Powered By Blogger

Wednesday, December 19, 2012

மனிதனின் சில உரிமைகள்.அண்டை வீட்டார்கள்

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ,
இரைவனுடைய வாழ்வெடுத்து நெடு நிலத்தைக் காற்பாதற்கு மறைவிடத்தை நிறையழித்த இறைவனுக்கே எல்லாப் புகழும் அல்ஹம்துலில்லாஹ்...அவன் பெயர் கொண்டு ..அண்டை வீட்டார் அவர்களோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பை இவ்விடதிதில் தரிசனம் செய்கின்றேன்.


அல்லாஹ் இந்த உலகிலே பல்கோடிப் படைப்பினங்களைப் படைத்து அதிலிம் சிறந்த மிகஉயர்ந்த படைப்பாக அல்லாஹ் மனிதனைப் படைத்து இருக்கின்றான்.இந்த மனிதனுக்கு அல்லாஹ் சில கடமைகளையும்,உரிமைகளையும் வழங்கியிருக்கின்றான்.

மனிதன் மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும்,உரிமைகளும். மனிதன் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், உரிமைகளையும்.
அல்லாஹ் மனிதனுக்குச் செய்ய வேண்டியகடமைகளையும்,
உரிமைகளையும்.
பெற்றார்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், உரிமைகளையும்.
பிள்ளைகள் பெற்றார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும்,
உரிமைகளையும்.
கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும்,
உரிமைகளையும்.
மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும்,
உரிமைகளையும்.

அல்லாஹ் ஏற்பாடு செய்திருக்கின்றான். இந்த உலகில் நாம் வாழ்வதற்காக அல்லாஹ் பல்வேறு பட்ட அருட்கொடைகளை எமக்கு தந்திருக்கின்றான். இதற்காக நாங்கள் அல்லாஹ்வுக்கு நன்றியுடைய மனிதர்களாக வாழ்ந்திருக்கின்றோமா? என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளே கேட்போமாயின் புரிந்து கொள்ள முடியும்.

எனவே மனிதன் மனிதனுக்குச் செய்ய வேண்டிய அவைகளில் அண்டை வீட்டாருடன் ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அதன் நன்மைகள் என்ன? அதன் தீமைகள் என்ன? என்பதை அல்குர்ஆனிலும், அல்ஹதீஸிலும் சில வற்றை இங்கு நோக்களாம் இன்ஷா அல்லாஹ்.


அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதை களுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன். 4:36)

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன். 51:56)

மக்களை விட்டும் உன் முகத்தை (பெருமையோடு) திருப்பாதே! பூமியில் செருக்காய் நடக்காதே! அகந்தையும் ஆணவமும் கொண்ட எவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(அல்குர்ஆன்.31:1
8)

உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்து விட்ட தன் சகோதரனின் இறச்சியை உண்ண விரும்புவாரா என்ன? நீங்களே அதை வெறுப்பீர்கள்.(அல்குர்ஆன்.49:1
2)

‘ஈமான் கொண்டவர்களே! எந்த ஆண்களும் மற்ற எந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒரு வேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். ஒரு வேளை இவர்கள் அவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம். நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தையைக் கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரர்கள். (அல்குர்ஆன்.49:11)

நம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் (பிறரைத்) துருவித்துருவி ஆராயாதீர்கள். (அல்குர்ஆன்.49:12)

நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு (அவர்கள் குற்றம் புரியாதிருக்கவே எவர்கள் துன்பம் அளிக்கின்றார்களோ அவர்கள் ஒரு மாபெரும் அவதூரையும் வெளிப்படையான பாவத்தின் விளைவையும் தம்மீது சுமந்து கொள்கிறார்கள். (அல்குரஆன்.33:58)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்! (அல்குர்ஆன் 47:33)
 

''அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி)
நூல்: புகாரீ (6014)
'அபூதரே! நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து! உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ர­லி)
நூல்: முஸ்­ம் (4758)
'

''முஸ்­லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ர­லி)
நூல்: புகாரீ (2566)

அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக் கைக் கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் (ஒன்று)நல்லதைப் பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்.அபூஹூரைரா(ரலி)
நூல்.புகாரி-6018

''அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி)
நூல்: புகாரீ (2259)

''எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! தமக்கு விரும்பியதை தன் அண்டை வீட்டாருக்கு அல்லது தன் சகோதரனுக்கு விரும்பாத வரை ஒரு அடியான் (உண்மையான) நம்பிக்கை கொண்டவனாக மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ர­லி)
நூல்: முஸ்­லிம் (71)

''தன் அண்டை வீட்டாரை விட்டு தான் (மட்டும்) வயிறு நிரம்ப ஒருவன் சாப்பிட மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ர­லி)
நூல்: அஹ்மத் (367)

