Powered By Blogger

Monday, December 10, 2012

அல்குர்ஆன் ஓர் அறிமுகம்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.
அல்லாஹவின் திருநாமம் போற்றி ஆரம்பம் செய்கின்றேன்.
அல்ஹம்துலில்லாஹ்.

அல்குர்ஆன் ஓர் அறிமுகம் என்ற இச்சிரு குறிப்பை இந்த இடத்தில் தரிசனம்
செய்கின்றேன்.


பகுத்தறிவோடு மனிதனைப் படைத்த அல்லாஹ் அவனே தனக்குரிய வாழ்வியல் வழிமுறைகளை வகுத்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட வில்லை. நபிமார்களை அனுப்பி வழிகாட்டினான். ஓரிறைக் கொள்கையையும் மறுமை வாழ்வையும் போதித்து மக்களை வழி நடத்தக்
கூடிய வேத வெளிப்பாடுகளையும், அருளினான்.

இது குறித்து அல்குர்ஆனில்..."தூதர்களுக்குப் பின்னரும்,அல்லாஹ்வுக்கு எதிராகக் குற்றம் பிடிப்பதற்கு மனிதர்களுக்கு எவ்வித ஆதாரமும் இருக்கக்
கூடாது என்பதற்காக (மேலும் பல) தூதர்களை நன்மாராயம் கூறுவோராகவும்,
எச்சிப்போராகவும் அனுப்பி வைத்தோம். அல்லாஹ் யாவற்றையும்
மிகைத்தவனாகவும்,ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்." (4:165)

இந்த அடிப்படையில் காலத்தையும், நேரத்தையும்,சமூக முன்னேற்றங்களையும் அடிப்படையாகக் கொண்டு தூதர்கள் அனுப்பப்பட்டனர். இறுதி ரிஸாலத்திற்கான காலம் கனிந்த போது கடேசி
நபியாக முஹம்மத்(ஸல்)அவர்கள் அனுப்பப்பட்டார்கள். முன்னைய
நபிமார்கள் குறிப்பிட்ட கோத்திரம்,இனம்,மொழி,பிரதேசம் என்பன போன்ற
வரையறைக்குள் அனுப்பப்பட்டனர். ஆனால் இறுதித் தூதரோ இந்தக் 
குறுகியவட்டங்கள் அனைத்தையும் தாண்டி அகில உலக மனிதர்கள்
அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள்.

"மனிதர்களே நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்குமான அல்லாஹ்வின்
தூதராவேன். என்று (நபியே) நீர் கூறுவீராக.!"  (7:158)

அகில உலகத்துக்குமான தூதருக்கு வழங்கப்பட்ட வேத வெளிப்பாடும்
முழு மனித சமுதாயத்திற்கும் உரித்தாகவே இருந்தது.

"அகிலத்துக்கு எச்சரிக்கையாக இருப்பதற்காக (சத்தியத்தையும்,
அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக்கூடிய (இவ்வேதத்)தை தன் அடியார்
மீது இறக்கி வைத்தவன் பாக்கியமுடையவன்." (25:1)

இவ்வகையில் இறுதி வேதம் என்பதாலும்,அகில உலகத்துக்குமுரியது
என்பதாலும், இந்த வேதம் முன்னைய நபிமார்களின் சாரமாகவும், இனி
வரப்போகும் மனித சமூகம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும்
தீர்வு கூறக்கூடியதாகவும், மனித கரங்கள் உள் நுழைந்து மாசுபடுத்த
முடியாததாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் அமைதல் அவசியமாகும்.

இவ்வகையில் இக்குர்ஆன் முன்னைய நபிமார்களின் பிரச்சாரம்
குறித்தும்,அதன் அடிப்படை குறித்தும் பேசுகின்றது. 
"அவன் எதனை நூஹூக்கு உபதேசித்தானோ அதனையே உங்களுக்கும்
மார்க்கமாக ஆக்கினான். மார்க்கத்தை நிலைநாட்டுங்கள். அதில் பிரிந்து
விடாதீர்கள் . என்பதே உமக்கு நாம் வஹியாக அறிவித்ததும்,இப்றாஹீம்,
மூஸா,ஈஸா  ஆகியோருக்கு நாம் உபதேசித்ததுமாகும். நீங்கள் எதன்பால்
அழைக்கின்றீர்களோ அது இணை வைப்பாளர்களுக்கு பழுவாக இருக்கின்றது.
அல்லாஹ் தான் நாடுவோரைத் தன்பால் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான்.
மேலும் தன்னிடம் மீளுவோரை நேர்வழியில் செலுத்துகின்றான்." (42:13)

இவ்வாறே இவ்வேதம் கொள்கை. கோட்பாடு, வணக்க வழிபாடு, வாழ்வியல் 
நெறிமுறை, அறிவியல், ஆன்மீகம்,அரசியல் என்று அனைத்துத் துறைகளின்
அடிப்படைகளையும் தொட்டுச் செல்வதாக இவ்வேதம் அமைந்துள்ளது.

"அனைத்தையும் தெளிவுபடுத்தக் கூடியதாகவும், நேர்வழியாகவும்,
அருளாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் நாம் இவ்வேதத்தை
உம்மீது இறக்கி வைத்துள்ளோம்." (16:89)

நபிஸல்அவர்களது வருகை முதல் உலகம் அழியும் வரை வாழக்கூடிய
மக்களுக்கு இவ்வேதம்தான் வழிகாட்ட வேண்டும். இந்த வேதத்தில் மனித
கரங்கள் நுழைந்து அதன் புனிதத்தில் புழுதிவாரி இறைத்தால் இன்னொரு
நபிவந்து அதனை அகற்ற முடியாது. ஏனெனில் நபிஸல்அவர்களுக்குப்
பின்னர் வேறு நபி கிடையாது. எனவே முன்னைய வேதங்களுக்கு
ஏற்பட்ட இடைச் செருகல்கள் இதற்கு ஏற்படக் கடாது. இதனால் இதைப்
பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வே ஏற்றுக்கொண்டான்.

"நிச்சயமாக நாமே இவ்வேதத்தை இறக்கியுள்ளோம், இன்னும் நிச்சயமாக
நாமே அதைப் பாதுகாப்பவர்களாவோம்." (15:9)

அல்லாஹ்வின் இந்த வாக்குறுதி இன்று வரை நிறைவேறி வருவதைக்
காணலாம்.
எனவே அல்லாஹ்வின் அற்புத வேதம் அல்குர்ஆன்.
                 நோய் நிவாரணி அல்குர்ஆன்.
                 பிரச்சனைகளுக்கு தீர்வு அல்குர்ஆன்.
                 நேரான வழி அல்குர்ஆன்.
இந்தக் குர்ஆன் கூறும் வழியில் நாமும் செயல் பட்டு உண்மை முஃமின்களாக
அல்லாஹ் நமக்கு நல்லருள் புரிவானாக ...ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் 
ஆலமீன்.
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((******))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

அஹமட் யஹ்யா,
ஹொரோவபதான.
அனுராதபுரம்...SRI LANKA.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

No comments:

Post a Comment