்ணினால்(முதல்) மனிதனை அவன் படைத்தான்.

15- இன்னும் அவன் ஜின்னை நெருப்புக் கொழுந்திலிருந்து படைத்தான்.

16- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

17- (அவனே) இரு கிழக்கினதும் இரட்சகன். மேலும் இரு மேற்கினதும் இரட்சகன்.

18- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

19- அவனே இரு கடல்களையும் ஒன்றுடன் ஒன்று சந்திக்குமாறு விட்டு விடுகிறான்.

20- ஒன்றையொன்று தாண்டமுடியாத திரை அவ்விரண்டுக்குமிடையில் இருக்கின்றது.

21- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

22- அவ்விரம்டிலிருந்தும் முத்தும்,பவளமும் வெளியாகின்றன.

23- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

24- கடலில் செல்லும் மலைகளைப் போன்ற உயர்ந்த கப்பல்களும் அவனுக்கே உரியன.

25- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

26- (பூமியாகிய) அதன்மீதுள்ள அனைத்தும் அழியக் கூடியதே.!

27- மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இரட்சகனின்
(சங்கையான) முகமே நிலைத்திருக்கும்.

28- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

29- வானங்கள் மற்றும் பூமியிலுள்ளோர் அவனிடமே (தனது தேவைகளைக்) கேட்கின்றனர். அவன் ஒவ்வொரு நாளும் காரியத்திலேயே இருக்கிறான்.

30- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

31- மனு,ஜின் ஆகிய இரு கூட்டத்தினரே! வெகு விரைவில் (விசாரனைக்கான நேரத்தை) உங்களுக்கு ஒதுக்குவோம்.

32- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

33- மனு,ஜின் கூட்டத்தினரே! வானங்கள், மற்றும் பூமியின் ஓரங்களைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின் நீங்கள் கடந்து செல்லுங்கள். வல்லமையுடனேயன்றி நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.

34- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

35- நெருப்புச் சுவாலையும்,புகையும் உங்கள் இரு சாரார் மீதும் அனுப்பப்படும். அப்போது நீங்கள் உதவி பெற மாட்டீர்கள்.

36- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

37- வானம் பிளக்கும் போது அது எண்ணெய் போன்ற ரோஜா நிறமாகி விடும்.

38- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

39- அந்நாளில் மனிதனோ,ஜின்னோ அவரவரது பாவம் குறித்து (தெளிவுபெறுவதற்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்.

40- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

41- குற்றவளிகள் அவர்களின் அடையாளங்களைக் கொண்டே அறியப்படுவார்கள். எனவே முன்நெற்றி முடிகளையும், பாதங்களையும் கொண்டு அவர்கள் பிடிக்கப்படுவார்கள்.

42- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

43- இதுவே குற்றவாளிகள் பொய்ப்பித்துக் கொண்டிருந்த நரகமாகும். (எனக் கூறப்படும்.)

44- அவர்கள் இதற்கிடையிலும் , கடுமையாகக் கொதிக்கும் நீருக்கிடையிலும் சுற்றுவார்கள்.

45- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

46- யார் தனது இரட்சகன் முன்நிற்பதை அஞ்சினாரோ அவருக்கு இரு சுவனச் சோலைகள் உள்ளன.

47- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

48- அவை இரண்டும் அடர்ந்த கிளைகளையுடையன.

49- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

50- அவ்விரண்டிலும் இரு நீரூற்றுக்கள் ஓடிக் கொண்டிருக்கும்.

51- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

52- அவ்விரண்டிலுமுள்ள ஒவெவொரு கனி வர்க்கத்திலும் இரு வகை உள்ளன.

53- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

54- அவர்கள் விரிப்புகள் மீது சாய்ந்தவர்களாக இருப்பர். அதன் உற்பகுதிகள் "இஸ்தப்ரக்" எனும் பட்டினால் ஆனது. இன்னும் அவ்விரு சுவனச் சோலைகளின் கனிகள் (கொய்வதற்கு) சமீபமாக இருக்கும்.

55- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

56- அவற்றில் பார்வை தாழ்த்திய கண்ணழகிகளும் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனோ ,ஜின்னோ அவர்களைத் தீண்டியதில்லை.

57- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

58- அவர்கள் முத்தையும்,பவளத்தையும் போன்று இருப்பார்கள்.

59- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

60- நன்மைக்குக் கூலி நன்மையன்றி வேரென்ன?

61- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

62- மேலும் அவ்விரண்டும் அல்லாத(வேறு) சுவனச் சோலைகளும் உள்ளன.

63- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

64- அவ்விரண்டும் கரும் பச்சை நிறமுடையவை.

65- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

66- அவ்விரண்டிலும் பொங்கி வழியும் இரு நீரூற்றுகள் உள்ளன.

67- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

68- அவ்விரண்டிலும் கனியும், பேரித்தையும்,மாதுளையும் உள்ளன.

69- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

70- அவற்றில் அழகிய நற்குணமுள்ள கன்னிகளும் இருப்பார்கள்.

71- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

72- (அவர்கள்) கூடாரங்களில் மறைத்து வைக்கப்பட்ட வெண்மையான கண்ணழகிகளாவர்.

73- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

74- இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனோ,ஜின்னோ அவர்களைத் தீண்டியதில்லை.

75- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

76- அவர்கள் பச்சை நிறக் கம்பளங்களின் மீதும், அழகான விரிப்புக்களின் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

77- எனவே (மனு,ஜின், கூட்டதிதினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட் கொடைகளில் எதைப் பொய்ப்பிப்பீர்கள்.?

78- மகத்துவமும், கண்ணியமுமுடைய உமது இரட்சகனின் பெயர் பாக்கியமுடையதாகி விட்டது.

((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((^^^^^^^^^^^)))))))))))))))))))))))))))))))))))))))))))))))
அஹமட் யஹ்யா,
ஹொரோவபதான,
அனுராதபுரம்.                                                            
SRI LANKA.
((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((^^^^^^^^^^^^^))))))))))))))))))))))))))))))))))))))))))))))
 

No comments:

Post a Comment