''ஒருவர் தன் (வீட்டுச்) சுவரில் தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை பதிப்பதைத் தடுக்க வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ர­) சொல்­ விட்டு ''என்ன இது! உங்களை இதை (நபிகளாரின் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கின்றேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபி வாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்­க் கொண்டேயிருப்பேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அல்அஃரஜ்(ரலி)
நூல்: புகாரீ (2463)

நான் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ர­லி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் பின் மக்ரமா (ர­லி) அவர்கள் வந்து, தமது கையை எனது தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூராஃபிவு (ர­லி) அவர்கள் வந்து ''ஸஅதே! உமது வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக!'' எனக் கூறினார்கள். அதற்க ஸஅத் (ர­லி) அவர்கள் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்க மாட்டேன்'' என்றார்கள். அருகி­ருந்த மிஸ்வர் (ர­லி) அவர்கள், ஸஅத் (ர­லி) அவர்களிடம் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் வாங்கிக் கொள்ளத் தான் வேண்டும்'' என்றார்கள். அப்போது ஸஅத் (ர­லி) அவர்கள், ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! தவணை அடிப்டையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தர மாட்டேன்'' என்று கூறினார்கள். அதற்கு அபூராஃபிவு (ர­லி) அவர்கள் ''ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது. ''அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுறாவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்குக் கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக் காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்' என்று கூறி விட்டு ஸஅதுக்கே விற்றார்.
அறிவிப்பவர்: அம்ர் பின் ஷரீத்
நூல்: புகாரீ (2258)

''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தரவேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி),
நூல்: புகாரீ (5187)

''அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்'' என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். ''அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''எவனுடைய நாசவேலைகளி­ருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ர­லி),
நூல்: புகாரீ (6016)

எவனுடைய நாசவேலைகளி­ருந்து அண்டைவீட்டார் பாதுகாப்பு பெறவில்லை அவர் சுவர்க்கம் செல்லமுடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ர­லி),
நூல்: முஸ்­லிம் (73)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாக கருதப்படுகிறாள் ஆனால் அவள் அண்டைவீட்டாருக்கு தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'இவள் நரகில் இருப்பாள்' என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத்தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி),
நூல்: அஹ்மத் (9298)

ஒரு அடியானின் ஈமான் சரியாகாது, அவனுடைய உள்ளம் சரியாகும் வரை. அவனுடைய உள்ளம் சரியாகாது அவனுடைய நாவு சீராகும் வரை. யாருடை அண்டைவீட்டார் அவனின் நாசவேலையி­ருந்து பாதுகாப்புபெறவில்லையோ அந்த மனிதன் சுவர்க்கம் போக முடியாது என்று நபிகளார் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ர­லி),
நூல்: அஹ்மத் (12575)

நான் நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணைகற்பிப்பது'' என்று சொன்னார்கள். நான், ''நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்'' என்று சொல்­விட்டு ''பிறகு எது?'' என்று கேட்டேன். ''உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது'' என்று சொன்னார்கள். நான், ''பிறகு எது?'' என்று கேட்க, அவர்கள், ''உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ர­லி),
நூல்: புகாரீ (4477)

நீங்கள் விபச்சாரத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? என்று தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் தடைசெய்த ஒன்றாகும். இது மறுமைநாள்வரை ஹராமாகும் என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம்'' ஒருவன் பக்கத்து வீட்டு ஒரு பெண்ணிடம் விபச்சாரம் செய்வதை விட (மற்ற) பத்துபெண்களிடம் விபச்சாரம் செய்வது (தண்டனையில்) லேசானதாகும்'' என்று கூறினார்கள். திருட்டைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, 'அதை அல்லாஹ்வும் அவன் தூதரும் தடைசெய்துள்ளார்கள். எனவே அது ஹராமாகும்' என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஒருவன் பக்கத்து வீட்டில் திருடுவதை விட (மற்ற) பத்து வீட்டில் திருடுவது (தண்டனையில்) லேசானதாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அல்மிக்தாத் பின் அல்அஸ்வத் (ர­லி),
நூல்: அஹ்மத் (22734)



நண்பர்களில் அல்லாஹ்விடம் சிறந்தவர் தம் நண்பர்களிடம் சிறந்தவர்களாக இருப்பவர்களே! பக்கத்து வீட்டாரில் அல்லாஹ்விடம் சிறந்தவர், தம் பக்கது வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :அப்துல்லாஹ் பின் அம்ர் (ர­லி),
நூல்: திர்மிதீ (1867)

அன்பளிப்புச் செய்யுங்கள்! ஏனெனில் அன்பளிப்பு உள்ளத்தின் கோபத்தை போக்கிவிடும். ஓர் அண்டைவீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பின் துண்டை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­),
நூல்: திர்மிதீ (2056)

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,
அனுராதபுரம்.
SRI LANKA.
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((( 

No comments:

Post a Comment